சூரியன் சனி சேர்க்கையால் ஏற்பட போகும் அ தி ரடி மாற்றம் என்னென்ன? யாருக்கெல்லாம் பே ரா ப த் து.. என்ன பரிகாரம் செய்வது !!

வைரல்

இரு கிரகங்களும் எதிரி கிரகங்களாக உள்ளன. அதாவது சனி பகவான் பிறந்ததும் அவரை சூரியன் ஒதுக்கியதாகப் புராண கதைகள் கூறுகின்றன. சூரியன் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சிம்மம் அல்லது சூரியனின் நட்பு கிரகமான மேஷத்தில் இந்த சேர்க்கை இருப்பின் தந்தையின் சொல்லே ஓங்கி இருக்கும்.​ அதே சமயம் சனி ஆதிக்கம் பெற்ற மகரம், கும்பம் அல்லது சனியின் நட்பு கிரகமான சுக்கிரனின் துலாம் ராசியில் இருந்த அமைப்பு இருப்பின் மகனின் கை ஓங்கி இருக்கும். தற்போது சூரிய – சனி கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டால் எப்படிப்பட்ட பலன் குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சூரியன் – சனி இருவரும் எதிர் எதிர் கிரகங்கள் என்பதால் அவர்கள் இணைந்தால், அப்போது குடும்பத்தில் தந்தை – மகன் இடையேயான உறவில் பிரச்னை ஏற்படும். இருவரின் மனதளவில், உறவு சீராக இருக்காது. உதாரணமாக சிலரின் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பு இருக்கும். அப்படி இருக்கும் ஜாதகத்தினர் தந்தை – மகன் உறவில் பிரச்னையால் பிரிந்து இருப்பார்கள். அல்லது தந்தை – மகன் உறவு நன்றாக புரிந்தால் இருந்தாலும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து இல்லாமல் வெவ்வேறு இடங்களில் இருப்பார்கள். இந்த அமைப்பு மற்ற கிரகங்களின் பலம் மற்றும் பலவீனத்தைப் பொறுத்து அமையும்.

யார் கை ஓங்கி இருக்கும்?
சூரியன் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சிம்மம் அல்லது சூரியனின் நட்பு கிரகமான மேஷத்தில் இந்த சேர்க்கை இருப்பின் தந்தையின் சொல்லே ஓங்கி இருக்கும். அதே சமயம் சனி ஆதிக்கம் பெற்ற மகரம், கும்பம் அல்லது சனியின் நட்பு கிரகமான சுக்கிரனின் துலாம் ராசியில் இருந்த அமைப்பு இருப்பின் மகனின் கை ஓங்கி இருக்கும். சூரியன் – சனி சாராத மற்ற இடங்களின் பலன் கூற வேண்டுமெனில் சனியின் நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன் அதிபதிகளாக இருக்கும் வீடுகளில் இணைவு இருந்தால் மகனின் ஆளுமை அதிகமாகவும், குரு, செவ்வாய், சந்திரன் ஆகிர கிரகங்கள் ஆளும் இடத்தில் சேர்க்கை பெற்றிருப்பின் தந்தையின் ஆளுமை அதிகமாக இருக்கும்.

எப்படிப்பட்ட பிரச்னை ஏற்படும் ?
சூரியன் – சனி இணைவு எந்த பாவத்தில் இருக்கிறதோ அதைப் பொறுத்து பலன் ஏற்படும். அதாவது 4ம் இடத்தில் இணைந்திருந்தால் சொத்து சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். 6ம் இடத்தில் சேர்க்கை இருந்தால் இருவரும் எதிரி போல இருப்பர். 8ம் இடத்தில் இருந்தால் இருவரிடையே பிரிவு அதிகரித்து வழக்கு போடும் அளவிற்கு பிரச்னை தீவிரமாகும். இந்த இணைவில் சுப கிரகங்களின் பார்வை இருப்பின், அதற்கான பலன் சுபமாகவும், பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருப்பின் அசுப பலன் தருவதாக இருக்கும்.

பரிகாரம்
இந்த கிரக இணைவு பிரச்னை ஜோதிடத்தில் சூரியன் அரசனாகவும், அரசையும் குறிப்பிடுவது போல சனி தொழிலாளர், பொதுமக்களை குறிப்பதாகும். இந்த கிரக இணைவால் பிரச்னை ஏற்பட்டால்.
அப்போது சூரியன் வலுவாக இருப்பின் நீங்கள் சுவாமி மலை முருகனை தரிசனம் செய்வது நன்மை பயக்கும். அதுவே சனி வலுப்பெற்றிருந்தால் பரசுராமர் அல்லது ஸ்ரீ ராமரை வழிபடுவது நல்லது.
ஸ்ரீ ராமனை வழிபட்டால் குடும்ப ஒற்றுமை, மன நிம்மதி கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *