ஏகாதசியில் ஏன் விரதம் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா? நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் !!

ஆன்மீகம்

விரதம் என்பது இந்துக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, தனி மனிதன் பூரண நிலையை அடையவும், இறைவனின் அருளினை உணர்ந்திடவும், இறைவனிடமிருந்து நற்பலன்களை பெற்றிட இந்த விரதம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும்.

விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும். ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.

மனிதனின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று பிரிப்பது இந்து மதத்தின் மரபு. இவர்கள் கண்டிப்பாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.மேலும், ஏகாதசி திதி தோன்றியது மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியன்று தான். அதனால் தான் இதற்கு உத்பான அல்லது உற்பத்தி ஏகாதசி என்று பெயர்.

அன்றிலிருந்து தான் இந்த ஏகாதசி ஆரம்பமாகி உள்ளது. உற்பத்தி ஏகாதசி மார்கழி மாதத்தில் முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசி தான் முதலில் வரும் என்பதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்னதாக வரலாம்.

வளர்பிறை, தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக கருதக் கூடாது. மேலும், திங்கள், சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதிக சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *