இன்று ஏழரை சனி யாருக்கு தொடங்குகிறது, யாருக்கு முடிகிறது !! 12 ராசியையும் ஆட்டிப்படைக்க போகும் சனியின் பலன்கள் !!

ஆன்மீகம்

பிலவ ஆண்டு – ஆனி 28 – திங்கட்கிழமை (12.07.2021) நட்சத்திரம் : ஆயில்யம் 03:14 AM வரை பிறகு மகம் திதி : 08:19 AM வரை துவிதியை பின்னர் திருதியை யோகம் : சித்த – மரண யோகம் நல்லநேரம் : காலை 6.15 – 7.15 / மாலை 4.45 – 5.45 திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை)
சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ஆட்டிபடைபதில சனி முக்கிய பங்கு வகிக்கிறார். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்றைய தினத்தில் சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த பெயர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு ராசியும் பெற உள்ள முக்கிய பலன்களும்,

அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதைப் சுருக்கமாக பார்ப்போம். எந்த ராசிக்கு என்ன சனி ஆரம்பம்? மேஷம் (கர்ம சனி), ரிஷப ராசி (பாக்கிய சனி) ,மிதுன ராசி (அஷ்டம சனி), கடக ராசி (கண்ட சனி), சிம்ம ராசி (ரோக சனி), கன்னி (பஞ்சம சனி), துலாம் (அர்த்தாஷ்டம சனி), விருச்சி ராசி (ஏழரை சனி முடிவு), தனுசு ராசி (பாத சனி, வாக்கு சனி), மகர ராசி (ஜென்ம சனி), கும்பம் (விரய சனி),மீன ராசி (லாப சனி) சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார்.மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். 12 ராசிக்குமான பலன்கள்

மேஷம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அவர்கள் சார்ந்த துறையில் நல்ல புதிய வாய்ப்புகள் அமையும். அதோடு புதிய தொழில் தொடங்கும் யோசனையும், அதை சிறப்பாக தொடங்கி வெற்றி அடைய வாய்ப்புள்ளது. தொழில் என எதுவாக இருந்தாலும் அதில் லாபம் தரக்கூடியதாக இருக்கும்.தசை புத்தி சரியில்லாத மேஷ ராசியினர் புதிய தொழில் தொடங்குவதோ, பெரிய முதலீடு செய்வது, கடன் வாங்குதல் கூடாது. இருக்கும் இடத்தில் அல்லது நிலையில் மேன்மை அடையப் பார்ப்பது அவசியம்.எந்த வேலை பார்த்தாலும் அனைத்து வகையில் நல்ல பலன் கிடைக்கும் என்றாலும், எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலை இடத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசாமல் இருந்தாலே போதும், நன்மைகள் நடக்கும். சக ஊழியர்களிடம் கவனம் தேவை.
பரிகாரம் – உங்கள் ராசிக்கான கடவுள் முருகன் என்பதால் உங்களால் முடியும் போதெல்லாம் முருகன் கோயில் சென்று கந்தனை தரிசித்து வருவதும், கந்த சஷ்டி கவசத்தைப் பாடி வர தைரியமும், ஆரோக்கியமும், முன்னேற்றமும் கூடும்.உடல் ஊனமுற்றோர்களுக்கு உணவு தானம், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதணி (செருப்பு) வாங்கி தரலாம்.

​ரிஷபம்
ரிஷபம் ராசியினர் அஷ்டம சனி நீங்கி அதிர்ஷ்ட பலனைப் தரும் பாக்கிய சனி பலனை பெற உள்ளீர்கள்.வசதி வாய்ப்புகள் வந்து சேரும். தான தர்மங்கள் செய்வதற்கான வாய்ப்புகளும் அதற்கான வசதிகளும் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வந்து சேரும்.மூத்த மற்றும் இளைய சகோதர்களுக்கு சில பாதிப்பு கொடுக்கும். வம்பு, வழக்கு இருக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும்.பண விஷயங்களில் மிக கவனம் தேவை. வயிறு சார்ந்த பிரச்சினைகள் வரலாம்.பரிகாரம் – சனி பகவான் சிறப்பு ஆலயமான திருநள்ளாறு தர்ப்பணேஸ்வரர் கோயிலில் இருக்கும் நள தீர்த்தத்தில் நீராடுவதும், தர்ப்பணேஸ்வரர், சனிபகவானை வழிபட்டு வருவது மிக நல்ல பலனையும், முன்னேற்றத்தையும் தரும்.சனி பரிகாரம்: ஏழரை சனி பாதிப்பை குறைக்கும் எளிய பரிகாரங்கள்

​மிதுனம்
8ல் சனி வருவதால் அதாவது அஷ்டம சனி என்பதால் அனைத்து வகையிலும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.குடும்பம், தொழில், வியாபாரம், கல்வி, பண பரிவர்த்தனை என எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும் சரி நிதானமும், கவனமுடன் கூடிய செயல்பாடு மிக அவசியம். சோம்பேறித்தனத்தை அகற்றி, செயல்படுவது அவசியம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.குடும்ப ரீதியாக பாதிப்புக்கள் ஏற்படலாம். பயணங்களில் மிக கவனமாக இருப்பது அவசியம். புத்திரர்களும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.பரிகாரம் – தினமும் ஒரு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.சனிக்கிழமைகளில் அனுமனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவது நல்ல பலனைத் தரும்.சிவ மந்திரத்தைச் சொல்லுதலும், விஷ்ணுவின் சகஸ்ரநாமம் படிப்பதால் ஏற்பட்ட தடைகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும்.

​கடகம்
சஞ்சலத்தில் இருக்கக் கூடிய கடக ராசிக்கு, சற்று பாதிப்புக்கள் இருக்கும். இருப்பினும் கடமையை சரியாக, நேர்மையாக செய்பவர்களுக்கு நன்மை தான் நடக்கும்.மகரத்தில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு முக்கிய செயல்களை செய்வதாக இருந்தாலும் முதலில் பெரியோர்களின் ஆலோசனையும், தொழில் ரீதியாக இருந்தால் சந்தை நிலவரத்தைச் சரியாக தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல செயல்படுவது நல்லது.கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு மறந்து விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். பண பரிமாற்றத்தில் சற்று கவனமாக இருப்பது அவசியம். சந்தேக புத்தி, சோம்பேறித்தனத்தை விலக்கினால் நன்மை கிடைக்கும்.கண் திருஷ்டி அதிகமாகும். வளர்ச்சியை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். புதிதாக அறிமுகமாபவர்களிடம் கவனமாக இருப்பது அவசியம்.பரிகாரம் – வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆஞ்சநேயர், சனி பகவானை தொடர்ந்து வணங்கி வர நன்மை தரும்.வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ர நாமம் பாடி அம்பாளை வழிபடுவதும். அஷ்டமி விரதமிருந்து பைரவரை வழிபடுவதும்.யாரெல்லாம் சுறுசுறுப்புடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு சனி பகவான் நன்மையை தான் செய்வார். அதனால் சோம்பேறித்தனத்தை நீக்க வேண்டும்.

​சிம்மம்
குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இதுவரை இருந்த திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் யோகம் உண்டாகும். இளைய சகோதர / சகோதரிகளிடம் சமரச போக்கை கடைப்பிடிக்கவும். சண்டை வேண்டாம். ஆடை, ஆபரணங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு. மிகவும் பயனடையக்கூடிய ராசி. காதல் கை கூடும். பயணத்தில் கவனம் தேவை. வேலை கிடைத்தல், சுப காரியங்கள் நடத்தல் என பல நல்ல சுப பலன்களும் நடக்கும். பரிகாரம் -பிள்ளையார் பட்டி சென்று விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு குறிப்பாக கற்பக விநாயகர் வழிபாடு நன்மையை தரும்.அவசரத்தை விட்டாலே அனைத்தும் நன்மை தரும்.

​கன்னி
பஞ்சம சனி நடக்கக்கூடியவருக்குத் தெளிவற்ற சிந்தனையும், எப்போதும் மனதில் சில தேவையற்ற குழப்பமான நிலை ஏற்படும் என்பதால் அவரால் சரியான தீர்க்கமான முடிவை எடுக்க முடியாத நிலையிலேயே இருப்பார் என்பதால் தான் நினைத்த காரியத்தை சரியான நேரத்தில் முடிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்.பலரின் பழிச்சொல்லுக்கும், வீண் பழியும் ஏற்படக்கூடும். பஞ்சம சனி உள்ளவரின் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம்.வண்டி வாகனத்தில் கவனம் தேவை. செய்தொழிலில் வருமானம் நன்றாக வரும்.பரிகாரம் – திருப்பைஞ்ஞிலி சென்று எம்தர்ம ராஜாவை வழிபட்டு வருவதால், ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும்.அனுமன், சனீஸ்வரர் வழிபாடு நன்மையை தரும்.ஏழை குழந்தைகளுக்குக் கல்விக்கு உதவி செய்வதும், பசியாற்றுவது நல்லது.கடவுளை வணங்குவது, நியாயமாக நடந்து கொள்ளுதல், எந்த ஒரு வேலை செய்தாலும் முழு சிரத்தையுடன் செய்வது நல்லது.

​துலாம்
கடன் தீரும். தொழிலில் அலைச்சல் ஏற்படும். சோம்பேறித்தனம் ஏற்படும். தாயின் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்துடன் வெளியூர் செல்லுதல், சுற்றுலா செல்லுதல் போன்ற மனதிற்குப் பிடித்த நிகழ்வுகள் நடக்கும். ஆன்மிக சுற்றுலாவாகக் கூட அமையும். பயணத்தில் கவனம் தேவை. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு, மன தாங்கல் அவ்வப்போது ஏற்பட்டு மீண்டும் ஒன்று சேரக்கூடிய நிலையும், மனநிம்மதியும் ஏற்படக்கூடும். சரியான நேரத்தில் வேலையை முடிக்க முயலவும்.பரிகாரம் – சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதும். அனுமனை வழிபடுவதும், உங்கள் செயலுக்கு பல மடங்கு பலனைத் தரும். ஞாயிற்றுக் கிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதால் உங்களின் நம்பிக்கையும், முயற்சியும் அதிகரிக்கும்.சக ஊழியர்களிடம் மேலதிகாரிகளைப் பற்றி தவறாக பேசாமல் இருப்பதே நன்மையை தரும்.

​விருச்சிகம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் மூலம் புதிய வரவு வரக்கூடும். முயற்சிகள் எது எடுத்தாலும் நன்மை உண்டாகும். அதனால் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்வது அவசியம். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களுக்கு ஆதரவான சூழல் இருக்கும். மற்றவர்களுக்கு ஜாமின் கையெழுத்து போடுவதற்கு முன் சிந்தித்துச் செயல்படவும்..உங்கள் மனக்குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ள உங்கள் மனக்குறையை உங்களின் அன்பிற்க்கினியவரிடம் பகிர்ந்து தெளிவு பெறுங்கள்.பொருளாதார நிலை உயரும். அதே போல் தேவையற்ற கடன் வாங்குதலைத் தவிர்ப்பதால் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள்.
பரிகாரங்கள் – குரு பகவான் வழிபாடு அவசியம். குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகன் சென்று வழிபாடு செய்துவருவது அவசியம்.உணர்ச்சிவசப்படாமல் இருந்தாலே அனைத்தும் நன்மை உண்டாகும். பேச்சில், செயலில் நிதானம் தேவை.பிரதோஷ நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் வழிபட்டு வர நீங்கள் விரும்பிய முன்னேற்றத்தைப் பெறலாம்.

​​தனுசு
தொழில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பாராத திருமணம் யோகம் உண்டு.உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்ப உறவினர்களுடன் பொய் பேசாமல் இருப்பது நல்லது.வயிறு, மூட்டு சார்ந்த பிரச்னைகள் உண்டாகும். வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னு பேசுவதை தவிர்க்கவும். பணிவாக பேசுவது நல்லது. கூடுமான வரை வாயை கட்டுப்படுத்திப் பேசாமல் இருப்பதே சிறந்தது. பரிகாரம்– ஏழரை சனி முடிந்து போகும் போது நன்மை உண்டாகும்.தயிர் சாதத்தில், எள் கலந்து, பெருமாள் கோயிலில் மதிய வேளையில் தானம் செய்வது நல்லது.

மகரம்
அதனால் தனுசு ராசியினர் அடுத்த 2 1/2 ஆண்டுகளுக்கு சற்று கவனமாக இருப்பதால் தேவையற்ற இழப்பு, விரயம் நிகழாமல் தவிர்க்கலாம்.சோம்பேறித்தனம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் மந்தமாக இருக்கும். வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.உங்கள் உத்தியோகத்தில் இருந்த தடங்கல்களும், மன சங்கடங்களும் தீரும். மேலதிகாரிகள் அனுசரித்துச் செல்வார்கள். உங்களுக்கான முன்னேற்ற நிலையைப் பார்க்க முடியும்.சந்தை நிலவரத்தை அறிந்து கொள்வதும், துறை ரீதியான ஆலோசனைப் பெறுவதும் அவசியம்.பரிகாரம் – திருவாரூர், அக்னீஸ்வரர் பொங்கு சனீஸ்வரர் திருக்கோவில், திருக்கொள்ளிக்காடு ஆலயத்தில் வழிபட்டு வருவது மிக நல்ல பலனைத் தரும். சோம்பேறித்தனம் தவிர்த்தால் மிக நன்மை உண்டாகும். இறை வழிபாடு நன்மை தரும். சனிக்கிழமைகளில் அனுமனையும், சனி பகவானையும் வழிபட்டு வர உங்கள் குறை நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

​கும்பம்
திருமண பாக்கியம், வீடு, மனை, பழைய வீடு புதுப்பித்தல் போன்ற சுப விரய பலன்களை செய்வதன் மூலம், உங்களுக்கு ஏற்படக்கூடிய வீண் விரய செலவுகள், உங்களுக்கு முதலீடுகளாக மாற்றிக்கொள்ளலாம்.அடுத்தவர்களின் தவறை சுட்டிக்காட்டுவதும், அடுத்தவரை திருத்துவதை தவிர்த்து தன் முன்னேற்றத்திற்கு என்ன முயற்சி செய்ய வேண்டுமோ அதை செய்தாலே போதும். ஆபரணங்கள், விலையுயர்ந்த பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளது என்பதால் அதில் கவனம் தேவை. பரிகாரம்– தன்னம்பிக்கை சார்ந்த கதைகள் படித்தல், குழந்தைகளுடன் விளையாடுதல், சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் நன்மையை தரும்.ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

​மீனம்
உங்களின் திறமை பளிச்சிடும். புதிய பொறுப்புகள், பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் ஆலோசனையை மேலதிகாரிகள் எடுத்துக் கொள்வர்.புதிய பெரிய அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் ஆலோசனைகள் உங்கள் தொழில், வியாபாரத்தில் பல புதிய திட்டங்களை தீட்டி அதன் மூலம் பல்வேறு வெற்றிகள் மற்றும் லாபங்கள் கிடைக்கும். பணம் மற்றும் பொருள் கொடுக்கல், வாங்கலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த லாபம் உங்கள் தொழிலில் கிடைக்கும். இறக்குமதி, ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு சாதகமான நிலை இருக்கும். உங்களின் வேலையாட்கள் மூலம் அனுகூல நிலை இருக்கும்.மிகவும் அதிர்ஷ்ட பலனைப் பெறக்கூடிய ராசிகளில் ஒன்றாக மீன ராசியினர் உள்ளனர்.பரிகாரம் – சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வதும், ஜெய் ஸ்ரீ ராம் என்ற அற்புத மந்திரத்தை உச்சரித்து வாருங்கள்.மகான்கள், சித்தர்களின் ஆலயங்களில் தரிசனம் செய்வது நல்லது. கோயில் உழவாரப் பணிகளில் ஈடுபடுவதும். ஏழை. எளியோருக்கு உதவிகளை செய்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *