பூஜை அறையில் சிலையை வைத்து வழிபடுகிறீர்களா? விக்ரகங்களை வைத்து வழிபாடு செய்யலாமா? இது மிகப்பெரிய சாபத்தில் முடியுமாம் !!

ஆன்மீகம்

வீட்டில் சிலைகளை வைத்து வழிபடும் பழக்கத்தினை சிலர் கடைபிடித்து வருகின்றனர். அது சிலருடைய விருப்பமாகவும் இருக்கின்றது. அவ்வாறு வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபாடு செய்யலாமா? அப்படி வைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபடலாமா? இந்து தர்மத்தின் படி நமக்கு பிடித்த சுவாமி சிலையை வீட்டில் பிரதிஷ்டை செய்து வணங்கலாம். கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு உயிரோட்டம் கொடுத்து, அதற்கு தினமும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் செய்கிறோம்.

அதே போன்று தான் வீட்டில் பிரதிஷ்டை செய்யப்படும் ஸ்வாமி சிலைகளுக்கும் செய்ய வேண்டும். வீட்டில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை ஆவாகனம் எனப்படும் உயிரூட்டலைச் செய்துதான் வழிபட வேண்டும். இல்லை என்றால் அது நம் விருப்ப தெய்வத்தின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொடுத்துவிடும். பொதுவாக வீடுகளில் ஆறு அங்குலத்துக்குக் குறைவான விக்ரகங்களை வைத்துக்கொள்ளப் பெரியவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆறு அங்குலத்திற்கு மேல் உள்ள விக்ரகம் என்றால் தினமும் அதற்கு அபிஷேகம் உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும்.ஆறு அங்குலத்துக்கு குறைவான விக்ரகம் என்றால் தினமும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாரத்துக்கு ஒரு முறை கூட அபிஷேகம் உள்ளிட்டவற்றைச் செய்துகொள்ளலாம்.

கல், ஐம்பொன் அல்லது தங்கம், வெள்ளி, பித்தளை, தாமிரம், வெங்கலத்தில் செய்த சிலைகளைப் பயன்படுத்தலாம். கல்லினால் செய்யப்பட்ட சிலை என்றால் அது ஆறு அங்குலத்துக்குக் கீழ் இருந்தாலும் தினசரி அபிஷேகம், நைவேத்தியம் உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும்.கோவில்களில் செய்வது போன்று நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று இல்லை.

பழங்கள், பேரீச்சம் பழம், கற்கண்டு, வெறும் சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து எச்சில் படுவதற்கு முன்பு சாமிக்கு படைக்க வேண்டும். விக்ரகங்களை வைத்துக்கொண்டு அதற்கு அபிஷேகம், பூஜை, நைவேத்தியம் போன்றவற்றைச் செய்யவில்லை என்றால் இஷ்ட தெய்வத்தின் சாபத்துக்கு ஆளாக நேரிடலாம்.

அதே போல் வீட்டில் சிலைகளை பிரதிஷ்டை செய்துவிட்டு அதற்கு அபிஷேகம், நைவேத்தியம், விளக்கு கூட எரிய வைக்காமல் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் செல்வது சாபத்தைத்தான் தரும். எனவே, தினசரி அபிஷேகம், பூஜை போன்றவற்றை செய்ய முடியும் என்று கருதுபவர்கள் வீட்டில் விக்கரங்களை வைத்து வழிபாடு செய்யலாம். மற்றவர்கள் இஷ்ட தெய்வத்தின் படங்களை மாட்டி மனதார பிரார்த்தனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *