கருடப் புராணம் கூறும் பித்ரு தோஷம் பற்றி தெரியுமா? ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது !!

ஆன்மீகம்

கருடப் புராணம் கூறும் பித்ரு தோஷம் பற்றி தெரியுமா உங்களுக்கு. அதாவது ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள். பித்ருதோஷம் என்பதை இரண்டு வகைகளில் விவரிக்கலாம். ஜோதிடம் சார்ந்த ஒன்று. அதைச் சாராத ஒன்று. உலகின் எந்த ஒரு புனிதமதமோ அல்லது புனிதநூலோதாயையும், தந்தையையும் சிறப்பித்துத்தான் சொல்லுகின்றன.

ஆனால் என்னுடைய மேலான இந்துமதம்மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தி, தெய்வத்தையே நான்காமிடத்தில் நிறுத்தி பெற்றவர்களை முதலிடத்தில் வைத்துச் சிறப்பிக்கிறது. இந்துமதம், நாம் இந்த பூமிக்கு வருவதற்கு ஆதாரமாக இருந்து, நமக்கு உடல் கொடுத்த தாயையும், தந்தையையும் தெய்வத்திற்கும் முன்னே வைத்து முதலில் வணங்கச் சொல்கிறது.

உடலும், உயிரும் கொடுத்த தாய்,தகப்பனை அவர்கள் உயிருடன் இருக்கும் போதும் மதித்து வணங்கி, அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகும் அவர்களை வருடாவருடம் நினைத்துப் போற்றி பசியாற்ற வேண்டியதே ஒரு இந்துவின் தலையாயக் கடமை. ஒருவர் இ ற ந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.

இ ற ந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். இ ற ந்தவுடன் இ ற ந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இ றந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல், போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இ ற ந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும். அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது,

அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரையும் விட்டு வைக்காது, அவர்களையும் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் பித்ரு தோஷம் என்று கூறுவார்கள். ஒருவன் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்து இ ற ந்தால், இ ற ந்தவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும் இ ற ந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். காரணம் பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறைவாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *