பலரும் அறியாத மறைந்த வரலாற்று உண்மை !! உண்மையில் சிவன் யார் தெரியுமா …. ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி !!

ஆன்மீகம்

உண்மையில் சிவன் யார் தெரியுமா ….

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.

பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார். பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது.

சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவற்றையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்க மறநிறைந்திருக்கும் அந்த பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் பலவற்றில் அமர்த்தி வழிபட்ட பெருமை மிக்கது நமது புண்ணிய பூமி.

சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன. உபநிஷதங்கள் உணர்த்துகின்றன. புராணங்கள் பகருகின்றன. வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் சிவபெருமான், ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள். சிவ வழிபாட்டின் மகிமையை முதல் முதலாக உணர்த்திய தனி நூல் சுவேதா சுவேதர உபநிஷதமாகும். ருத்திரனின் பேராற்றல்களை வருணிக்கும் அந்நூல் ருத்திர சிவவழி பாட்டுக்கு ஒரு திறவுகோல் எனலாம்.

சிவன் யார்??உண்மையில் இவர் யார் பலரும் அறியாத உண்மை மறைந்த வரலாறு இதைப்பற்றி முழு வீடியோ கீழே உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *