ஆண்டி கோலத்தில் முருகனை தரிசிக்கலாமா? இவ்வாறு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா !!

ஆன்மீகம்

நம் வாழ்வின் பிரச்சனைகளை நீக்கி, மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசிக்கலாமா என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கிறது. இதற்கான பதில், பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை வாய்ப்பது அரிது. எல்லோர் வாழ்க்கையுமே பிரச்சனைகளை கொண்டது தான். ஒரு பிரச்சனை தீர்வதற்குள்ளாகவே இன்னொரு பிரச்சனை தோன்றிவிடும். யார் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை திறமையாக கையாண்டு அதை தீர்த்து விடுகிறார்களோ அவர்களே வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதாக கொள்ளப்படுகிறது. பிரச்சனை பிரச்சனை பிரச்சனை எல்லாமே பிரச்சனை என பிரச்சனை பற்றி மட்டும்

பேசிக்கொண்டிருக்கும் வேளையில் உண்மையில் பிரச்சனை என்றால் என்ன பொருளாதார பிரச்சனை, போசணை குறைப்பாட்டு பிரச்சனை , உடம்பில் ஏற்படும் நோய்களினால் பிரச்சனை , விலைவாசி ஏறும் பிரச்சனை , பஸ்ஸில் பயணிப்பது பிரச்சனை, குடும்பத்திலும் பிரச்சனை , குழந்தயில்லாமலும் பிரச்சனை என பிரச்சனைகளை அடுக்கிகொண்டே செல்லலாம் சில பிரச்சனைகள் சொல்லிப்பழகிய பிரச்சனைகள்

அனுபவ ரீதியாக பார்த்தால் உண்மையில் இது பிரச்சனையா என எண்ணத் தோன்றுகிறது . அதிகம் பிரச்சனைபடுத்துகின்றேன் என்று கருதுகின்றீர்களா ? எந்தவொரு பிரச்சனையும் ஏற்படுவதற்கான காரணங்களை தேடிப்பார்த்து அதை குறைப்பதனாலேயே பிரச்சனைகளை குறைத்துக்கொள்ள முடியும். அனைத்தையும் துறந்த நிலை, ஞானத்தை விரும்பக்கூடிய நிலை தான் முருகனின் ஆண்டிக் கோலம்.

யாருக்கெல்லம தீராத பிரச்னையும், தீரா நோயும் துரத்துகிறதோ அவர்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிப்பதால் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதுமட்டுமில்லாமல் மனக்குழப்பத்தில் இருப்பவர்கள், பேச இயலாதவர்கள், மன சஞ்சலம் உள்ளவர்கள், கோ ப த்தின் உச்சியிலேயே இருப்பவர்கள் உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்கள் சாத்வீக குணத்தை தரக்கூடிய, மனதிற்கு நிம்மதி அளிக்கும் ஆண்டி கோலத்தை தரிசனம் செய்வது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *