இந்த உணவெல்லாம் சாப்பிடுபவரா நீங்கள் !! உங்க ராசிப்படி நீங்க எந்த உணவு சாப்பிடணும்? இந்த உணவை இந்த ராசியினர் கண்டிப்பா தவிர்க்கணுமாம் !!

ஆன்மீகம்

உணவு எனப்து நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது, ஒருவருடைய தேக ஆரோக்கியம் என்பது அவர்கள் உண்ணும் உணவினை பொறுத்து தான் அமைகிறது. ஒருவர் சுறுசுறுப்புடனும் திறனுடனும் திகழ வேண்டுமெனின் சரியான உணவு பழக்கம் அவசியம், ஆனால் தற்போதைய காலங்களில் இந்த நிலைப்பாடு மாறியுள்ளது என்று தான் கூறலாம், ஏனெனில் உணவு என்பது இது தான் என்ற வரையறையில் இருந்து மாற்றம் பெற்று எதை வேண்டுமானாலும் உண்ணலாம் எனும் நிலைக்கு மனித சமூதாயம் மாறியுள்ளது. உங்கள் ராசி சார்ந்து நீங்கள் உட்கொள்ள வேண்டிய உணவு எவை? மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு எவை? என்பது குறித்த விரிவான தகவல்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

​மேஷ ராசி
மேஷ ராசிகாரர்களுக்கு கீரை, அக்ரூட் பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், வெள்ளரி, பயிறு வகைகள், ஆப்பிள், முள்ளங்கி, பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவை விருப்பமான உணவு.குறிப்பாக மீன் மற்றும் பாதாம் எடுத்துக் கொள்வது அவசியம்.

​ரிஷப ராசி
ரிஷப ராசிகாரர்கள் உங்களின் உடலில் இயற்கையாகவே சோடியம் சல்பேட் அதிகம் இருக்கும். அதாவது உப்பு சத்து உடலில் அதிகளவில் இருப்பதால் பீட்ரூட், காலிஃபிளவர், வெங்காயம், வெள்ளரி, பூசணி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தாமிரம் உங்கள் உடலில் கனிமமாக இருப்பதால், கல்லீரல், மாட்டிறைச்சி, ஆட்டு இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, பட்டாணி, முந்திரி பருப்பு, பாதாம் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிறிய அளவு மட்டும் சாப்பிட வேண்டும்.நீங்கள் சர்க்கரை சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிட விரும்புவீர்கள். இரவு உணவை சீக்கிரம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு உணவிற்குப் பிறகு ஒரு சிறிய நடைப் பயிற்சி செல்வது உடலிற்கு நல்லது..

​மிதுன ராசி
மிதுன ராசிகாரர்கள் கீரை வகைகள் அடிக்கடி சாப்பிடுவது அவசியம். அதுபோன்று தக்காளி, ஆரஞ்சு, பச்சை பீன்ஸ், பாதாம், பிளம்ஸ், கேரட், காலிஃபிளவர், தேங்காய், ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, இரால், முட்டை, வெங்காயம், கோதுமை, கிராம்பு போன்றவற்றை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு நம்மை தரும். சிகரெட்டு மற்றும் மதுவை தவிர்ப்பது நல்லது.மன ஆறுதலுக்காக இசையை கேளுங்கள்.

​கடக ராசி
கடக ராசிகாரர்கள் மீன் அதிகம் சாப்பிட வேண்டும். மாவு சத்து நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்த்துக் கொள்வது உங்கள் உடலிற்கு நல்லது. உங்களில் சிலருக்கு இனிப்பான உணவை சாப்பிடுவதால் பல் கூச்சம் கூட ஏற்படக்கூடும். நீங்கள் அதிகம் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. எ:கா: முலாம்பழம், வெள்ளரிக்காய், பூசணிக்காய்,. முட்டைக்கோஸ், கீரை மற்றும் காளான் ஆகியவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது.

​சிம்ம ராசி
சிம்ம ராசிகாரர்களே உங்கள் உடலில் மெக்னீசியம் பாஸ்பேட் என்னும் உப்பு இயற்கயாகவே இருப்பதால், முட்டை மஞ்சள் கரு, கம்பு, அத்திப்பழம்,எலுமிச்சை, தேங்காய், சூரியகாந்தி விதைகள், ஆப்பிள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தேன் மற்றும் இறைச்சியை அதிகம் சாப்பிட வேண்டும். ஈகோ மற்றும் டென்சனை தவிர்ப்பதை உங்கள் உடலிற்கு அதிக ஆரோக்கியத்தைத் தரும்.

​கன்னி ராசி
கன்னி ராசியினரின் உடலில் பொட்டாசியம் சல்பேட் என்னும் உப்பு உங்கள் செல்களில் இயற்கையாககவே இருப்பதால், உங்கள் உணவில் எலுமிச்சை, பாதாம், சிக்கரி, கோதுமை, சீஸ், ஆலிவ் எண்ணெய், ஓட்ஸ், மாட்டிறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறியில் சாலட் செய்து சாப்பிட வேண்டும். பருப்பு, அரிசி, காய்கறி மற்றும் லஸ்ஸி ஆகியவற்றின் வழக்கமான உணவு உங்களுக்கு அவசியம்.

​துலாம் ராசி
துலாம் ராசிகாரர்கள் பாதாம், பிரவுன் ரைஸ் அரிசி, பட்டாணி, ஓட்மீல், பீட்ரூட், உலர் திராட்சை, கோதுமை, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, கீரை மற்றும் சோளம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவு பொருட்களை அளவுடன் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் பால் மற்றும் பழங்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும். இறைச்சி உணவுகளை வாரத்திற்கு இருமுறை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதிக காரம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

​விருச்சக ராசி
விருச்சக ராசிகாரர்களே, உங்கள் உணவில் அத்திப்பழம், வெங்காயம், கடுகு, கீரைகள், காலிஃபிளவர், தேங்காய், முள்ளங்கி, கருப்பு செர்ரி, ஆட்டு இறைச்சி மற்றும் நண்டு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பல்லில் ஈறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே கவனிப்பது அவசியமாகும். மது, போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது உடலிற்கு நல்லது, தந்தூரி வகை உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

​தனுசு ராசி
தனுசு ராசிகாரர்கள், உங்கள் உடலில் சிலிகான் என்னும் உப்பு இயற்கயாகவே இருப்பதால்,நீங்கள் முந்திரி, ஆப்பிள், ஓட்ஸ், முட்டை, ஸ்ட்ராபெர்ரி, பழங்கள் மற்றும் காய்கறிகள், பேரிச்சம் பழம், செர்ரி, தக்காளி, பச்சை பீன்ஸ், சோளம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், காரம் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. புகைபிடித்தலும் அப்படித்தான். தனுசு ராசிகாரர்கள் அதிகம் விரும்புவது பிரியாணியைத் தான், ஆனால் அதையும் நீங்கள் அளவுடன் தான் சாப்பிட வேண்டும்.

​மகர ராசி
மகரை ராசியினர் உங்கள் உடலில் கால்சியம் பாஸ்பேட் என்னும் உப்பு கலந்து இருப்பதால், இந்த உப்பு கொண்ட உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது அத்திப்பழம், கீரைகள், பசும் பால், ஆரஞ்சு, எலுமிச்சை, முட்டையின் மஞ்சள் கரு, முட்டைக்கோஸ், கோதுமை, பாதாம், ஆட்டு இறைச்சி, பாலாடைக்கட்டி, பிரவுன் அரிசி, மீன்,மற்றும் கோதுமை, ஆனால் எல்லா வகையான ரொட்டிகளையும் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

​கும்ப ராசி
உங்கள் செல் உப்பு சோடியம் குளோரைடு என்பதால், இயற்கையாகவே இந்த பொருளை உங்கள் உணவில் ஒரு பெரிய விகிதத்தில் சேர்க்க வேண்டும். இரால், கீரை, மீன், அக்ரூட் பருப்புகள், கடல் மீன், பேரிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், முள்ளங்கி, சோளம், திராட்சைப்பழம் போன்றவை ஆகும். நீச்சல் மற்றும் அனைத்து வகையான வெளி விளையாட்டுகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.

​மீன ராசி
நீங்கள் பீட்ரூட்,கல்லீரல், முட்டையின் மஞ்சள் கரு, கீரை, வெங்காயம், முழு தானிய வகைகள்,முந்திரி, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, ஆட்டு இறைச்சி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதயம் அல்லது கல்லீரல் கோளாறுகள் ஏற்படலாம். கவனமாக உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்.ஸ்ட்ராபெரி மில்க்ஷேக்கை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர ஆட்டு இறைச்சி தான் உங்கள் உடலிற்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *