தாலி கழுத்திலேறும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் !! அ திர்ச்சியடைந்த மாப்பிளை ! வைரல் ஆகி வரும் திருமண காட்சி !!

விந்தை உலகம்

தமிழகத்தில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் காதலனுக்காக திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சூர் பகுதியில் உள்ள மட்டகண்டி கிராமத்தில், தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை பிரியதர்ஷினி என்பவர் திடீரென்று, தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை, என்னுடைய காதலர் இன்னும் அரைமணி நேரத்தில் வந்துவிடுவார் என்று கூறி திருமணத்தையே நிறுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த பெண்ணுக்கு இறுதியில் திருமணம் நடந்ததா? காதலன் வந்தாரா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது.இந்நிலையில், திருமண தினத்தன்று அன்று இரவு முழுவதும் தன்னுடைய காதலனுக்காக பிரியதர்ஷினி காத்திருக்க, அவருடைய சென்னை காதலன் வரவில்லை. இதையடுத்து தங்களது மகளை காரில் அழைத்துச்சென்ற மணமகளின் பெற்றோர்

அவரை லவ்டேல் என்று அழைக்கப்படும் சுற்றுலா பகுதியில் சாலையில் இறக்கிவிட்டு, இனி வீட்டிற்கு வரக்கூடாது என்று எச்சரித்து சென்றுவிட்டனர். திருமணத்துக்கு முன்பாக தான் அங்கு வந்து விடுவதாக வாக்குறுதி அளித்த காதலன் டாடா காட்டிய நிலையில் காதலனை தேடிச்சென்று கரம் பிடிப்பது என்ற லட்சியத்துடன்

அந்தப் பெண் சென்னைக்கு புறப்பட்டதாக அப்பகுதி கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே திருமணத்தை நிறுத்திய தங்களது மகளால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக, வேதனையடைந்த பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.

அதே நேரத்தில் மணப்பெண் பியதர்ஷினி காதலிக்கும் நபர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், முறைப்படி மனைவியை விவாகரத்து செய்து கொண்டால் மட்டுமே பியதர்ஷினியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளமுடியும் என்பதால் காதலனுக்காக அவர் காத்திருந்துள்ளார். ஆனால், அது கடைசி வரை நடக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *