தொழில் வியாபாரத்தில் சற்று கவனமாக செயல்பட்டால் ஒரு வளமான பலனை அடையலாம் !! யாருக்கெல்லாம் அதிஷ்டம் தேடி வரப்போகிறது தெரியுமா !!

ஆன்மீகம்

பிலவ ஆண்டு – ஆடி 16 – ஞாயிற்றுக்கிழமை (01.08.2021) நட்சத்திரம் : பரணி 07:36 PM வரை பிறகு கார்த்திகை திதி : 07:56 AM வரை அஷ்டமி பின்னர் நவமி யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 8.00 – 9.00 / 3.15 – 4.15 ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை) சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள் ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே ராசிப்பலனைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

மேஷ ராசி பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் தி டீர் செலவுகளும், பணியாளர்களால் வீண் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வியாபாரம் விறுவிறுப் பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

ரிஷப ராசி
நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தனவரவுகள் மிக மிக சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களின் அனைத்து தேவைகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் ரீதியாக ஒரு வளமான பலனை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடிவதுடன், அதனால் எதிர்பார்த்த ஆதாயமும் கூடுதலாகக் கிடைக்கும்.

மிதுன ராசி
எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். உடன் இருப்பவர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து சென்றால் நன்மையான பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் பேசும்போது கவனமாக பேசுவது அவசியம். குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் இருக்கும். என்றாலும் இன்று மாலைக்குப் பிறகு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம்.

கடக ராசி
எந்த செயலை செய்வதாக இருந்தாலும் பொறுமையுடன் செல்வதால் நெருக்கடிகளை சமாளித்து வளமான பலனை அடைய முடியும். வயதானவர்களுடன் பேசும்போது பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

சிம்ம ராசி
இன்று மகாலட்சுமியை வழிபடுவது மிகச் சிறப்பு. பயணங்கள் மூலமாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய செயல்களுக்கு உடன் இருப்பவர்களால் தேவையற்ற இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று கால தாமதம் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களின் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகக்கூடிய நாளாக இருக்கும்.

கன்னி ராசி
பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சி களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்து சென்றால் வளமான பலன்களை அடையலாம். எந்த எதிர்ப்பையும் சமாளிக்க கூடிய யோகமும் அதிர்ஷ்டமும் என்று உங்களுக்கு உண்டு. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு வளமான பலனை அடைய கூடிய நாள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

துலாம் ராசி
தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களைப் பெற்று கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.தேவையற்ற குழப்பங்கள் வரும். நியாயப்படி நடக்கவேண்டிய காரியங்கள் கூட சற்று கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதும், வேலைக்கு செல்பவர்கள் உங்களுடைய பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. பொதுவாக தூரப் பயணங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம்.

விருச்சிக ராசி
வீண் அலைச்சல் ஏற்படலாம். பொதுவாக தூரத்து பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்.உங்கள் மீதான பழிச் சொற்கள் நீங்கி நல்ல பெயர் எடுக்க கூடிய வாய்ப்புகள் இன்று கிடைக்கும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். நிம்மதி ஏற்படக்கூடிய நாளாக இன்று இருக்கும்.இன்று படிப்படியாக அனுகூல பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு கடந்த காலத்தில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் நீங்கும். மிக சிறப்பான நாளாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் கடன் பிரச்சனைகள் எல்லாம் குறையக் கூடிய நாளாக இருக்கும்.

தனுசு ராசி
தொழில் ரீதியாக ஒரு வளமான பலன்களை அடைய கூடிய அதிர்ஷ்டமான நாள். வேலைக்கு செல்பவர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெற்று திறம்பட செயல்படுவீர்கள். உங்கள் மீதான வீண் பழிச்சொற்கள் நீங்கி நல்ல பெயர் எடுப்பீர்கள். சுறுசுறுப்பாகச் செயல் படுவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த இடையூறுகள் எல்லாம் விலகி ஒரு வளமான பலனை அடைவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தன சேர்க்கை உங்களின் நெருக்கடிகளை நீக்கும். அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

மகர ராசி
பண வரவு தாராளமாக இருந்தாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் தேவையை அறிந்து தந்தை பண உதவி செய்வது மகிழ்ச்சி தரும். தொழில் வியாபாரத்தில் சற்று கவனமாக செயல்பட்டால் ஒரு வளமான பலனை அடையலாம். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். தொழில் ரீதியாக பார்க்கும்போது ஒரு வளமான பலன் கிடைக்கும். என்றாலும் வேலையாட்களுடன் ஒத்துழைப்பு பெரிய அளவு சிறப்பாக இருக்காது .

கும்ப ராசி
வேலைக்கு செல்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் சக ஊழியர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாயமும் கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.காரியங்கள் அனுகூலமாக முடியும். வேலைக்கு செல்பவர்கள் உங்களுடைய பணியை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்வது சிறப்பை தரும். பணவரவுகள் தாராளமாக இருக்கும் உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்று உள்ளது.

மீனம் ராசி
வேலைக்கு செல்பவர்கள் சக நண்பர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். பேச்சில் மட்டும் சற்று பொறுமையுடன் இருந்தால் ஏற்றம் மிகுந்த பலனை அடையலாம். கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் விலகி நற்பலன்கள் உண்டாக கூடிய நாள். எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களை பெறக்கூடிய நாளாக இருக்கும். மனக் குழப்பங்கள் விலகி தொழிலில் ஏற்றம் மிகுந்த பலன்களை பெறலாம். எது எப்படி இருந்தாலும் அதிக முதலீடு கொண்ட செயல்களை மட்டும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *