முட்டையை பச்சையாக சாப்பிடலாமா ? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா !!

மருத்துவம்

ஒரு முட்டையில் நம் உடலால் எளிதில் எடுத்து கொள்ளக்கூடிய அதிக தரமான புரதச்சத்து சுமார் 6 கிராம் உள்ளது. இதன் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் டி நம் எலும்புகளுக்கும்,பற்களுக்கும் வலுமை சேர்க்கும். மேலும் இதில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் கண் நோய்கள் மற்றும் கண் புரை ஏற்படாமல் பாதுகாக்கும். இத்தனை நன்மைகள் கொண்ட முட்டையிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்றால் தரமற்ற முட்டைகள்தான். தரமற்ற முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது ? முட்டையை பச்சையாக சாப்பிடலாமா ? வேக வைத்த முட்டை நல்லதா ? முட்டையை பொரித்து சாப்பிடலாமா ? ப்ராய்லர் கோழி முட்டை நல்லதா ? கெட்டதா ? இப்படி உங்களின் பல்வேறு விதமான சந்தேகங்களுக்கான விடைகளை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

எந்த முட்டை நல்லது?

சில முட்டைகளில் மஞ்சள் கரு மஞ்சளாக இருக்கும். சிலவற்றில் ஆரஞ்சு நிறமாக இருக்கும். இவற்றில் எது நல்லது என்றால் ஆரஞ்சு நிற மஞ்சள் கருதான். நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறமாக இருக்கும். எனவே ஆரஞ்சு நிற கருவை கொண்டிருக்கும் முட்டை ஆரோக்கியமான கோழியில் இருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம்.

நாட்டு கோழிகள் புழு, புற்களை உண்டு சூரிய வெளிச்சத்தை பெற்று இயற்கையான முறையில் அவைகள் வளர்வதால் அவற்றின் முட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். முட்டையின் மஞ்சள் கரு மஞ்சளாக இருந்தால் அது கண்டிப்பாக ப்ராய்லர் கோழி முட்டைகள். பொதுவாக கோழிகள் முட்டை இடுவது தன் இனத்தை விருத்தி செய்வதற்காகத்தான் இட்ட முட்டையை அடைகாத்து குஞ்சு பொறிக்கின்றன. இதுதான் இயற்கையின் நியதி. ஆனால் ப்ராய்லர் கோழிகள் இடும் முட்டைகள் குஞ்சும் பொறிக்காது,அடையும் காக்காது.

ப்ராய்லர் கோழியில் குஞ்சு பொறிப்பது முதல் முட்டை இடுவது வரை அனைத்துமே ஊசியின் மூலமே நடைபெறுகிறது. இப்படி குஞ்சு பொறிக்காத முட்டை ,அடைகாக்காத கோழி இவற்றை உண்ணும் நம் உடலும் அதை சார்ந்து தானே இருக்கும். எனவே கண்டிப்பாக ப்ராய்லர் கோழி முட்டை நல்லதல்ல.

வெளிர் ஆரஞ்சு நிற முட்டைகளை ஆர்கானிக் முட்டைகள் என்று கூறுகின்றனர். அதாவது இவை முற்றிலும் இயற்கையான சூழலில் வளர்ந்தவை கிடையாது. பண்ணைகளில் நல்ல இயற்கை தீவனம் மட்டும் போட்டு வளர செய்தவை. ஆகவே அவை வெளிர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. இவற்றை சாப்பிடலாம்,உடலுக்கு கேடில்லை.ஆனால் நாட்டு கோழி முட்டையில் கிடைக்கும் அதே அளவு சத்துக்களை இதில் எதிர்பார்க்க முடியாது.

பொதுவாக நாட்டு கோழி முட்டைகள் அளவில் சிறியதாகத்தான் இருக்கும். பெரிய பிரௌன் கலர் முட்டைகள் கலப்படமானவை. நல்ல தரமான நாட்டு கோழி முட்டைகளை பச்சையாகவே சாப்பிடலாம். ஆனால் அதை வேகவைத்து சாப்பிடும்போது அதன் சத்துக்கள் இருமடங்கு அதிகரிக்கிறது. ஆகவே அவித்து சாப்பிடுவது சிறந்தது. தொடர்ந்து நாட்டு கோழி முட்டையை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

யாரெல்லாம் சாப்பிடலாம்?

கால்சியம், சல்பர், மக்னீசியம் , ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இதில் இருக்கின்றன.குழந்தைகளின் உடலுக்கு தேவையான எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் அத்தியா வசியமான உணவு வகைகளில் ஒன்று முட்டை. குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் ஒரு நாட்டு கோழி முட்டை கொடுப்பது அவசியம். அதே போல் கர்ப்பிணிகள் தினமும் ஒரு நாட்டு கோழி முட்டையை சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

இ ர த் த சோகை இருப்பவர்கள் அவசியம் முட்டையை எடுத்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள்,கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்து விட்டு வெள்ளை கருவை மட்டும் சாப்பிடலாம். முக்கியமாக முட்டையை அதிகநேரம் வேக வைக்கக்கூடாது. முட்டையை 7 நிமிடம் மட்டுமே வேக வைக்கவேண்டும். அதே போன்று நீண்ட நேரம் வறுக்கவும் கூடாது. இப்படி செய்தால் முட்டை அதன் சத்துக்களை இழந்துவிடும்.

முட்டையை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டையில் அதிக அளவு புரோட்டீன்,விட்டமின்கள்,மினரல்கள் இருப்பதால் செரிமானம் ஆக அதிக நேரம் ஆகும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் முட்டையை அளவாக சாப்பிடுவது நல்லது. ஊளைச்சதை வராமல் தடுக்க முட்டை உதவுகிறது. ஆகவே முட்டை உடல் எடையை குறைக்குமே தவிர அதிகரிக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *