கெட்டது நீங்கி அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? அரச மரத்து இலையை வைத்து இப்படி வழிப்பட்டால் போதும்!

ஆன்மீகம்

அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா…..

அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் வேண்டிய வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த அரசமரம் விநாயகரின் ஸ்வரூபம் கொண்டதாக கருதப்படுகிறது. மேலும், அரச மர இலையை கொண்டு அமாவாசை தோறும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது குடும்பத்தில் இருக்கும் நெகட்டிவ் வைப்ரேஷன்கள் வெளியேறி நல்ல ஆற்றல்கள் பெருகும். இதனால் அதிர்ஷ்டம் தரும் ராஜயோகம் பெறலாம் என்கிறது சாத்திரம். எலுமிச்சை பழத்திற்கு கெட்ட அதிர்வுகளையும் உள்வாங்கும் சக்திகள் உண்டு.

அதனால் தான் அதனை வசியம் செய்வதற்கும், பில்லி, சூனியம், ஏவல் போன்ற விஷயங்களை செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். ஒரு பெரிய தாம்பூல தட்டை எடுத்துக் கொண்டு அதனை சுற்றிலும் 9 அரச இலைகளை அழகாக அடுக்கி வைக்க வேண்டும். அரச மரத்திலிருந்து அரச இலைகளை பறிக்கும் பொழுது விநாயகரை மனதில் நினைத்துக் கொண்டு பறியுங்கள். இப்படி தட்டை சுற்றிலும் காம்பு உட்புறமாகவும், இலை வெளிப்புறமாகவும் தெரியும்படி அடுக்கி வையுங்கள். அடுத்தாக ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சரிசியை போட்டுக் கொள்ளுங்கள்.

பச்சரிசிக்கு மேலே கெட்ட அதிர்வலைகளை உள்வாங்கும் ஒரு எலுமிச்சை கனியை எடுத்து வையுங்கள். இப்போது ஒவ்வொரு இலையிலும் அரகஜா என்று சொல்லப்படும் தெய்வீக சக்தி உள்ள மை ஒன்றை வலது கை மோதிர விரலால் எடுத்து நடுப்பகுதியில் வைக்க வேண்டும்.இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அரகஜா என்பது கோவில்களில் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு அற்புத தெய்வீக பொருளாகும்.

இதனை தினமும் நெற்றியில் இட்டு கொள்பவர்களுக்கு எப்பொழுதும் வெற்றி தான். இதில் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடிய அற்புத சக்தி உண்டு. எனவே இந்த மையை அரச இலையில் வைக்கும் பொழுது வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *