ஜூலை மாத ராசிப்பலன் – இந்த 4 ராசிக்கு புதன் சூரியனால் கிடைக்கும் ராஜயோகம் என்னென்ன தெரியுமா !! நிகழவுள்ள கிரகங்களின் பெயர்ச்சி !!

ஆன்மீகம்

ஜூலை மாத ராசிப்பலன் ……

நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும். சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும். ஜூலை மாதம் மிகவும் முக்கியமான கிரகங்களான புதன், சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழ உள்ளது.இதனால், மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்கு உங்கள் பேச்சுத் திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறன் மூலம் உங்கள் வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் ஆரோக்கியம், கல்வி சிறப்பாக இருக்கும். மேலும், கணவன் மனைவி இடையே உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆசைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அடுத்து, குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சில ஆடம்பர செலவுகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தின் மூலம் நீங்கள் சிறந்த ஆதாயம் பெறுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் காரணமாக பணியிடத்தில் உங்களால் சிறப்பாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். தொழில் குறித்த எந்தவொரு முயற்சியையும் நீங்கள் பொறுமையாக எடுக்க வேண்டும். நீங்கள் கடின முயற்சி செய்து தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் பொருளாதாரம் சிறப்பாகவும், வருமானம் அதிகரிக்கும் வகையில் இருக்கும். அதனால் பற்றாக்குறை நீங்கும். உத்தியோகம், தொழில் போன்ற பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். மாணவர்கள் கல்வி சிறப்பாக இருக்கும். மேலும், திருமணம் முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்வாய்ப்பு ஏற்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பெருகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு காணப்படும். பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வார்த்தையில் கவனமாக இருப்பதோடு, தேவையற்ற ப த ட் டத்தை தவிர்க்கவும். வெளிநாடு தொடர்பான வேலை, தொழில் செய்பவர்களுக்கு லாபம் தருவதாக இருக்கும்.
உணவு சார்ந்த தொழில் முன்னேற்றம் தரும்

மிதுனம்
ஜூலை மாதத்தில் மிதுன ராசியின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும், கூட்டு தொழில் செய்பவர்கள் வாய்ப்புகளும், வெற்றியும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி மற்றும் தியானம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். முதுகுவலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணியிடத்தில் பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் கவனமற்ற வீண் பேச்சால் உங்கள் மதிப்பு குறையும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தருவதாக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். மாணவர்களின் கல்வியில் சாதகமான பலனைத் தரும். திருமண தடை நீங்கி நிச்சயமாக வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதிகள் இடையே ஒற்றுமை மற்றும் நல்லுறவு காணப்படும்.

கடகம்
கடக ராசியினருக்கு உங்களின் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உங்களின் கவலைகள் குறையும். குடும்பத்தின் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழிலில் சில முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில், பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் சக பணியாளர்களுடன் கவனமாக நடந்துகொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். காதல் உணர்வு அதிகரிக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்க நல்வாய்ப்பாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். குடும்ப பெரியவர்களிடமிருந்து ஆலோசனைகள் சிறப்பான பலனைத் தரும். வேலையில் உங்களின் சிறப்பான செயலைப்பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். பணியிடத்தில் சற்று கவனமாக நடந்துகொள்வதால் உங்களின் மதிப்பு உயரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *