வக்ர நிலையில் சொந்த ராசிக்கு சென்ற செவ்வாய் கிரகம்! யார் யாருக்கெல்லாம் பேரழிவு தெரியுமா?

ஆன்மீகம்

கிரகங்களிலேயே பொதுவானவராக இருக்கக் கூடியவர் செவ்வாய் பகவான். தற்போது தனது சொந்த ராசியான மேஷ ராசியிலிருந்து அக்டோபர் 4ம் தேதி மீன ராசிக்கு வக்ர நிலையாக பிற்போக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இவர் நவம்பர் 14ம் தேதி வரை மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சரித்து பின்னர் மீண்டும் தன் பழைய நிலையான மேஷ ராசிக்கு திரும்புவார். செவ்வாய் பகவான் ஒரு நபரின் தைரியம், துணிச்சல் மற்றும் வீரம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. செவ்வாய் வக்ர நிலையில் செல்வதால் உங்கள் வாழ்க்கையில் என்ன விளைவை ஏற்படுத்தும், என்பதை ராசிவாரியாக பார்ப்போம்.

மேஷம் ராசிக்காரங்களுக்கு மூக்குக்கு மேல கோபம் வருமாம் ஏன் தெரியுமா? | Mesha  Rasi/Aries Sign Person Characters and Nature - Tamil Oneindia
​மேஷம்

பிற்போக்கு செவ்வாய் காரணமாக, உங்கள் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் ஆரோக்கியத்தில் கவனமான உணவை சாப்பிடுவது மற்றும் நலனில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். திருமண உறவில் இருப்பவர்கள் மற்றும் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது பற்றி யோசிப்பவர்கள் பொறுமையாக இருப்பது அவசியம். திருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று நிதானமாக, பொறுமையாக இருப்பது நல்லது.

அவமானங்கள் மாறி வெகுமானங்கள் பெருக்கும் 2020... ரிஷப ராசிக்குரிய ஆங்கில  புத்தாண்டுப் பலன்கள்! #Video|New year rasi palan for Taurus
​ரிஷபம்

செவ்வாய் ராசிக்கு 11ம் இடத்திற்கு செல்வதால் வாழ்க்கை துணையுடன் உறவை மேம்படுத்தும் மற்றும் பங்காளிகளுடனான உங்கள் உறவு இன்னும் மேம்படும். வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்காக பணத்தை செலவிட விரும்புகிறீர்கள். உங்களைச் சுற்றி ஆரோக்கியமான சூழலைக் காண்பீர்கள்.

மிதுனம் மற்றும் கன்னி ராசிக் காரர்கள் என்னென்ன தொழில் அல்லது உத்யோகம்  பார்த்தால் சிறப்பாக இருப்பார்கள்?
​மிதுனம்

செவ்வாய் கிரகத்தின் உங்கள் ராசியின் செயல்திறனை மேம்படுத்தும். உங்கள் வேலையில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், உங்களுக்கு பொருத்தமான வேலையை தேடுவதற்கு சரியான நேரமாக இருக்கும். சாதகமாக இருக்கும். ஆனால் வேலையிலிருந்து தேடுவது அவசியம். சக ஊழியர்களுடன் சுமூகமாக நடந்து கொள்வது உங்களை முன்னேற்ற உதவும். வாழ்க்கை துணையின் அன்பு, அரவணைப்பு அதிகரிக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் இப்போது வெற்றியைப் பெறுவீர்கள்.

கடக ராசிக்காரர்களே… விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்! – Netrigun
​கடகம்

கசப்பான சில நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. உங்களின் அன்புக்குரியவர் உங்களை புரிந்து கொள்ளாமல் போகக்கூடும். உங்களின் சில செயல்கள் அவர்களை காயப்படுத்தலாம். எனவே சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது அவசியம். வீண் பேச்சு, விபரீதமாகும். மிகவும் கவனமாக சிந்தித்து பேசுவது சிக்கல்களைத் தவிர்க்கும். நீங்கள் சில உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதில் கவனமாக இருக்கவும்.

சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : சிம்மம் ராசிக்காரர்களுக்கு  அதிர்ஷ்டமான ஆண்டு | Sarvari Tamil puthandu rasi palan 2020 - Simmam - Tamil  Oneindia
சிம்மம்

இந்த செவ்வாய் வக்ர நிலை செல்வத்தை கையாள்வதில் கவனம் வேண்டும். எந்த ஒரு பண பரிவர்த்தனை செய்வதற்கு முன் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இல்லையெனில் செலவு கைமீறிப் போகும். செவ்வாய் கிரகத்தின் நிலை உங்கள் திருமண வாழ்க்கையில் துணையுடனான தூரத்தை அதிகரிக்கக்கூடும். வானிலை மாற்றங்கள் காரணமாக, இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை மோசமாகிவிடும், அதனால் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே கவனமாக இருப்பது மற்றும் சத்தான உணவை உட்கொள்வது அவசியம்.

கன்னி ராசிக்காரர்களின் திருமண யோகம் || Kanni Rasi Marriage pariharam
​​கன்னி

செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு காரணமாக, நீங்கள் உறவில் சில மோசமான நேரங்களை சந்திக்க நேரிடும். எனவே, பொறுமையாக இருப்பது மற்றும் சரியான சூழல் வரும் வரை காத்திருப்பது முக்கியம். காதலிப்பவராக இருந்தால், உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு சரியான நேரம். நிதி விஷயஙகளில் கவனமாக இருப்பது நல்லது. எனவே எந்தவிதமான முதலீட்டை செய்வதை தவிர்ப்பது நல்லது அல்லது கவனமாக இருப்பது அவசியம். பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருந்தால், ஒரு நிபுணரிடமிருந்து ஒரு கருத்தைப் பெறுவது நல்லது.

2020 புத்தாண்டு பலன் : துலாம் ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி  இருக்கும்..?– News18 Tamil
​துலாம்

வணிக அல்லது வேலையில் உங்கள் இலக்கை அடைய கூடுதல் உழைப்பை போட வேண்டி இருக்கும். செவ்வாய் கிரகத்தில் நிலை காரணமாக நீங்கள் விரும்பும் சில மின்னணு பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது. நீங்கள் நீண்ட காலமாக சில உடல் ஆரோக்கிய பிரச்னை இருந்தால் அதிலிருந்து நல்ல முன்னேற்றத்தைப் பெற்று ஆறுதல் அடைவீர்கள்.

2020 ஆண்டுபலன் : விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி  இருக்கும்..?– News18 Tamil
விருச்சிகம்

உங்கள் ராசியின் மீதான செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தின் காரணமாக உங்கள் வாழ்க்கை துணை மற்றும் வணிக கூட்டாளருடன் உறவைப் பேணுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எந்தவிதமான தவறான எண்ணங்களையோ அல்லது சண்டையிடவோ வேண்டாம். இது உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை அதிகரிக்கும். இந்த நேரத்தில் வெளிநாடு, வெளியூர் செல்வது பற்றி யோசிப்பவர்கள் காத்திருக்கும் சூழல் உள்ளது. ஆனால் கடின உழைப்பை கைவிடாதீர்கள்.

மே மாத ராசிபலன்கள் 2019 : தனுசு!! – வவுனியா நெற்
​தனுசு

செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு காரணமாக, பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வுக்காக நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். செவ்வாய் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் போது நல்ல வெற்றியைப் பெறலாம். இந்த நேரத்தில், வணிக கூட்டாளருடனான உங்கள் உறவு அதிகரிக்கக்கூடும். எந்தவொரு பிரச்சினையிலும் நீண்ட வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்

சனிப்பெயர்ச்சி பலன்கள்- மகரம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு - Lankasri News
மகரம்

செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு காரணமாக, மகர ராசியினர் உங்கள் துறையில் ஆற்றலையும் நேர்மறை பலன்களையும் உணர்வீர்கள். எனவே எந்த ஒரு சிக்கலான செயலை எடுக்கும்போது எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்கள் கிரகங்களின் சாதகமான நிலை உங்களுக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும். எந்த வேலையில் செய்தாலும் வெற்றி கிடைக்கும். குறுகிய தூர பயணத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

2020 புத்தாண்டு பலன் : கும்ப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி  இருக்கும்..?– News18 Tamil
​கும்பம்

செவ்வாய் கிரகம் ராசிக்கு 2ம் இடத்தில் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தினருடன் பேசுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இந்த காலத்தில் உங்கள் காதல் அல்லது உங்கள் துணையுடனான பிரச்னைகள் அதிகரிக்கும். கவனம் தேவை.

2020 புத்தாண்டு பலன் : மீன ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி  இருக்கும்..?– News18 Tamil
​மீனம்

ராசியில் செவ்வாய் பகவானின் சஞ்சாரம் வணிக கூட்டாளருடனான உறவில் மோதல்கள் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் துறையில் சக ஊழியர்களிடமிருந்து எதிர்பார்த்தபடி ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே நீங்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *