ஏழரை சனி யாருக்கு தொடங்குகிறது, யாருக்கு முடிகிறது தெரியுமா !! கவனமாக இருக்க வேண்டிய ஐந்து ராசியினர் !!

ஆன்மீகம்

ஏழரை சனி யாருக்கு தொடங்குகிறது……

ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ஆட்டிபடைபதில சனி முக்கிய பங்கு வகிக்கிறார். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த பெயர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு ராசியும் பெற உள்ள முக்கிய பலன்களும், அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதைப் சுருக்கமாக பார்ப்போம். எந்த ராசிக்கு என்ன சனி ஆரம்பம்?

மேஷம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அவர்கள் சார்ந்த துறையில் நல்ல புதிய வாய்ப்புகள் அமையும். அதோடு புதிய தொழில் தொடங்கும் யோசனையும், அதை சிறப்பாக தொடங்கி வெற்றி அடைய வாய்ப்புள்ளது. தொழில் என எதுவாக இருந்தாலும் அதில் லாபம் தரக்கூடியதாக இருக்கும்.தசை புத்தி சரியில்லாத மேஷ ராசியினர் புதிய தொழில் தொடங்குவதோ, பெரிய முதலீடு செய்வது, கடன் வாங்குதல் கூடாது. இருக்கும் இடத்தில் அல்லது நிலையில் மேன்மை அடையப் பார்ப்பது அவசியம்.எந்த வேலை பார்த்தாலும் அனைத்து வகையில் நல்ல பலன் கிடைக்கும் என்றாலும், எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலை இடத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசாமல் இருந்தாலே போதும், நன்மைகள் நடக்கும். சக ஊழியர்களிடம் கவனம் தேவை.

​விருச்சிகம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் மூலம் புதிய வரவு வரக்கூடும். முயற்சிகள் எது எடுத்தாலும் நன்மை உண்டாகும். அதனால் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்வது அவசியம். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களுக்கு ஆதரவான சூழல் இருக்கும். மற்றவர்களுக்கு ஜாமின் கையெழுத்து போடுவதற்கு முன் சிந்தித்துச் செயல்படவும்..உங்கள் மனக்குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ள உங்கள் மனக்குறையை உங்களின் அன்பிற்க்கினியவரிடம் பகிர்ந்து தெளிவு பெறுங்கள்.பொருளாதார நிலை உயரும். அதே போல் தேவையற்ற கடன் வாங்குதலைத் தவிர்ப்பதால் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள்.

​சிம்மம்
குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இதுவரை இருந்த திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் யோகம் உண்டாகும். இளைய சகோதர / சகோதரிகளிடம் சமரச போக்கை கடைப்பிடிக்கவும். சண்டை வேண்டாம். ஆடை, ஆபரணங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு. மிகவும் பயனடையக்கூடிய ராசி. காதல் கை கூடும். பயணத்தில் கவனம் தேவை. வேலை கிடைத்தல், சுப காரியங்கள் நடத்தல் என பல நல்ல சுப பலன்களும் நடக்கும். பரிகாரம் -பிள்ளையார் பட்டி சென்று விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு குறிப்பாக கற்பக விநாயகர் வழிபாடு நன்மையை தரும்.அவசரத்தை விட்டாலே அனைத்தும் நன்மை தரும்.

​மிதுனம்
8ல் சனி வருவதால் அதாவது அஷ்டம சனி என்பதால் அனைத்து வகையிலும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.குடும்பம், தொழில், வியாபாரம், கல்வி, பண பரிவர்த்தனை என எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும் சரி நிதானமும், கவனமுடன் கூடிய செயல்பாடு மிக அவசியம். சோம்பேறித்தனத்தை அகற்றி, செயல்படுவது அவசியம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.குடும்ப ரீதியாக பாதிப்புக்கள் ஏற்படலாம். பயணங்களில் மிக கவனமாக இருப்பது அவசியம். புத்திரர்களும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. பரிகாரம் – தினமும் ஒரு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.சனிக்கிழமைகளில் அனுமனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவது நல்ல பலனைத் தரும்.சிவ மந்திரத்தைச் சொல்லுதலும், விஷ்ணுவின் சகஸ்ரநாமம் படிப்பதால் ஏற்பட்ட தடைகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும்.

​கடகம்
சஞ்சலத்தில் இருக்கக் கூடிய கடக ராசிக்கு, சற்று பாதிப்புக்கள் இருக்கும். இருப்பினும் கடமையை சரியாக, நேர்மையாக செய்பவர்களுக்கு நன்மை தான் நடக்கும்.மகரத்தில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு முக்கிய செயல்களை செய்வதாக இருந்தாலும் முதலில் பெரியோர்களின் ஆலோசனையும், தொழில் ரீதியாக இருந்தால் சந்தை நிலவரத்தைச் சரியாக தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல செயல்படுவது நல்லது.கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு மறந்து விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். பண பரிமாற்றத்தில் சற்று கவனமாக இருப்பது அவசியம். சந்தேக புத்தி, சோம்பேறித்தனத்தை விலக்கினால் நன்மை கிடைக்கும்.கண் திருஷ்டி அதிகமாகும். வளர்ச்சியை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். புதிதாக அறிமுகமாபவர்களிடம் கவனமாக இருப்பது அவசியம். பரிகாரம் – வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆஞ்சநேயர், சனி பகவானை தொடர்ந்து வணங்கி வர நன்மை தரும்.வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ர நாமம் பாடி அம்பாளை வழிபடுவதும். அஷ்டமி விரதமிருந்து பைரவரை வழிபடுவதும்.யாரெல்லாம் சுறுசுறுப்புடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு சனி பகவான் நன்மையை தான் செய்வார். அதனால் சோம்பேறித்தனத்தை நீக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *