உலகிலேயே தொப்பை இல்லாமல் இருப்பது ஜப்பானியர்கள் தான் !! என்ன ரகசியம் தெரியுமா !!

விந்தை உலகம்

உலகிலேயே எப்போதுமே சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள் மற்றும் தொப்பையின்றி இருப்பவர்கள் யார் என்று பார்த்தல் அது ஜப்பானியர்கள் தான். இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் , அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் டயட் தான் காரணமாம். பொதுவாகவே அவர்கள் வெளி இடங்களில் சாப்பிடுவது இல்லையாம், அதாவது பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவைத் தானாம் சாப்பிடுவார்கள். ஆனால் நாம் தற்போது பாஸ்ட் மற்றும் ஜங்க் உணவுகளின் மீது அதிகம் கவனம் செலுத்தி, நம் பாரம்பரிய உணவையே மறந்துவிட்டோம். இதனால் தான் நம் நாட்டில் பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இப்போது ஜப்பானிய மக்களின் பிட்னஸ் மற்றும் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதன் ரகசியத்தைக் காணலாம்.

அளவான உணவு மற்றும் பரிமாறும் விதம்

ஜப்பானிய ஹோட்டல்களுக்கு சென்றால், அங்கு அவர்கள் சிறிய பௌலில் உணவைக் கொடுப்பதோடு, அந்த அளவான உணவிலேயே வயிறு நிரம்பிவிடும். இதற்கு அவர்கள் உணவை அலங்கரித்து பரிமாறுவது தான். மேலும் ஜப்பானியர்கள் உணவை மெதுவாக சாப்பிடுவார்கள். இதனால் செரிமான மண்டலம் சீராகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட்டு, பிட்டாக இருக்க உதவுகிறது.

டயட் என்பதே இல்லை

ஜப்பானிய பெண்கள் டயட் என்பதையே மேற்கொள்ளமாட்டார்கள். இவர்கள் அனைத்து வகையான உணவையும் அச்சமின்றி வாங்கி சாப்பிடுவார்கள். அதே சமயம், அவர்கள் எந்த ஒரு இடத்திற்கும் நடந்தே செல்வார்கள். இது தான் அவர்களின் பிட்டான உடலுக்கு காரணமும் கூட.

மிதமான தீயில் சமையல்

ஜப்பானியர்கள் சமைக்கும் போது மிதமான தீயில் தான் உணவை சமைப்பார்கள். இதனால் உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு குறையாமல் அப்படியே கிடைக்கும். மேலும் இவர்களும் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களான ஆலிவ் ஆயிலைத் தான் சமையலில் பயன்படுத்துவார்கள்.

மீன், சோயா, சாதம், காய்கறிகள் மற்றும் பழங்கள்

ஜப்பானியர்கள் பெரும்பாலும் உணவை வீட்டிலேயே தான் சமைத்து சாப்பிடுவார்கள். அவர்களின் பாரம்பரிய உணவுகளாவன க்ரில் மீன், அளவான சாதம், வேக வைத்த காய்கறிகள், ஒரு பௌல் மிசோ சூப் மற்றும் க்ரீன் டீ போன்றவை தான். மேலும் ஜப்பானியர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவது மிகவும் அரிது.

சோயா பீன்ஸ் மற்றும் க்ரீன் டீ

ஜாப்பானியர்கள் சோயாவை அதிகம் சாப்பிடுவார்கள். அதிலும் ஒரு நாளைக்கு 50 கிராம் சோயாவை பல உணவுகளில் சேர்த்து எடுத்துக் கொள்வார்களாம். அதுமட்டுமின்றி, உணவிற்கு பின் ஒரு கப் க்ரீன் டீ குடிப்பார்களாம். இதனால் இதயம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, நீண்ட நாட்கள் இளமையுடனும் வாழ முடிகிறதாம்.

காலை உணவு அவசியம்

ஜப்பானில் காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. காலை வேளையில் தான் பல வெரைட்டியான உணவுகள் பரிமாறப்படும். முக்கியமாக மிசோ சூப்பை காலை வேளையில் கண்டிப்பாக சாப்பிடுவார்கள். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரோபயோடிக்ஸ் அதிகம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *