இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் துலங்கும் !! கடகத்தில் உள்ள சூரியனால் அடுத்த ஒரு மாதத்திற்கு யார் யாருக்கு பேரதிர்ஷ்டம் தெரியுமா !!

ஆன்மீகம்

வேத ஜோதிடத்தில், ஆத்மா காரக கிரமாக சூரியன் கருதப்படுகிறது. நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஜூலை மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்து, அந்த ராசியில் இருக்கப் போகிறார். ஜோதிடத்தின் படி, சூரியனின் இந்த பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். மீதமுள்ள ராசிகளுக்கு கலவையான முடிவுகளைத் தருவதாக இருக்கும். இப்போது கடக ராசிக்கு சென்றுள்ள சூரியனால் எந்த 5 ராசிக்கு கைமேல் பலன் கிடைக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். பிலவ ஆண்டு – ஆடி 2 – ஞாயிற்றுக்கிழமை (18.07.2021)நட்சத்திரம் : ஸ்வாதி 12:08 AM வரை பிறகு விசாகம் திதி : 12:29 AM வரை நவமி பின்னர் தசமி யோகம் : சித்த – மரண யோகம் நல்லநேரம் : காலை 6.00 – 7.00 / 3.15 – 4.15
ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை) சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் மூதாதையர் சொத்தில் இருந்து நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமுதாயத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் அரசு வேலைக்காக காத்திருப்பவரானால், அந்த வேலை இக்கால கட்டத்தில் கிடைக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த காலம் சிறந்ததாக இல்லை.

ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால், ஒவ்வொரு பணியையும் முழு பலத்துடன் வெற்றிரமாக முடிப்பீர்கள். பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இடமாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு, இக்காலத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. கூட்டாண்மை தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி
சூரிய பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களைப் பொறுத்தவரை மிகவும் அற்புதமாக இருக்கும். உங்கள் உடன்பிறப்புக்களின் ஆதரவை இக்காலத்தில் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகம் தொடர்பான ஒரு பெரிய ஒப்பந்தம் இக்காலத்தில் கிடைக்கும்.

கடக ராசி
ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி தெளிவான மனநிலை இருக்கும். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும்.

சிம்ம ராசி
ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.

கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி கைமேல் பலனளிக்கும். இக்கால கட்டத்தில் உங்களுக்கு எந்தவொரு பண பற்றாக்குறையும் இருக்காது.என்ன தான் பணம் அதிகமாக செலவானாலும், வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புக்களும் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் சமூகத்தில் உங்களின் அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும்.

துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். பணியிடத்தில் உங்கள் பெயர் மற்றும் புகழ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசாங்க வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவீர்கள். உங்களின் பணி அலுவலகத்தில் பாராட்டப்படும். இந்த காலக்கட்டத்தில் பொருள் வசதிகளால் நிறைந்திருப்பீர்கள்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

தனுசு ராசி
ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் ஆறாமிடத்தைப் பார்ப்பதால் திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும்.

மகர ராசி
ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

கும்ப ராசி
ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

மீனம் ராசி
ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *