சந்திராஷ்டம நாளில் நற்பலன்களை அடைய 12 ராசியினரும் என்ன செய்யவேண்டும்? அதற்கான பரிகாரங்கள் என்ன தெரியுமா !!

ஆன்மீகம்

சந்திராஷ்டம நாளில் நற்பலன்களை…..

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசிக்கு எட்டாவது இடத்தில் சந்திரன் அமர்வதால் அந்த ராசிக்கு சந்திராஷ்டமம் என்று பெயராகும். இதனால் எப்படிப்பட்ட சிக்கல் சந்திக்கக் கூடும், அதற்கு ப யப்பட வேண்டுமா, அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்..

மேஷம்-செவ்வாய் அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர் துவரையை தானம் செய்து, முருகப்பெருமானை வழிபட்டு உங்கள் முக்கிய செயலை செய்வது அவசியம். ரிஷபம்-ரிஷப ராசியினர் மொச்சை தானம் செய்து, மகா லட்சுமியை வழிபாடு செய்து உங்கள் காரியத்தை துவங்கலாம். மிதுனம்-மிதுன ராசியினர் பெருமாளை வழிபாடு செய்து கற்கண்டு பூஜித்து பக்தர்களுக்கு கொடுத்துவிட்டு உங்கள் முக்கிய செயல்களை செய்ய தொடங்கலாம். சந்திராஷ்டமம் தினத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் முக்கிய விளக்கம் இதோ

கடகம்-கடக ராசியினர் பச்சரிசியை தானம் செய்து அம்பிகையை வழிபாடு செய்து உங்கள் செயலை துவங்கலாம். சிம்மம் சிம்ம ராசிக்காரர்கள் சிவ பெருமானை வழிபாடு செய்து, அவல் தானம் கொடுக்கவும். பின்னர் உங்கள் முக்கிய செயலை செய்யலாம். கன்னி-கன்னி ராசியினர் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்து, தேன் தானம் செய்வதால் உங்கள் காரியம் வெற்றி அடையும். சந்திராஷ்டம தினத்தில் 12 ராசியினர் எப்படிப்பட்ட நற்பலன்களைப் பெறுவார்கள்?துலாம்-துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்வது சிறந்தது. இந்த நாளில் சாந்த ரூப அம்பிகையை வழிபாடு செய்து உங்கள் வேலையை துவங்கலாம்.

விருச்சிகம்-விருச்சிக ராசியினர் துவரை தானம் செய்து, அங்காரகன் எனும் செவ்வாய் பகவானை வழிபட்டு உங்கள் முக்கிய செயல்களை செய்ய தொடங்கலாம். தனுசு-தனுசு ராசியினர் குரு பகவானை வழிபாடு செய்வது அவசியம். பேரீச்சம் பழத்தை தானம் செய்வது உங்களின் முக்கிய செயலை தொடங்கலாம். மகரம் மற்றும் கும்பம் மகரம் மற்றும் கும்ப ராசியினர் ஆஞ்சநேயரை வழிபாடு செய்த பின்னர், கருப்பு நிறத்தில் உள்ள உணவு பொருட்களை தானம் செய்து உங்கள் வேலையை தொடங்குவது அவசியம். மீனம்-மீன ராசியினர் பைரவரை வழிபாடு செய்வதோடு, கற்கண்டு தானம் செய்வதால் உங்கள் செயலில் வெற்றி உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *