கனவில் இவர்கள் எல்லாம் வந்தால் என்ன செய்யவேண்டும்? பல அர்த்தம் உள்ளதா? என்னென்ன பலன்கள் உள்ளன !!

ஆன்மீகம்

இரவு ஆழ்ந்து தூங்கும் நேரத்தில் நம் மன ஓட்டத்தில் காணும் பிம்பமே கனவு என்கிறோம். இந்த கனவானது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நமக்கு திடீரென ஏற்படுவது உண்டு. சில கனவுகள் நமக்கு ஞாபகத்தில் அப்படியே இருக்கும். ஆனால் ஒரு சில கனவுகள் எழுந்த பின் மறந்து போய்விடும். பொதுவாக கனவில் நமக்கு நன்கு பரிச்சயமானவர்கள் மட்டுமே வருவார்கள். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், எப்பொழுதோ நம்முடன் உரையாடியவர்கள் என்று ஏதாவது ஒரு வகையில் நம்முடன் தொடர்பு கொண்ட ஒரு சிலர் தி டீ ரென நம் கனவில் தோன்றுவது உண்டு. ஆனால், பலருக்கும் இ ற ந்து போனவர்களுடைய பிம்பம் கனவில் அடிக்கடி வரும்.

கனவில் இ ற ந்து போனவர்கள் வந்தால் அவர்களுடைய ஏதாவது ஒரு ஆசையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைப்பதாக அர்த்தம் கொள்ளலாம். உங்களிடம் இருந்து அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆசை இதற்கு முன்னால் இருந்திருக்கும். அதை நிறைவேற்றகோரியே உங்களுடைய கனவில் அவர்கள் அடிக்கடி தோன்றுகிறார்கள். அப்படி ஏதாவது உங்களிடம் அவர்கள் சொல்லி இருந்தால் அதை நிறைவேற்றி விடுங்கள். மேலும், உங்களுக்கு அவர்களுடைய ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். இப்படி நம்முடைய முன்னோர்கள், நமக்கு தெரிந்தவர்கள் என்று நம் கனவில் வரும் பொழுது அது மிகப் பெரிய விஷயமாக நமக்கு தெரிவதில்லை…

ஆனால் முன் பின் அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு நபரின் பிம்பம் நம் கனவில் தோன்றினால் தான் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். மேலும், அவர்களை சில சமயங்களில் திடீரென நேரில் காணும் வாய்ப்புகள் கூட பலருக்கும் அமைந்துள்ளன. கனவில் கண்ட ஒருவரை நேரில் காண்பது என்பது சாதாரண விஷயமல்ல, அல்லவா? நமக்கு யார் என்றே தெரியாத ஒருவர் எப்படி நம் கனவில் வர முடியும்? அவர்களை மறுபடியும் நேரில் சந்தித்தால் அதற்கு என்ன அர்த்தம்? உங்களுடைய நினைவில் இருக்கும் அந்த நபர் உங்களுக்கு முன் பின் அறிமுகமில்லாதவராக இருந்தால் கண்டிப்பாக அவர்கள்

பூர்வ ஜென்மத்தில் உங்களுடைய ஏதாவது ஒரு உறவாக இருந்திருக்கக் கூடும் என்கிறது கனவு பலன். விட்டகுறை, தொட்டகுறை என்றெல்லாம் கூறுவது உண்டு. அது போல பூர்வ ஜென்மத்தில் உங்கள் உடன் பயணித்த ஏதோ ஒரு நபருடைய பிம்பம் தான் அது. அது உங்களுடைய ரத்த பந்தமாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், உறவினர்களாக இருக்கலாம் அல்லது தெரிந்தவர்கள் ஆக கூட இருக்கலாம். அவர்களுக்கும், உங்களுக்கும் இருக்கும் பழைய பாக்கிகள் இந்த ஜென்மத்திலும் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தவே அவர்கள் உங்கள் கனவில் தோன்றுகிறார்கள்.

நீங்கள் இந்த கனவு கண்ட சில காலத்தில் அவர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் அமைந்தால் உங்களுக்கு அதன் அர்த்தம் புரிய ஆரம்பிக்கும். இதெல்லாம் கேட்பதற்கு மூட நம்பிக்கையாக இருந்தாலும், பல ஆய்வில் இது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.யார் என்றே தெரியாத நபரை கனவில் காண்பது அவர்களை சிறிது நாட்களில் நேரில் காண்பது! உங்களில் பலருக்கும் நிகழ்ந்திருக்கக் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *