பில்லி, சூனியத்தால் பாதிக்கப்படுள்ளார் என்பதை கண்டுபிடிப்பது எப்படி!!

ஆன்மீகம்

செய்வினை என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிலருக்கு பயமும் பலருக்கும் சிரிப்பும் வரலாம். ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை நமக்கு உண்டாகியிருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா? பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி இரண்டையும் அறிவியல் ரீதீயாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி எப்படி நம்மைத் தாக்குகிறது. நம்முடைய தேவையில்லாமல் காரணமே இல்லாமல் உறவினர்கள் உங்களையோ நீங்கள் அவர்களையோ ஒதுக்கி வைப்பது…

நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களால் சௌகரியமாக இருக்க முடியாமல் இருப்பது. வேலையை செய்ய முடியாமல் அதிக அசதியாக இருப்பது திடீரென சம்பந்தமே இல்லாமல் நோய் தாக்குவது. தோள் பட்டைகளில் வலியும் தாங்க முடியாத பாரமும் இருப்பது காரணமில்லாமல் மூட்டு, எலும்புகளில் வலி உண்டாவது

தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது மருத்துவக் காரணம் ஏதுமில்லாமல், முடி ஏராளமாகக் கொட்டிப்போவது உடலில் எந்த பிரச்னையும் இல்லாதபோதும் நகங்கள் மட்டும் கருத்துப் போவது…

ஒரே அறையில் இருக்க விரும்புவது, அந்த அறையை விட்டு வெளியே வர விருப்பமில்லாத மனநிலை உண்டாவது திடீரென சம்பந்தமே இல்லாமல் தற்கொலை எண்ணம் தோன்றுவது இந்த அறிகுறிகள் வந்துபோனால் செய்வினை இருப்பதற்கான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *