ஆடி மாதம் ராசிபலன் 2021- கடகத்தில் சஞ்சரிக்கு சூரியனால் எந்த ராசிக்கும் யோகம் கிடைக்க போகிறது தெரியுமா !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும். சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும்.

சூரியன் ஒருவரின் ஜாதகத்திலும், கோசார ரீதியாகவும் சிறப்பாக அமைந்துவிட்டால் அவர் வணிகம், வேலை, குடும்பம், திருமண வாழ்க்கை என அனைத்திலும் நல்ல பலன்களையும், மாற்றங்களையும் பெற்றிடுவார்.சூரியன் சிறப்பான பலனைத் தரக்கூடிய கடகத்தில் சூரியன் இருப்பதால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலனைப் பார்ப்போம். ஆடி மாதம் ராசிபலன் 2021- கடகத்தில் சஞ்சரிக்கு சூரியனால் எந்த ராசிக்கும் யோகம் கிடைக்க போகிறது தெரியுமா

மேஷம்
ஆடி மாதம் மேஷ ராசிக்கு நிதி நிலை சிறப்பாக அமையக்கூடியதாக இருக்கும். பூர்விக சொத்துக்கள் கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது. சமூகத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும்.மேலும், அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். உங்கள் குடும்பம் தொடர்பாக மனதில் சில விஷயங்களை நினைத்து கொந்தளிப்பு மற்றும் மனக் கலக்கம் இருக்கலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.

ரிஷபம்
நீங்கள் எந்த துறையில் வேலை அல்லது தொழில் செய்தாலும் அதை மிகுந்த பக்தியுடன் செய்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் பணியிடத்திலிருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எந்த ஒரு பெரிய பணியையும் தொடங்க விரும்பினால் அது சிறப்பாக செய்து முடிப்பதற்கான, நேரம் உங்களுக்கு முற்றிலும் சாதகமாக இருக்கும்.உங்கள் வேலையை முடிக்க கட்டுப்பாட்டுடன் பணிபுரிந்தால், நீங்கள் நினைத்த வெற்றியை எளிதில் அடையலாம்.

மிதுனம்
மிதுன ராசியினர் சில சாதகமற்ற பலன்களைப் பெற நேரிடும். நிதி ரீதியாக லாபத்தை தரக்கூடியதாகவும், வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.குடும்பத்தில் சில முரண்பாடான நிகழ்வுகள் நடக்கும். அதனால் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும். உங்கள் பணிகளை மேம்படுத்துவதன் மூலமாகவும் முயற்சிகளை முன்னெடுப்பதாலும் லாபத்தைப் பெற்றிடலாம். உதவிகள் கிடைக்கும்.இந்த மாதத்தில் உடல் வலிமை குறைவாக இருப்பதாக தோன்றும். . சிறிய உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவைக் எடுத்துக் கொள்வது அவசியம். மாணவர்கள் கல்வி கவனமாக செயல்படுவது அவசியம்.

கடகம்
கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் நிகழும் இந்த காலத்தில் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். பல வழியில் நற்பலனும், லாபமும் கிடைத்தாலும், திடீர் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்களின் கெளரவம், சமூக அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதனால் பிரிவினை நிலை ஏற்படும். உடல் நலனின் கூடுதல் அக்கறை தேவை.

சிம்மம்
சிம்ம ராசி நாதன் சூரியன் கடகத்தில் சஞ்சாரம் செய்வதால் எல்லா விஷயங்களிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. சில விஷயங்களால் அலைச்சலும், செலவுகளும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து சில விரும்பத்தகாத செய்திகளை நீங்கள் பெறலாம்.உங்கள் தொழில், வியாபாரத்தில் எச்சரிக்கையாக செயல்படவும். புதிய வாடிக்கையாளர்களைப் பெறலாம் மற்றும் சில பயனுள்ள ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

கன்னி
கன்னி ராசியினர் பல நற்பலன்களைப் பெற்றிடுவீர்கள். பண வரவாகும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். சொத்து தொடர்பான தடைகள் நீங்கும். அரசுப் பணிகளில் பெரும் லாபம் இருக்கும்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக நீங்கள் நிறைய செலவிடுவீர்கள். பெரிய நபர்களின் அறிமுகமும் அவர்கள் மூலம் நற்பலனும் கிடைக்கும். உங்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், அந்தஸ்தையும் நற்பெயரையும் மேம்படுத்தும்.

துலாம்
துலாம் ராசியினர் ஆடி மாதத்தில் நற்பலன்களை அனுபவிப்பர். உங்கள் வாழ்க்கையிலும், வேலை செய்யும் துறையிலும் நிறைய மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரும். அரசு வேலை தேடுபவர்கள் வேலை கிடைப்பதற்கான நல்ல நேரமாக அமையும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம்.அரசியல் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு மிகவும் சாதகமான நேரம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு பல சுபமான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிப்பதோடு, நீங்கள் செய்ய நினைத்த திருப்பணி செய்ய வாய்ப்பு ஏற்படும்.மேலும், உங்கள் வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கும். தைரியமும் வலிமையும் அதிகரிக்கும், குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தரக்கூடிய காலமாக இருக்கும். நீங்கள் எந்த வேலை மற்றும் வணிகம் செய்பவராக இருந்தாலும், அதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கவனக்குறைவால் இழப்புகள் ஏற்படலாம். சமூகத்தில் மரியாதை மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும். ஆன்மிக நடவடிக்கைகளில் அதிக நாட்டம் இருக்கும்.

மகரம்
மகர ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய மாதம். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பிரிவினை உண்டாக்கும் பிரச்னைகள் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் புத்திசாலித்தனமாகப் பணத்தை செலவிடுங்கள்.மாமியாருடன் சர்ச்சையும் அதிகரிக்கக்கூடும். வர்த்தகர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியினர் உங்கள் செயல்களில் வெற்றியைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.ராசிக்கு 6ல் சூரியன் இருப்பதால் திருமண வாழ்க்கை, கூட்டு தொழிலில் சிறிய பிரச்னைகள் ஏற்படும். உங்கள் மனைவி நோய்வாய்ப்படக்கூடும் என்பதால், இந்த காலம் உங்கள் திருமண வாழ்க்கையில் இன்பம் இருக்காது. வணிகத்தில் சில சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் அல்லது உங்கள் சக ஊழியர்களுடன் மோதல்கள் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்​.

மீனம்
மீனம் சூரியனின் நகர்வு மீன ராசிக்கு நல்ல பலனைத் தருவதாக இருக்கும். இந்த நேரத்தில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நேரம் சாதகமானதாக இருக்கும். கடினமாக உழைப்பதன் மூலம், உங்கள் வேலையில் நீங்கள் நிச்சயமாக முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள்.மனைவியுடன் மகிழ்ச்சியான நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் அதிக கடன்களில் சிக்கக்கூடும் என்பதால், அதை திருப்பிச் செலுத்துவது கடினம்.வயிறு மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *