தடைப்பட்ட திருமண காரியங்கள் எல்லாம் தடபுடலாக நடக்க ஆரம்பிக்க வேண்டுமா? வியாழக்கிழமையில் இப்படி மட்டும் செய்து பாருங்க அப்புறம் டும் டும் தான் !!

ஆன்மீகம்

இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு. திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது. திருமணம் ஒரு உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை.

குரு பகவான் பார்வை பெற, தோஷங்கள் நீங்க, கோடான கோடி புண்ணியம் சேர 3 வியாழக்கிழமையில் கொண்டை கடலையை இப்படி செய்யுங்கள் குரு பகவான் இருக்கும் இடத்தை விட அவர் பார்க்கும் இடத்திற்கு வலிமை அதிகம் என்று கூறுவார்கள். குரு பகவான் பார்க்கும் ராசிக்கு குரு பலன் வந்திருக்கிறது என்று சொல்லுவார்கள். குரு யோகம் ஒருவருடைய ஜாதகத்தில் கைகூடி வந்தால் சுப யோகம் கைகூடி வந்ததற்கு சமமாகும். தடைப்பட்ட திருமண காரியங்கள் எல்லாம் தடபுடலாக நடக்க ஆரம்பிக்கும்.

விட்டு சென்ற உறவுகளெல்லாம் மீண்டும் வந்து இணைவார்கள். இத்தகைய நன்மைகளை அள்ளித் தரக்கூடிய குரு யோகம் பெறுவதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம் தான் இது! அதை எப்போது எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம். குருவின் திருவருள் பெற எப்பொழுதும் வியாழக்கிழமையில் குரு பகவான் வழிபாடு செய்வது உத்தமம். குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள் ஆகும். மஞ்சள் நிறத்தை வியாழன் கிழமை தோறும் உடுத்திக் கொள்வது சகல வெற்றிகளையும் உங்கள் பக்கம் கொண்டு வந்து சேர்க்கும்.

அது போல் கொண்டைக்கடலை என்பது குருவுக்கு உகந்த ஒரு தானியம் ஆகும். குருவருள் பெற கொண்டைக்கடலை தானம் செய்து வருவது காலம் காலமாக பக்தர்கள் கடைபிடிக்கும் ஒரு நடைமுறை விஷயமாகும். இந்த கொண்டைக் கடலையை வைத்து என்ன பரிகாரம் செய்ய திருமண தடைகள் அகலவும், குழந்தை பேறு உண்டாகவும், தொழில் விருத்தி அடையவும், வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கவும் வியாழக்கிழமையில் குரு வழிபாடு செய்வது உத்தமம். வியாழக்கிழமை அன்று குரு பகவான் சன்னிதிக்குச் சென்று அங்கு இருக்கும் குருவின் பாதத்தில் கொண்டைக் கடலையை வைத்து உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

நவகிரக சந்நிதி இல்லை என்றால் குரு தட்சிணாமூர்த்தி அவர்களின் பாதத்தில் கொண்டைக் கடலையை வைத்து இதே போல அர்ச்சனை செய்து கொண்டு வரலாம். கொண்டு வந்த கொண்டைக் கடலையை மறுநாள் வெள்ளிக் கிழமையில் செம்பு அல்லது பித்தளை சொம்பில் தண்ணீர் முழுவதுமாக நிரப்பி அதில் ஊற வைக்க வேண்டும். அதில் கொஞ்சம் மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கையை சொம்பின் மீது மூடி வைத்து, ‘ஓம் குருவே சரணம்’ என்கிற இந்த நாமத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை உங்கள் உச்சந்தலையில் படுமாறு தெளித்துக் கொள்ளுங்கள்.

அதே போல வீடு முழுவதும் மூலை முடுக்குகளிலெல்லாம் தண்ணீரை மாவிலை கொண்டு தெளித்து கொள்ளுங்கள். இதனால் வீட்டில் இருக்கும் சகல தோஷங்களும் உங்களை விட்டு நீங்கும் என்பது நியதி. சகல தோஷங்களும் நிவர்த்தியாகிய பின்பு மீதம் இருக்கும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். கொண்டைக் கடலையை வடிகட்டி அதை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து மூன்று வாரம் அதாவது 21 நாட்கள் வரை கொண்டை கடலையை பயன்படுத்த வேண்டும்.

21 நாட்கள் கொண்டைக் கடலையை இப்படி செய்து வர குருவருள் பெற்று அத்தனை தடைகளும் எளிதாக நீங்க செய்யும். 21வது நாளில் வியாழன் கிழமை அன்று குருவின் சன்னிதிக்கு சென்று அங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிறப் பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அங்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள் நிறத்தால் ஆன நைவேத்தியங்களை தானம் செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் என்று ஏதாவது ஒரு பதார்த்தத்தை வீட்டிலிருந்தே செய்து கொண்டு வந்து பக்தர்களுக்கு தானம் கொடுப்பது பரிகாரத்தை நிறைவு செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *