தாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்… வைரலாகும் காட்சி

விந்தை உலகம்

எப்பொழுதுமே தாய்ப்பறவை குஞ்சுகளை தன்னுடன் தான் வைத்திருக்கும். பிறந்தது முதல் அவை ஓரளவு வளர்ச்சி அடையும் வரை எந்த பறவை இனங்களும் தம்முடன் குஞ்சுகளை வைத்துக்கொள்ளும், அதே வேளையில் தாய்ப்பறவை பலவற்றை குஞ்சுகளுக்கு கற்றுக் கொடுக்கும். இவ்வாறு தாய்ப்பறவை குஞ்சுகளுக்கு கற்று கொடுக்கும் போது அதை பார்க்கும் அழகே வேற மாதிரி இருக்கும். இவ்வகையான இயற்கை காட்சிகளை நம்மால் இலகுவாக பார்த்திட முடியாது. எப்பொழுதும் தாய்பறவையுடனே குஞ்சுகளும் சுற்றி திரியும், குஞ்சுகளாக இருக்கும் பொது அவைகள் செய்யும் செயல்களை அனைத்துமே ரசிக்க கூடியதாக காணப்படும். அதிலும் அந்த குஞ்சுகளை பார்க்கும் போதே இன்னும் ரசனையாக இருக்கும்.

இவ்வாறான விடியோக்கள் நாம் பார்ப்பது அரிதாக காணப்பட்டாலும், ஒரு சிலர் இதனை எடுத்து இணையத்தில் பகிர்ந்து விடுவார்கள். இவ்வாறு பகிரப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைறால் ஆகி விடுவதும் உண்டு.

அந்த வகையில் IFS அதிகாரி சுதா ராமன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமையன்று வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில், தாய் பறவை ஒன்று குளத்தில் தனது குஞ்சுகளுடன் நீந்திக்கொண்டிருக்கிறது. அந்த பறவையின் குஞ்சுகளில் ஒன்று, திடீரென தனது தாயின் முதுகில் ஏறி பயணம் செய்கிறது.

பின்பு, மற்றொரு பறவையும் தனது தாய் மீது ஏறுகிறது. இந்த அழகான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இயற்கை எவ்வளவு அழகானது என்பதை இதுபோன்ற சில வீடியோக்களை பார்க்கும்போது தான் நம்மால் உணர முடிகிறது.

இதோ அந்த வீடியோ காட்சி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *