தாய்ப்பாசத்தில் உ றை ந்து போய்நின்ற நாய் !! ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிப்போன நாயின் நெகிழ வைக்கும் காணொளி !!

வைரல்

எல்லா உயிர்களுக்கு பாசம் என்பது பொதுவானதாக தான் இருக்கும். தன்னுடைய பிள்ளைகள் மற்றும் குட்டிகள் மீது அதீத அன்பினை வெளிப்படுத்திடுவது ஒவ்வொரு உயிர்களிடத்தலும் காணப்படும் இயல்பு ஆகும். ஆனால் தன்னை சார்ந்த இன்னொரு விலங்கிடத்தில் காட்டும் அன்பு சற்று வித்தியாசமானது. இவ்வாறான அன்பு பாசத்தை இலகுவில் பார்த்திட முடியாது. தற்போதையகாலங்களில் மனிதனுக்கு இடையிலேயே அன்பு குறைந்து செல்கிறது என்றே கூறலாம் அப்படி இருக்கையில் இங்கு ஒரு காட்சியில் ஆட்டுக்குட்டிக்கு தாயாகிய நாய் ஒன்றினது செயல் பார்ப்பவர்களின் மனதை நெகிழ செய்துள்ளது.

அதாவது தன்னுடைய தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு ஒன்றுக்கு தாயாக மாறி அந்த குட்டிக்கு பாலூட்டி சீராட்டி பாசத்துடன் வளர்த்து வரும் நாய் ஒன்றின் செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது இந்த நிகழ்வானது புதுக்கோட்டை மாவட்டம் குமரமலை கிராமத்தைச் சேர்ந்தவர் தான் துரைச்சாமி என்பவரின் வீட்டிலேயே நடந்துள்ளது. துரைச்சாமி வளர்க்கும் நாய் ஒன்று தான் ஆட்டுக்குட்டிக்கு பால் ஊட்டி வருகிறது. காரணம் என்னவென்றால் இந்த குட்டியை ஈன்ற தாய் ஆடு நான்கே நாட்களில் உyiரிழnthuள்ளது.

உண்ண உணவு இல்லாமல் தவித்து வந்த தாய் ஆடு, அ ரிசியை தி ன்றதால், வயிறு ஊதி இraந் து போனது. தாய் ஆடு இல்லாமல் தவித்த ஆட்டுக்குட்டிக்கு துரைச்சாமி வளர்க்கும் நாயே தாயாக மாறி, ஆட்டுக்குட்டிக்கு தினமும் பாலூட்டி வளர்த்து வருகிறது. இந்த நிகழ்வை பார்த்த எழுத்தாளர் சோளச்சி என்பவர் இந்த அழகான காட்சியை வீடியோ பதிவு எடுத்து தனது சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து நாய் உரிமையாளர் துரைச்சாமியிடம் கேட்டபோது, “குட்டியை ஈன்ற நான்கே நாட்களில் தாய் ஆட்டுக்குட்டி இraந்து விட்டது. இதன் பின்னர் நான் வளர்க்கும் நாயிடம், ஆட்டுக்குட்டி தானாக சென்று பால் குடித்தது. ஆட்டுக்குட்டியை நாய் கடித்துவிடுமோ அல்லது நாயின் பால் ஆட்டுக்குட்டிக்கு ஏற்றுக்கொள்ளுமா என்றெல்லாம் ஆரம்பத்தில் யோசித்தோம். ஆனால் நாய் அந்த ஆட்டுக்குட்டியை தனது பிள்ளைபோல் அரவணைத்து அன்பு காட்டி, பாலூட்டி வருகிறது.

இது எங்களுக்கே மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது” என நாய் உரிமையாளர் துரைச்சாமி கூறினார்.“தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ஆனால் ஆட்டுக்குட்டிக்கு இந்த நாய் பாலூட்டி மனிதநேயத்தையும், தாய்மையையும் உணர்த்தியிருக்கிறது. மாறிவரும் காலகட்டத்தில் மக்களும் மனிதநேயம் குன்றாமல் நடந்துகொள்ள வேண்டும்” என குறித்த நிகழ்வு பற்றி தனது கருத்தை எழுத்தாளர் சோளச்சி கூறினார்.

தாய்ப்பாசத்தில் உறைந்து போய்நின்ற நாய் !! ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிப்போன நாயின் நெகிழ வைக்கும் காணொளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *