வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வேறுபடுகின்றது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரங்களில் தமது வழிபாடுகளை செய்வார்கள். ஆனால் அதிகாலை வழிபாடு என்பது பொதுவாகவே எல்லோரிடத்திலும் குறைவாக காணப்படும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக சூரிய வழிபாடு என்பது நம்மில் எதை பேர் தொடர்ச்சியாக அல்லது அதிகாலையில் செய்கின்றோம். அதாவது அதிகாலையில் எழுந்து சூரியனை வழிபடுவது பல நன்மைகளை வழிவகுக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாம் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை.

சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதுபோல் அர்த்தம். கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன. சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன.

சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் சிவசூரியன் என்று போற்றுகின்றனர். சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர்.

கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுகின்றனர். மேலும், சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும் புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும்.

ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். அதன் பலனை உணர முடியும்.
