இந்த தவறை மட்டும் நீங்கள் செய்யவே செய்திடாதிங்க !! உங்கள் வீடு தேடி வந்த பணம் வந்த வழியாகவே சென்று விடுமாம் !!

ஆன்மீகம்
அன்றாடம் நாம் கஷ்ட்டப்பட்டு உழைக்கின்றோம். ஒவ்வொரு தேவைக்காக நாம் பணத்தை சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றோம். அதிலும் நான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைகள் காணப்படும், அத்துடன் யாருமே இலகுவாக பணத்தினை சம்பாதிப்பது இல்லை. நம்முடைய வியர்வையை சிந்தியே பணத்தை சம்பாதிக்கிறவர்களாக ஒவ்வொருத்தரும் இருக்கின்றோம். இவ்வாறு நாம் கஷடப்பட்டு உடல் உழைப்பையும், நம்முடைய பொன்னான நேரத்தையும் செலவழித்து நாம் சம்பாதிக்கும் பணம் நம்முடைய வீட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்று தான் மகாலட்சுமியினை வேண்டிக்கொள்கின்றோம். ஆனால் பல நேரங்களில் நான் சம்பாதிக்கும் பணமானது நம் கைகளில் நிற்பது இல்லை. நாம் ஒவ்வொருவரும் பணம் நிலைத்து நிற்க வேண்டும் என்று தான் போராடுகிறோம்.
நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நம்முடைய தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை என்றால் எதற்காக உழைக்கிறோம் என்னும் விரக்தி வந்து விடும் அல்லவா. ஆனாலும் மகாலட்சுமி எல்லோரிடத்திலும் போய் தங்கி விடுவது இல்லை என்பது நிதரிசனமான உண்மையும் கூட. ஏனெனில் மகாலட்சுமி க்கு யாரை பிடிக்கிறதோ அவர்களிடம் மட்டுமே அவள் நிரந்தரமாக இருந்து விடுகின்றாள். சில வேளைகளில் நாம் யோசித்து இருப்போம் பணம் இருக்கும் இடத்தில் மட்டும் ஏன் திரும்ப திரும்ப மேலும் மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கின்றது.  
  இதற்கு என்ன காரணம் தெரியுமா மகாலட்சுமிக்கு அந்த இடத்தில் இருக்க விருப்பமாக இருப்பதால் தான் அங்கெ தங்கி விட்டால் என்று அர்த்தம். அப்படியானால் ஏன் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி தங்கவில்லை என்ற கேள்வி எழலாம், அதற்கு காரணம் நம்முடைய வீட்டில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளே மகா லட்சுமியின் கடாட்சத்தை கெடுத்து விடுகிறது. இதன் காரணமாகவே மகாலட்சுமி நம்முடைய வீடுகளில் தங்குவது இல்லை.  
  அப்படி என்றால் என்னமாதிரியான தவறுகள் நாம் செய்ய கூடாது, மகாலட்சுமி நம்முடைய வீடுகளில் தங்க வேண்டுமானால் என்னென்ன செய்ய வேண்டும். எவ்வாறான தவறுகள் மகாலட்சுமி வரவை நம்முடைய வீடுகளில் தடுப்பாக அமைந்துள்ளன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன என்று பார்ப்போம்.
பாகற்காய் சமையல் -பொதுவாக நம்முடைய வீடுகளில் விசேஷம் என்று வீட்டிற்கு வருபவர்களுக்கு பாகற்காயை தவிர்த்து மற்ற காய்கறி வகைகளை உணவாக படைப்பது வழக்கமான ஒன்று. ஏனெனில் பாகற்காய் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தாலும் கசப்பு தன்மை இருப்பதால் அவற்றை விருந்தினர்களுக்கு விருந்து அளிப்பதன் மூலம் உறவு அறுந்து போகும் நிலை வரலாம் என்பது பொதுவாக எல்லோரிடத்திலும் காணப்படும் நம்பிக்கை. வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் பொழுது அவர்களுக்கு பாகற்காய் சமைத்துக் கொடுக்க கூடாது என்பது நியதி. அறுசுவைகளில் கசப்பு என்பது இருக்க வேண்டும்.
பாகற்காயை தவிர்ப்பது – தான் முறையாகும்.கசப்பு சுவையை வேறு வகையில் விருந்து படைக்கலாம், அதில் தவறு ஒன்றும் இல்லை. அது போல் நாம் பூஜை செய்யும் பொழுதும், நைவேத்தியங்கள் படைக்கப்படும் போதிலும் கசப்பு சுவையை தவிர்த்து விட்டுசெய்வது தான் மிகவும் நல்லது.பாகற்காயை பூஜையில் சேர்த்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியானவர் வெளியில் சென்று விடுவதாக ஐதீகம் உள்ளது.
இனிப்பான சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும் பொழுது கசப்பான பாகற்காயை நீக்குவது லட்சுமி கடாட்சத்தை உண்டாகும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் தவிர்ப்பதால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி நிரந்தரமாக எப்போதும் இருப்பாள். பூஜைக்கு சேர்க்கப்படும் இனிப்பு வகைகளில் உப்பு சேர்த்து சமைக்கக் கூடாது என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
வெண்ணையை உருக்க கூடாது – பொதுவாக நமது வீட்டில் விசேஷ நாட்கள் என்று சில நாட்கள் காணப்படும். அதே வேளையில் தெய்வ வழிபாட்டுக்குரிய பொதுவான நாட்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்யும் அன்றைய நாளில் எந்த காரணம் கொண்டும் வெண்ணையை உருக்க கூடாது..
பால், தயிர், வெண்ணை மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் வெண்ணெயை உருக்கினால் அதன் மூலம் மகாலட்சுமி கடாட்சம் நீங்க பெறுவதாக ஐதீகம் உள்ளது. இதனால் நீங்கள் வெண்ணையை உருக்கும் போது மகாலட்சுமி வீட்டை விட்டு சென்று விடுவாள் என்பது நம்பிக்கை ஆகவே பூஜை செய்கின்ற நாட்களில், குறிப்பிட்ட இறை வழிபாட்டிற்குரிய நாட்களில் வெண்ணையை உருக்கி விடாதீர்கள்.
ஆனால் அந்த நாட்களில் மகாலட்சுமி அம்சம் பொருந்திய பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது மகாலட்சுமி கடாட்சத்தை இன்னும் கூடுதலாக பெருக்க வகை செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *