மெட்ரோ ரயிலில் பயணிகளுடன் அமர்ந்து பயணம் செய்துவரும் அதிசய குரங்கு !! மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்படி குரங்கு செய்ததை பாருங்க !!

வைரல்

டெல்லி மெட்ரோ ரயிலில் சுத்தித் திரியும் குரங்கு ……

டெல்லி மெட்ரோ ரயில் குரங்கு ஒன்று குறும்புத்தனங்கள் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் கொரோனா தொற்று காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. இதனால் டெல்லி வாசிகள் அனைவரும் தங்கள் வழக்கமான வாழ்க்கையை மெட்ரோ ரயில் நிலையங்களில் மீண்டும் தொடங்கியுள்ளனர். இதனால் தினமும் வேலைக்கு செல்பவர்கள் உற்சாகமடைந்தனர்.

ஆனால் இந்த உணர்வு டெல்லியில் வசிக்கும் மனிதர்களுக்கு மட்டுமல்ல என்று சமீபத்திய வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. மெட்ரோ ரயில் நீண்ட நாட்களுக்கு பிறகு இயங்கிய நிலையில், ஒரு குரங்கு ரயில் மகிழ்ச்சியாக பயணம் செய்துள்ளது. இதுகுறித்த வீடியோவில் குரங்கு பயணிகளுடன் அமர்ந்து அமைதியாக பயணிப்பதை காண முடிந்தது. மேலும் அவ்வப்போது ஜன்னலுக்கு வெளியே எட்டி பார்த்து இயற்கையை ரசித்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில், மெட்ரோ ரயிலில் உள்ள தூண் போன்ற கம்பங்களை சுற்றி குதித்து மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருப்பதை காண முடிகிறது.

மெட்ரோவில் பயணித்த ஒரு பயணி இந்த குறும்புத்தனமான காட்சிகளை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ நிறைய பேரின் கவனத்தை ஈர்த்தது. செல்லப்பிராணிகளுக்கு கூட மெட்ரோவில் அனுமதி இல்லை என்றாலும், இந்த குரங்கு எவ்வாறு பயணம் செய்ய முடிந்தது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், குரங்கு மகிழ்ச்சியான பயணத்தின் போது செய்த வினோதமான செயல்கள் அடங்கிய வீடியோக்கள் பல நெட்டிசன்களை மகிழ்வித்தன.

மெட்ரோ ரயிலில் பயணிகளுடன் அமர்ந்து பயணம் செய்துவரும் அதிசய குரங்கு மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்படி குரங்கு செய்ததை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *