புதன் வக்ரநிலையில் ஏற்பட்ட அ தி ரடி மாற்றம்… ஆ ட்டி படைத்த ராசிகளையும் அ லறவிடுவார்! யாருக்கு வி பரீ த ராஜயோகம் !!

ஆன்மீகம்

புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் ரிஷப ராசியில் வக்ரநிலையில் சஞ்சரித்தார். வக்ரம் முடிந்து தற்போது நேர்கதியில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு புதன் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். புத்திநாதன் புதன் தனது வீடான மிதுன ராசியில் சூரியனுடன் ஆட்சி பெற்று அமர்வதால் சில ராசிக்காரர்களுக்கு வி பரீ த ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும்.சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும். இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…இந்த புதன் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்வதால் இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவா்களுக்கு பிரச்னை ஏற்படும். பண வருமானத்திற்குப் பஞ்சமிருக்காது என்றாலும் செலவுகளைக் கட்டுப்படுத்தா விட்டால் நிதி நெ ருக் கடியும் கடன் தொல்லையும் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம்.

ரிஷபம்
சுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் அமர்வது உற்சாகமான கால கட்டமாகும். பேச்சில் இனிமை கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருமானம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.
உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். புதன்கிழமை பெருமாளை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்
புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்கள் ராசி அதிபதி ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் அற்புத பலனை தர உள்ளார். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். உங்கள் ராசியில் அமரும் புத பகவானால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த சின்னச்சின்ன ச ண் டை ச ச் சரவுகள் நீங்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களின் பேச்சு திறமையால் புதிய வாய்ப்பு, வருமானம் அதிகரிக்கும்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசிக்கு 12, 3ஆம் வீட்டு அதிபதி. உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் தி டீ ர் யோகம் வரும். வி ப ரீத ராஜயோகத்தினால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். சிறிய அளவில் பயணங்கள் ஏற்படும்.
வம்பு வழக்குகளால் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நோய் பா தி ப்புகள் முடிவுக்கு வரும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு 2 மற்றும் 11ம் வீட்டின் அதிபதி புதன் பகவான். உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.
எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பணவருமானம் அதிகரிக்கும். தி டீா் வேலை வாய்ப்பு தேடி வரும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். நன்மைகள் நடைபெற பச்சை நிற ஆடைகளை அணியவும். இந்த காலத்தில் உங்களுக்கு கண் திருஷ்டி ஏற்படும் ஆஞ்சனேயரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி
புதன் உங்கள் ராசிக்கு அதிபதி. 10ஆம் வீட்டு அதிபதி. ராசி நாதன் புதன் சஞ்சாரம் நிகழ்வது அற்புத பலனைத் தருவதாக இருக்கும். கர்ம, தொழில் ஸ்தானத்தில் இந்த சஞ்சாரம் நிகழ்வது உங்களின் தொழில் விவகாரங்களில் நன்மை அடையலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும். குழந்தைகள் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்கு 9 மற்றும் 12 ஆகிய ராசிக்கு அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உங்களின் சிந்தனை, திறமை, ஆளுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.
உடல் நலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பா திப்புகள் குறையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு புதன் 8 மற்றும் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். வி ப ரீத ராஜயோக காலமாகும். தி டீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருமானம் திருப்தி தரும்.
பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

தனுசு
குருவை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, புதன் பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டு அதிபதி. களத்திர ஸ்தான அதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார்.
தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். புதனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைத்தாலும் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பா திப்புகள் குறைய புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கவும்.

மகரம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் 9ஆம் வீட்டு அதிபதி. ஆறுக்கு அதிபதி 6ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது வி ப ரீத ராஜயோகம் ஏற்படும். இது மன திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். சிறிய முதலீடு செய்தால், நல்ல பலனைப் பெற்றிடலாம். பரிசுகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அரசாங்க தேர்வுகளுக்குத் தயாராகும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வது அதிக நன்மையை தரும்.

கும்பம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசிக்கு 5 மற்றும் எட்டாம் வீட்டு அதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

மீனம்
மீன ராசிக்கு புதன் நான்கு மற்றும் 7ஆம் வீட்டு அதிபதி. சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் வீடு மற்றும் பணி இடத்தில் ஆறுதலான, சுகமான பலனைத் தரும். அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். வேலையில் புரமோசன் கிடைக்கும். பணம் வருமானம் அதிகாிக்கும். மன தைரியம் அதிகரிக்கும். உடலில் இருந்த சோம்பல் விலகி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *