சனி பகவானின் பார்வையால் எந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் காத்திருக்கிறது !! யாரெல்லாம் தொழில் வியாபாரத்தில் அவதானமாக இருக்கனும் !!

ஆன்மீகம்

பிலவ ஆண்டு – ஆடி 13 – வியாழக்கிழமை (29.07.2021) நட்சத்திரம் : உத்திரட்டாதி 12:02 PM வரை பிறகு ரேவதி திதி : 03:54 AM வரை சஷ்டி பின்னர் சப்தமி யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 10.45 – 11.45 / மதியம் 12.15 – 1.15 வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை) சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

மேஷ ராசி
எத்தனை சிக்கல்கள் வந்தாலும் தடைகளைத்தாண்டி ஜெயிப்பீர்கள். சகோதரர்களுடன் சச்சரவு ஏற்படும், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை காட்டுங்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் கடன் வாங்கி சிக்கிக்கொள்ள வேண்டாம். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் நிறைவேறும்.

ரிஷப ராசி
நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். வீண் சந்தேகங்களை விட்டு விடுங்கள். ஆன்மீகத்தில் மனதை செலுத்துங்கள். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வீட்டை ரிப்பேர் செய்து பராமரிக்கும் நிலை உண்டாகும்.சுக்கிரன் சாதகமான வீட்டில் பயணம் செய்கிறார். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். ஷேர்மார்க்கெட் மூலம் பணம் வரும். மன குழப்பங்கள் நீங்கும். சிக்கல்கள் முடிவுக்கு வரும்.

மிதுன ராசி
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சில சிக்கல்கள் வரும். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், செயல்கள் எல்லாம் சிறப்படையும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை நினைத்து வணங்குங்கள். வைகாசி மாதத்தில் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

கடக ராசி
முயற்சி ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. இருக்கிற வேலையில் சவால்கள் வரும் அதை வெற்றிகரமாக ஜெயித்து காட்டுவீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் பண வரவு அதிகரிக்கும். சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வீடு வாங்கும் போது கவனம் தேவை. உங்களுக்கு வரும் சவால்களை தைரியமாக எதிர்க்கொள்வீர்கள். மன குழப்பங்கள் தடுமாற்றங்கள் நீங்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சிம்ம ராசி
வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். செவ்வாய் 5ஆம் வீட்டில் நீசமடைவதால் பண விவகாரங்களில் கவனம் தேவை. புதிய வேலை, தொழில் முயற்சிகள் இப்போதைக்கு வேண்டாம்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தடைகள் உடைபடும். தொட்ட காரியங்கள் துலங்கும் மாதம். சிவபெருமானை பிரதோஷ நாளில் வணங்குங்கள். ஏழை நோயாளிகளுக்கு பழங்கள் தானமாக கொடுங்கள். நன்மைகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

கன்னி ராசி
குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.மனதெம்பு உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தெளிவான மனநிலை இருக்கும். நினைத்த வசதிகள் கிடைக்கும்.

துலாம் ராசி
வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். எதிலும் லாபம் கிடைக்கும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.

விருச்சிக ராசி
மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். சூரியன் சஞ்சாரம் ஆறாமிடத்தைப் பார்ப்பதால் தி டீ ர் உடல்நலக்கோ ளா று ஏற்படும்.

தனுசு ராசி
து ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். ராசிநாதன் சுக்கிரன் நன்மை செய்யும்படி சாரத்தில் சஞ்சரிக்கிறார். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். புபுதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

மகர ராசி
செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

கும்ப ராசி
வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள்.வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும்.

மீனம் ராசி
தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும் செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *