இனிமேல் இந்த 4 ராசிக்கும் ராஜயோம் தான் !! வெளிநாட்டு யோகத்தால் அதிஷ்டத்தை பெறப்போகும் அதிஷ்டசாலிகள் யார் யார் தெரியுமா !!

ஆன்மீகம்

நல்ல வேலை கிடைக்குமா என்ற ஏக்கம் அனைவருக்குமே இருக்கும். சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களில் யாருக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும் என்றும் படிப்பிற்காக விமானம், கப்பலில் செல்லும் யோகம் யாருக்கு கிடைக்கிறது என்று பார்க்கலாம். இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே. சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். இனிமேல் இந்த 4 ராசிக்கும் ராஜயோம் தான் !! வெளிநாட்டு யோகத்தால் அதிஷ்டத்தை பெறப்போகும் அதிஷ்டசாலிகள் யார் யார் தெரியுமா.

சிம்மம் – சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக இருக்க போகின்றது. குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். தனியார் துறையில் சம்பளத்திற்கு வேலை செய்தவர்கள் இனி சொந்தத் தொழில் செய்யலாம். இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும். விசா, பாஸ்போர்ட் எளிதாக கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதிலும் முதலீடு செய்வதிலும் கவனமாக இருக்கவும்.

கன்னி
அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு 2021ஆம் ஆண்டு சோதனைகள் வந்தாலும் அதை சாதனைகளாக மாற்றக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. கன்னி ராசியின் மீது குருவின் பார்வை படுகிறது. எ தி ர்பார்த்த பணம் கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசியின் மீது மட்டுமல்லாது லாப ஸ்தானம், ஒன்பதாம் வீட்டின் மீது குருவின் பார்வை படுகிறது. இது அற்புதமான அமைப்பு. பாக்கியங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது, பூர்வ புண்ணியங்களும், லாபங்களும் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். செய்யும் வேலையை உற்சாகமாக செய்வீர்கள். புதிய பட்டம் பதவிகள் தேடி வரும்.

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும் உயர் பதவி யோகம் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்பட்டு பின்னர் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எ ச் ச ரி க்கை தேவை. சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. சிலருக்கு வெளிநாட்டு யோகமும் தேடி வரப்போகிறது. மாணவர்களின் உயர்கல்வி கனவுகள் நனவாகும். கல்வியில் பின்தங்கியிருந்தவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும்.

துலாம்
காதல் நாயகன் சுக்கிரனை ராசிநாதனக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே குருபகவான் நான்கில் இருந்து பத்தை பார்ப்பதால் தொழில் சிறக்கும். தொழிலில் அபாரமான லாபமும் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து விடும். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், தொழில் பாராட்டுகளும்,பேரும் புகழும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புகழப்படுவீர்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். தொழில் வேலையில் சிலருக்கு நல்ல மாற்றம் ஏற்படும். ராகு 8ஆம் வீட்டிலும் ,கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். ராகு எட்டில் மறைவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் ஆகும். செய்யும் தொழில் சிறக்கும். தொழிலில் ராகுவால் லாபங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும்.

காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு யோகமான ஆண்டாக அமையும் சிலருக்கு மேல்படிப்பு யோகம் அமையும். வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். அர்த்தாஷ்டம சனியால் சில போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் எதிலும் எ தி ர் நீ ச் ச ல் போ ட் டு முன்னேறி விடுவீர்கள். மேலதிகாரிகள், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க சிரமம் ஏற்படும். அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதால் கல்வியில் முழுகவனம் செலுத்த முடியும். நல்ல நண்பர்களின் சேர்க்கை நற்பலன்களைத் தரும்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களே 2021ஆம் ஆண்டில் உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டது இனி உங்களுக்கு எல்லாம் வெற்றிதான். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒன்பதாம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் பொருளாதார சிக்கல்கள் தீரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அலுவலகத்தில் இருந்த குடைச்சல்கள் நீங்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மேல் விழும். செய்யும் தொழிலில் லாபம் வரும். பணம் சேமிக்கும் சூழ்நிலை உருவாகும். இதுநாள் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். சிலருக்கு வேண்டிய இட மாற்றங்களும் கிடைத்து குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும். மாணவர்களுக்கு மந்தநிலை மறையும். நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேலும் சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். அரசு உதவியும் சலுகைகளும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *