எந்த ராசிக்காரங்களுக்கு தொழில் ரீதியான ராஜயோகம் தெரியுமா !! விருச்சிகத்தில் இருந்து தனுசு செல்லும் சுக்கிரன் !!

ஆன்மீகம்

பிலவ ஆண்டு – ஆனி 30 – புதன்கிழமை (14.07.2021) நட்சத்திரம் : பூரம் 03:42 AM வரை பிறகு உத்திரம் திதி : 08:02 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி யோகம்: அமிர்த யோகம் நல்லநேரம்: காலை 9.15 – 10.15 / மாலை 4.45 – 5.45 புதன்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை) சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் தனுசு ராசிக்குள் நுழைந்துள்ள சுக்கிரனால் 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் என்னவென்பதை இப்போது காண்போம்.

மேஷம் – மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இக்காலத்தில் மேற்கொள்ளும் தொழில் ரீதியான பயணங்கள் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் புதிய வணிக திட்டங்களையும், கூட்டாண்மைகளையும் பெற வாய்ப்புள்ளது. இக்காலம் வர்த்தகங்கள் தங்களின் புதிய தயாரிப்புகள் அல்லது யோசனைகளை சந்தையில் ஊக்குவிக்க சிறந்த காலம். இந்த காலத்தில் செலவுகள் அதிகமாக இருக்கலாம்.எனவே உங்களின் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையே சமநிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். திருமணமானவர்களாக இருந்தால், இந்த காலத்தில் உங்கள் துணை மற்றும் குழந்தைகளுடனான உறவு வலுப்பெறும். உங்களின் வாழ்க்கைத் துணை அவர்களின் தொழிலில் முன்னேற்றத்தையும் செழிப்பையும் பெற வாய்ப்புள்ளது. சிலர் தங்களின் வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்புள்ளது.இந்த ராசியில் பிறந்த மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. அதோடு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இக்காலத்தில் விரும்பிய முடிவுகளைப் பெறலாம். மொத்தத்தில், இந்த சுக்கிர பெயர்ச்சியால் உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமான காலமாக இருக்கும்.பணிபுரிபவர்கள், இக்காலத்தில் பணியிடத்தில் எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் விரும்பிய மற்றும் பயனுள்ள பலன்களைத் தரும். வேலை மாற்றத்தை எ தி ர் பா ர் ப்பவர்களுக்கு வேலை மாற்றம் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணம் மற்றும் கடன்களைத் தீர்க்க நினைப்போருக்கு இக்காலம் சா தகமான காலமாக இருக்கும். தனுசு செல்லும் சுக்கிரனால் மூதாதையர் சொத்தில் இருந்து சில ஆதாயங்களைப் பெறக்கூடும். ஏனென்றால் 4 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 8 ஆவது வீட்டில் நிலைநிறுத்தப்படுகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இந்த காலத்தில் புதிய வீடு வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.மேலும் இக்காலத்தில் உங்கள் மனைவியிடமிருந்து நிதி நன்மைகளையும், உங்கள் மாமியார் தரப்பிலிருந்து ஆதரவையும் பெறுவீர்கள். திருமணமாகாதவர்கள், உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் உறவுகளில் இறங்க வாய்ப்புள்ளது.மாணவர்களுக்கு இக்காலம் சாதகமான காலம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உடல்நலம் ப ல வீ னமா க இருக்கும். அதுவும் சளி, இருமல் மற்றும் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமணமாகாதவர்கள் புதிய உறவுகளில் நுழைய வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு இந்த பெயர்ச்சி பயனளிப்பதாக தெரியவில்லை. இந்த சுக்கிர பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பா தி க் க ப் பட க்கூடும்.தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் லாபம் மற்றும் வருமானம் நிறைத்ததாக இருக்கும். வணிகர்கள் குறிப்பாக கூட்டாண்மை வணிகம் புரிபவர்கள் வளர்ச்சியையும், லாபத்தையும் காணக்கூடும். மேலும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சருமம், ஹார்மோன்கள் மற்றும் சிறுநீரக தொற்று தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.எனவே இதைத் தவிர்க்க அதிக நீரைக் குடியுங்கள். போதுமான நீரைக் குடித்தால், உடல் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்கள் அவர்களின் தாயின் ஆரோக்கியத்தில் சரிவைக் காணலாம். மேலும் இக்காலத்தில் எந்த ஒரு பழுதுபார்க்கும் பணியையும் தொடங்க இது சரியான காலம் அல்ல.உங்கள் வீடு, அலுவலகம் அல்லது வாகனம் என எதை பழுதுபார்க்க நினைத்தாலும், உங்களின் பணம் மற்றும் ஆற்றல் இரண்டுமே வீணாக வழிவகுக்கும்.உறவினர்களுடன் பெற்றோரின் சொத்து தொடர்பாக மோ த ல் க ள் ஏற்பட்டு, உங்கள் மன அமைதியை சீர்குலைக்கும். எனவே அமைதியாக இருந்து, சரியான நேரம் வரும் போது முடிவெடுங்கள். தொழில் ரீதியாக, சுக்கிரன் உங்கள் வேலையை மாற்ற ஊக்குவிக்கலாம்.ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால், அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை பெற்று பின் முடிவெடுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தூக்க பிரச்சனை உங்களை தொந்தரவாக இருக்கக்கூடும். மேலும் இதனால் கண் பார்வை பிரச்சனை ஏற்படலாம். எனவே தூ க் க த் திற் கு முக்கியத்துவம் அளித்து, சரியான தூ க் க த்தை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரக்கூடும். தொழில் ரீதியாக, இது உங்களுக்கு சாதகமான காலமாகும். அதுவும் உங்களின் யோசனைகளை வெற்றிகரமான செயல்படுத்தும் நேரமாகும்.அரசு ஊழிராக இருந்தால் அல்லது மாற்றத்தக்க வேலையில் இருந்தால், விரும்பிய இடத்திற்கு நீங்கள் மாற்றப்படலாம். வணிகர்கள் தங்கள் கொள்கைகளால் சிறந்த வருமானத்தையும், லாபத்தையும் பெறலாம்.முக்கியமாக இக்காலம் உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம். திருமணமாகாதவராக இருந்தால், உறவில் நுழைவதற்கான சரியான காலம் இது.திருமணமானவர்களுக்கு, இரக்கம், அறிவு, விளையாட்டுத்திறன் மற்றும் நல்லிணக்கம் நிறைந்ததாக இருக்கும். இந்த சுக்கிரனின் பெயர்ச்சியால், உங்கள் குழந்தைகளுடனான உறவு வலுப்பெற வாய்ப்புள்ளது.குடும்பத்தை விரிவுப்படுத்த விரும்பும் தம்பதிகள் இக்காலத்தில் ஒரு நல்ல செய்தியைப் பெறுவார்கள். மாணவர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் பயனடைய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் பிரச்சனையின்றி நிலையானதாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் உங்கள் தாயிடமிருந்து ஆதாயங்களையும், லாபத்தையும் பெற வாய்ப்புள்ளது.இந்த பெயர்ச்சியால் உங்கள் ஆடம்பரம் மற்றும் வசதிகள் அதிகரிக்கும். மேலும் இக்காலத்தில் சொத்து அல்லது வாகனம் வாங்கலாம். சிலர் வீடு அல்லது அலுவலகத்தின் உட்புறங்களை அலங்கரிக்கலாம்.மேலும் இக்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறவும், பெயர், புகழ் மற்றும் செல்வத்தை சம்பாதிக்கவும் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.அதோடு இக்காலத்தில் உங்கள் வழிகாட்டிகள், தந்தை மற்றும் உயர் அதிகாரிகளிடமிருந்து சாதகமான ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது. இது உங்களுக்குத் தேவையான ஊக்கத்தை வழங்கும். மொத்தத்தில் இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமானது என்பதை நிரூபிக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரக்கூடியதாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் உடன் பிறப்புக்களிடமிருந்து நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. தொழில்ரீதியாக, உங்கள் லட்சியத்தை அடைய அதிக கவனத்தை செலுத்தி முயற்சிப்பீர்கள். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். அலுவலகத்தில் உங்களின் கருத்துக்களைப் பரிமாற முன்பு கற்பனை செய்து பார்க்காத பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.மேலும் இக்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் குறுகிய பயணங்களும் லாபத்தை அளிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள், அதிகப்படியான விருப்பத்தினால் திருமண வாழ்க்கையிலும், உறவிலும் சில சிக்கல்களை உருவாக்கலாம்.ஆகவே உங்களின் விருப்பங்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனபல் இந்த ராசிக்காரர்கள் பயனுள்ள நன்மைகளைப் பெறுவார்கள்.தனிப்பட்ட வாழ்க்கைப் பொறுத்தவரை, திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை கண்டறிவார்கள். திருமணமானவர்களுக்கு துணையுடனான உறவு நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு முழு ஆதரவையும், பாசத்தையும் வழங்குவார். தொழில் ரீதியாக, எந்தவொரு புதிய முயற்சியையும் தொடங்குவதற்கான ஒரு நல்ல காலம். இந்த காலகட்டத்தில் உங்கள் தனிப்பட்ட நிதிகளை மேம்படுத்த வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சியால் நீங்கள் பல்வேறு மூலங்களிலிருந்து வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது.இருப்பினும் உங்கள் மனைவி அல்லது காதலியின் ஆரோக்கியம் ப ல வீ னமா க இருக்ககூடும். எனவே உங்கள் துணையுடன் சில தரமான நேரத்தை செலவிடுங்கள். இது அவர்களுக்கு ஒருவித வலிமையைக் கொடுக்கும்.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். தொழில் ரீதியாக, உங்கள் வருமானத்தில் உயர்வைக் காண்பீர்கள். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண உதவும் பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல லாபங்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்களுடனான உங்கள் பிணைப்பு இந்த காலகட்டத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது.திருமணமானவர்கள், தங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடவில்லை என்று புகாரளிப்பதைக் காணலாம். எனவே உங்கள் துணையின் கோரிக்கையை கவனித்து, வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையைப் பேண முயற்சி செய்யுங்கள்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருப்பதாக தெரியவில்லை. எனவே யோகா, தியானம் மற்றும் ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டு, ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வெளிநாட்டில் குடியேற வாய்ப்புகளைத் தேடும் அல்லது ஏற்கனவே பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு அமைப்புகளில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.தொழிலில் உள்ள சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான நல்ல காலம். இந்த காலத்தில் வருமானம் மற்றும் பல்வேறு வணிக திட்டங்களை பெற பல வாய்ப்புக்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் நன்மைத் தீமைகளை அலசி ஆராய்ந்த பின்னரே முடிவுகளை எடுக்க வேண்டும்.இல்லாடிவிட்டால், பெரிய இ ழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது.உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நல பிரச்சனைகளால் அவஸ்தைப்படலாம். இதனால் அவர்கள் அ டி க் க டி எளிதில் எ ரி ச் சல டை வா ர்கள்.எனவே வீட்டில் அமைதியான சூழலைப் பராமரிக்க, உங்கள் துணையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.உங்கள் குழந்தைகள் பிடிவாதமாக இருந்தால், அதை க டு மை யா ன முறையில் கண்டிப்பதற்கு பதிலாக அவர்களுடன் நட்புரீதியான அணுகுமுறையைப் பின்பற்ற முயற்சித்தால், இது குழந்தைகளுக்கும் உங்களுக்குமான உறவை பாதிக்காது இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 11ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும். திருமணமாகாதவர்கள் ஒரு உறவில் நுழைய விரும்பும் போது, அதைக் கெடுக்க யாரேனும் ஒருவர் சதி செய்ய வாய்ப்புள்ளது.திருமணமானவர்கள் தங்கள் உறவுகளில் பேரின்பம், நல்லிணக்கம் மற்றும் மனநிறைவு ஆகியவற்றில் தடுமாறக்கூடும். ஆனால் உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது.மேலும் அவர்களுக்கு பிடித்த இடத்திற்கும் அழைத்து செல்வீர்கள். இது உங்கள் இருவருக்குமான உறவை பலப்படுத்தும். இந்த காலத்தில் நீங்கள் புதிய நண்பர்களையும், தொடர்புகளையும் உருவாக்குவீர்கள். இது உங்களுக்கு பிற்காலத்தில் நன்மைகளை வழங்குவதாக இருக்கும்.தொழில் ரீதியாக, பணியிடத்தில் உங்கள் உற்பத்தித்திறனையும், செயல்திறனையும் அதிகரிக்க உங்களின் மல்டிடாஸ்க் திறன் உதவும். இதனால் உங்கள் உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.சுயதொழில் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் பல ஆதாரங்களில் இருந்து பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. வர்த்தகர்கள், பங்குச் சந்தையில் நல்ல லாபங்களைப் பெற வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான முடிவுகளையேப் பெறுவார்கள்.தனிப்பட்ட முறையில், இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையுடன் சில மனோபாவ வேறுபாடுகள் அல்லது வா க் கு வா தங்களை எதிர்கொள்ளக்கூடும். உங்கள் இளைய உடன்பிறப்புகளுடனான சில த க ரா று க ள் உங்கள் மன அமைதியையும், வீட்டுச் சூழலையும் பா தி க் க க் கூடும்.எனவே வீட்டுச் சூழலை அமைதியாக பராமரிக்க விரும்பினால், அமைதியாக இருங்கள் மற்றும் க டு மை யா ன வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். பணிபுரிபவர்கள், பணிச்சூழலில் சில விரைவான மாற்றங்களைக் காணலாம்.இது உங்களுக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த மாற்றம் உங்களை பொறுப்புள்ளவர்களாக மாற்றவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.வணிகர்கள் நல்ல லாபத்தை ஈட்டக்கூடும். மாணவர்கள், குறிப்பாக அரசு அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *