சனியும் குருவும் ஆட்டிப்படைக்க காத்திருக்கும் நான்கு ராசிக்காரர்கள் யார் !! கோடி நன்மைகள் வந்து சேரும் யாருக்கெல்லாம் !!

ஆன்மீகம்

நான்கு ராசிக்காரர்கள் யார் ………

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் உங்க ராசி அதிபதி சூரியன் ராசிக்கு நான்கு மற்றும் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்க அதிபதி சூரியன் கேது, புதன் உடன் இணைந்துள்ளார். சூரியன் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுகிறது. மாணவர்களுக்கு தெளிவான திட்டமிடல் இருக்கும். பாடங்கள் புரிபடும். பண வரவு அதிகரிக்கும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும் தடைகள் தாண்டி முன்னேறுவீர்கள். சனியும் குருவும் இணைந்து ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் சுப செலவு ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். 24ஆம் தேதி வரை எட்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை.

பத்தாம் வீட்டில் ராகு இருக்கிறார். ராகுவின் மீது, குரு, சூரியன், புதன் பார்வை கிடைப்பதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். திருமண சுப காரியங்களை ஒத்திப்போடுவது நல்லது.
எந்த விசயம் செய்யும் போதும் கவனமாக இருக்கவும். செவ்வாய் ஆட்சி பெற்று அமரும் போது அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். மருத்துவ செலவுகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. வெளியூர் செல்லும் போதும் உணவில் கவனம் செலுத்துங்கள். காரமான எண்ணெய் அதிகம் உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் மாதம் காரணம் குருவின் பார்வை,செவ்வாயின் பார்வை கிடைக்கிறது. வேலை விசயத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். தடைகள் தாண்டி முன்னேறுவீர்கள். மனதிலும் உ டலிலும் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்க ராசி அதிபதி புதன் பத்தாம் வீட்டு அதிபதியும் புதன்தான். ராசி நாதன் நான்காம் வீட்டில் அமர்ந்து பத்தாம் வீட்டினை பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். திருமணம் சுப காரியங்களில் சில தடைகள் வரலாம் என்பதால் இந்த மாதம் சுப பேச்சுவார்த்தைகளை ஒத்திப்போடுவது நல்லது.

சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு உற்சாகம் அதிகரிக்கும். அமோக பணவரவு வந்தாலும் கூடுதல் செலவுகளும் வரும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களுக்கு செலவு செய்வீர்கள். குருவும் சனியும் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். டிசம்பர் மாதத்தில் வரவுகள் அதிகம் வந்தாலும் செலவுகளும் கூடவே சேர்ந்து வரும். எந்த முடிவு எடுத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு எடுக்கவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அ தி ர் ஷ் ட கரமான மாதமாக அமையப்போகிறது. சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். வேலையில் உங்களுக்கு உற்சாகம் கூடும். புதிய பதவிகள் தேடி வரும். வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். அ ர் த்தாஷ்டம சனியாக இருந்தாலும் நான்காம் வீட்டில் சனி வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சச மகா யோகம் கை கூடி வந்துள்ளது. குருவும் நான்காம் வீட்டில் சனியோடு இணைந்துள்ளதால் சனியினால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

உங்களுடைய உடல் நலத்திலும் கவனமாக இருப்பது நல்லது. மாத பிற்பகுதியில் சூரியனும்,புதனும் மூன்றாம் வீட்டிற்கு சஞ்சரிப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிறு பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. மாத பிற்பகுதியில் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு சாதகமான மாதம். மருத்துவ படிப்பு படிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி படிப்பதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். இந்த மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் தடை தாமதங்களை தாண்டி முன்னேறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ராசியில் இருக்கும் சூரியன், புதன், கேதுவினால் வேலையில் இருந்த சி க்கல்கள் நீங்கும். மனரீதியாகவும் உ டல் ரீதியாகவும் உற்சாகம் அதிகமாகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு புதிய புரமோசன் தேடி வரும். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மூன்றாம் வீட்டில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றனர்.பணவரவு அதிகமாக இருந்தாலும் செலவுகளும் வரும். பொருளாதார ரீதியாக இருந்த சிக்கல்கள் நீங்கும். குரு பார்வையில் உ டல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சகோதர சகோதரிகளின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.

செவ்வாய் உங்களுக்கு மாத இறுதியில் ஆறாம் வீட்டில் மறைகிறார். உங்கள் ராசியில் உள்ள புதன், சூரியன் இடப்பெயர்ச்சியாகி இரண்டாம் வீட்டில் மறைவது மாணவர்களுக்கு சாதகமாக அமையும். சுப காரியங்கள், திருமண பேச்சுவார்த்தைகளில் சில தடைகள் வந்தாலும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் கவலைப்பட வேண்டாம் குரு பலன் கைகூடி வந்துள்ளதால் தடைகள் தாண்டி முன்னேற்றத்தைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்களின் பிரச்சினைகளை சரி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *