கட்டாயம் படியுங்கள் … காலண்டரில் மேல்நோக்கு, கீழ்நோக்கு, சமநோக்கு நாள் எதற்காக இருக்கிறது தெரியுமா !!

ஆன்மீகம்

காலண்டரில் மேல்நோக்கு, கீழ்நோக்கு, சமநோக்கு நாள் எதற்காக இருக்கிறது தெரியுமா !!

நம் வீட்டு காலண்டரில் இருக்கும் இந்தக் குறியீடு மேல் நோக்கி இருந்தால், மேல்நோக்கு நாள் என்றும், கீழ் நோக்கி இருந்தால் கீழ்நோக்கு நாள் என்றும், இருபுறமும் சமமாக இருந்தால், சமநோக்கு நாள் என்றும் குறிப்பிட்டு கூறப்படுகிறது.இந்த குறியீடு அந்தந்த நாட்களில் வரும் நட்சத்திரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த குறியீடு தெரிந்து கொண்டு சில காரியங்களை நாம் செய்யும் பொழுது அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும்.மேல்நோக்கு நாள் என்பது உத்திரம், உத்திராடம், ரோகினி, திருவாதிரை, பூசம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, திருவோணம் போன்ற 9 நட்சத்திரங்கள் கொண்ட நாட்களை குறிக்கிறது.பொதுவாக சுப காரியங்கள் செய்ய மேல்நோக்கு நாளைத் தேர்ந்தெடுப்பது ஜோதிடர்களின் வழக்கம். மேல்நோக்கு நாள் நல்ல அதிர்ஷ்டமான நாளாக அமையும்.

இந்த நாளில் மேல் நோக்கி நடக்கக் கூடிய நல்ல விஷயங்களை செய்வது மிகவும் நல்லது.அதாவது மேல் நோக்கி வளரும் மரம், செடி, கொடி போன்ற தாவரங்களை வளர்ப்பதும், மதில் சுவர் கட்டுவது, கட்டிடம் எழுப்புவது, பயிர் விதைப்பது என்று வானை நோக்கி செய்யக் கூடிய காரியங்களை செய்வது அதிர்ஷ்டம் தரும்.மேலும் சுப காரியங்கள் செய்வது, உத்தியோகம் சார்ந்த நல்ல விஷயங்களை செயலாற்றுவது, புதிதாக வேலைக்கு சேருவது, புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்வது போன்ற விஷயங்களை செய்யலாம்.

அது போல் வியாபாரத்தில் இருப்பவர்கள் வளரக்கூடிய விஷயங்களை செய்வதும் நன்று. வீடு, மனை வாங்குவது வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவது, விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவது, பத்திரப்பதிவு செய்வது போன்ற செயல்களை செய்யலாம்.சமநோக்கு நாள் என்பது மிருகசீரிஷம், அஸ்தம், அஸ்வினி, சுவாதி, புனர்பூசம், சித்திரை, ரேவதி, கேட்டை ஆகிய 9 நட்சத்திரங்களை கொண்ட நாட்களை குறிக்கிறது.இதில் சமமாக செய்யக் கூடிய சில விஷயங்களை செய்வதன் மூலம் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது ஐதீகம்.

அப்படி என்னென்ன விஷயங்கள் செய்யலாம்? சமமாக இருக்கும் சாலைகள் அமைப்பது, மற்றும் அதன் மீது ஓடும் வாகனங்கள் வாங்குவது, புதிதாக வீடு கட்டுபவர்கள் தளம் அமைப்பது, விவசாய நிலத்தில் சமமாக உழவு செய்வது போன்ற விஷயங்களை செய்தால் யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *