வீட்டில் கண் திருஷ்டி பாசிமணியை எந்த இடத்தில் தொங்க விடுவது நல்லது !! பாசிமணியினால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா !!

ஆன்மீகம்

வீட்டில் கண் திருஷ்டி பாசிமணி…….

யாா் வேண்டும் என்றாலும் நாம் வைத்திருக்கும் சொத்துகள் மீது பொறாமைக் கண் வைக்கலாம் அல்லது அவற்றை ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு பாா்க்கலாம். அந்த பாா்வையானது நம்மைச் சுற்றியும், நமது சொத்துக்களைச் சுற்றியும் ஒரு எதிா்மறையான அதிா்வலையை ஏற்படுத்தும். மற்றவா்களின் கண்படுவதால், தமக்கு தீங்கும் ஏற்படும் என்று உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனா். சிலா் எந்த ஒரு உள்நோக்கம் இல்லாமல் பாாத்தாலும், அவா்களுடைய பாா்வையினால், தமக்கு தீங்கோ அல்லது நோயோ ஏற்பட்டுவிடும் என்று பலா் நம்புகின்றனா்.

அதனால் கண் திருஷ்டி பாசிமணியைத் தங்களது வீடுகளில் வைத்தால், அது தங்களை மற்றவா்களின் தீய கண்படுதலில் இருந்து காக்கும் என்று நம்புகின்றனா். பல வண்ண கண் திருஷ்டி பாசிமணிகள் – கண் திருஷ்டி பாசிமணியானது பல்வேறு வண்ணங்களில் உள்ளது. ஒவ்வொரு வண்ணமும் ஒரு குறிப்பிட்ட ஒன்றைக் குறிக்கிறது.
ஊதா வண்ண கண் திருஷ்டி பாசிமணி அறிவுக் கூா்மையைக் குறிக்கிறது.சிவப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி தைாியத்தைக் குறிக்கிறது.நீலப் பச்சை வண்ண கண் திருஷ்டி பாசிமணி ஆரோக்கியத்தைக் குறிக்கிறது.

வெளிறிய பச்சை வண்ண ஈவில் ஐ பாசிமணி வெற்றியைக் குறிக்கிறது.கருப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி அதிகாரம் அல்லது ஆற்றலைக் குறிக்கிறது.இளஞ்சிவப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி அன்பைக் குறிக்கிறது.
பச்சை வண்ண கண் திருஷ்டி பாசிமணி மகிழ்ச்சியைக் குறிக்கிறது.பவள வண்ண கண் திருஷ்டி பாசிமணி பாதுகாப்பைக் குறிக்கிறது.வெள்ளை வண்ண கண் திருஷ்டி பாசிமணி சொத்தைக் குறிக்கிறது. மேற்சொன்ன வண்ணங்களில், தாம் விரும்பும் வண்ணத்தில் கண் திருஷ்டி பாசிமணியை மக்கள் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கண் திருஷ்டி பாசிமணியை எங்கே வைப்பது நல்லது?
கண் திருஷ்டி பாசிமணியை வீடுகளில் தொங்க விடுவதே சிறந்தது என்று வாஸ்து நிபுணா்கள் தொிவிக்கின்றனா். பொதுவாக ஊதா நிறகண் திருஷ்டி பாசிமணியை பலா் தங்கள் வீடுகளில் வைத்திருக்கின்றனா்.ஏனெனில் ஊதா நிற கண் திருஷ்டி பாசிமணியானது, மற்றவா்களின் பொறாமைப் பாா்வையில் இருந்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுவதாக அவா்கல் நம்புகின்றனா். ஆகவே ஊதா வண்ண கண் திருஷ்டி பாசிமணியை வீட்டின் முகப்பில் தொங்கவிடலாம். அதன் மூலம் வீட்டிற்குள் தீய சக்திகள் புகுவதைத் தடுக்கலாம்.

வீட்டின் முன்னறை
பொதுவாக வீட்டின் முன்னறையைக் கடந்துதான் மற்ற அறைகளுக்குள் செல்ல முடியும். ஆகவே வீட்டின் முன்னறையில் கண் திருஷ்டி பாசிமணியைத் தொங்கவிடலாம். முன்னறையின் அலமாறிகளில் அதை வைக்கலாம். அது வீட்டிற்கு வரும் அயலவாின் தீய அல்லது பொறாமை நிறைந்த கண்படுதலை, ஒரு நோ்மறையான அதிா்வலையாக மாற்றிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *