இப்படியொரு காதல் காட்சியை சினிமாவில்கூட எடுக்கமுடியாது !! பெண்சிங்கத்திடம் நெருங்கிவரும் ஆண்சிங்கம்! மனித காதலையும் மிஞ்சிய செயல் வைரல் !!

வைரல்
சிங்கங்கள் காட்டின் ராஜா எனஅழைக்கபடுகிறது.சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்தை அரிமா அல்லது ஏறு என்றும், பெண் சிங்கத்தை சிம்மம் என்றும் கூறுவது வழக்கம். ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது.
சிங்கக் கூட்டத்தின் தலைவனோ தலைவியோ கூட்டத்தின் ஒரு அங்கத்தினராகவே இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பொதுவாக ஐந்து ஆறு வயதுவந்த பெண் சிங்கங்களும், ஒரு வயது வந்த ஆணும் சில குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். இந்த அமைப்பில் விதிவிலக்குகள் குறைவாகவே உண்டு.
ஒரு ஜோடி சிங்கங்கள் வனப்பகுதியில் மௌன மொழியில் அன்பை பகிர்ந்துகொள்ளும் வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. மனிதர்கள் பார்த்து பயந்து நடுங்கும் விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக சிங்கம் ஒன்று தன் ஜோடியிடம் நெருங்கி வந்து நின்று அன்பை பரிமாறுகின்றது.
இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் இதுபோன்ற அளவில்லா அன்பைப் பகிரும் ஒரு வாழ்க்கை துணை நமக்கும் தேவை என்பது போன்ற பல கமெண்டுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *