தொழிலதிபர்கள் ஆவது எந்த ராசி தெரியுமா !! சனியின் வீட்டில் குரு… 2020 குரு பெயர்ச்சி பலன்கள்!

மருத்துவம்

நம் எல்லாருக்கும் நாள் தொடங்குவது அன்றைய ராசி பலன்களை கேட்ட பின்னர் தான். அதிலும் குறிப்பாக புதிய தொழில்களை தொடங்குபவர்கள், வியாபார நோக்கங்களை உடையர்களுக்கு அன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதில் மிகவும் ஆர்வம் இருக்கும், குறிப்பாக குரு பகவான் சுப கிரகம். பொன்னவன், குரு பார்வை கோடி நன்மையை கொடுக்கும். தனுசு ராசியில் குரு இருந்த போது கேது உடன் இருந்தார். நிறைய நாட்கள் வக்ரமடைந்தும் சஞ்சரித்தார் இதனால் நிறைய பலன்களை சில ராசிக்காரர்கள் பெற முடியாமல் போய்விட்டது. இப்போது குரு பகவான் மகரம் வீட்டிற்கு சென்று நீச்சமடையப்போகிறார். சனியின் வீட்டில் குரு ஆட்சி பெற்ற சனியோடு இணைவதால் அவர் நீச்சபங்கமடைகிறார்.

இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது, இந்த குரு பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கிடைக்கும் குருவின் பார்வையால் யாரெல்லாம் தொழில் தொடங்கி தொழில் அதிபர்கள் ஆகப்போகிறீர்கள் என்று பார்க்கலாம்.குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி பெயர்ச்சியடைகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ஆம் தேதி நிகழப்போகிறது.

குரு பகவான் பார்வை ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது. குரு அமர்ந்து இருக்கும் இடங்களை விட குரு பார்க்கும் இடம்தான் சுபமடையும் என்பதனால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொன்னார்கள். இந்த குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்கும், புதிய தொழில் தொடங்குவார்கள் என்று பார்க்கலாம்.

குரு அமரும் இடத்தை வைத்து ஒரு பழம் பாடல் உள்ளது. ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும் இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும் ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும் தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும் சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும் வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் என்பது பழம் பாடல்”மேற்கண்ட பலன்கள் அப்படியே நடக்கும் என்பது உறுதியில்லை.

அவரவர் ஜென்ம ஜாதகம், தசாபுத்திகளைப் பொறுத்தும் பலன்கள் மாறுபடும் என்பதால் பயப்பட தேவையில்லை. இது பொதுவான பலன்கள்தான்.

வேலையில் மாற்றம் தரும் தொழில் குரு

மேஷம் ராசிக்கு குரு 10ஆம் சஞ்சரிக்கிறார். பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும் என்று சொல்வார்கள். தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும்.மாற்றம் இல்லாதவர்களுக்கு செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் தீரும். செய் தொழிலை விட்டு நன்றாக விரிவு படுத்துவீர்கள். சிலர் அடிமை தொழில் செய்வதை விட்டு புதிதாக சொந்தத் தொழில் செய்வீர்கள். பத்தாம் வீட்டில் குரு உடன் சனி உடன் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தை தரப்போகிறார். தொழில் அதிபர் ஆகும் யோகம் தேடி வரப்போகிறது.

அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும் பாக்ய குரு

ரிஷபம் ராசிக்கு குரு பகவான் 8ஆம் இடத்திருந்து 9ஆம் இடத்திற்கு செல்லப் போகிறார். பாக்ய ஸ்தானம் என்பது தெய்வ வழி படுகளையும், சன்னதியையும் குறிக்கும். குரு 8,11ஆம் வீட்டிற்கு உடையவர். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருவினால் அல்லல் பட்டிருப்பீர்கள். நோய்கள் படுத்தியிருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்பட்டிருக்கும். இனி குருபகவான் அஷ்டமத்தில் இருந்து பாக்ய ஸ்தானத்தில் நகர்கிறார். இழந்த பாக்கியங்கள் கிடைக்கும்.நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள்.தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. அடகு சட்டம், ஜோதிடம், ஆன்மீகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல தனச்சேர்க்கை உண்டாகும். குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

அவமானங்கள், நோய்கள் தீர்க்கும் குரு

மிதுனம் ராசியில் உள்ள களத்திர குரு 8ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். அஷ்டம குரு என்று பயப்படுத்துவார்கள். பயப்பட வேண்டாம். உங்களுக்கு அஷ்டம குரு நன்மையே செய்வார். ஆனால் அஷ்டமச் சனி பாதிப்பை தருவார் கவனமாக இருக்கவும். தொழில் வேலை விசயங்களில் எச்சரிக்கையாக அடி எடுத்து வைக்கவும். 2021தொடங்கி விட்டால் உங்களுடைய பிரச்சினை படிப்படியாக குறைந்து நன்மைகள் ஏற்படும்.புது வித முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். 2020 ல் கஷ்டங்களை அனுபவித்து வந்த உங்களுக்கு பிறக்கப்போகும் 2021ஆம் ஆண்டில் நிலைமை அற்புதமாகவே இருக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்.

களஸ்திர ஸ்தான குருவினால் கவலைகள் தீரும்

கடகம் ராசிக்கு குரு பகவான் 6 மற்றும் 9ஆம் இடத்திற்கு உடையவர். அவர் 7 ஆம் வீட்டில் அமரப்போகிறார். சற்று கவனமாக இருக்க வேண்டும். களஸ்திர தான குரு கவலைகளை தீர்ப்பார். குருவின் பார்வை உங்க ராசிக்கு நேரடியாக கிடைக்கிறது. நிறைய நன்மைகள் நடைபெறும். அதற்காக முழு மூச்சாக துணிந்து இறங்கி விடாதீர்கள். கொஞ்சம் நிதானமாக செயல்படுவது நல்லது. புது தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். அனுசரித்துச் செல்லவும். 2021ஆம் ஆண்டு குரு இடைபட்ட காலங்களில் ஓரளவு நன்மையைத் தருவார்.

ருண ரோக சத்ரு ஸ்தான குருவால் பிரச்சினை நீங்கும்

சிம்மம் ராசிக்கு குரு ஐந்து மற்றும் எட்டாம் வீட்டு அதிபதி. குரு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும்.ஆனால் பிற்பகுதியில் கவனமாக இருக்க வேண்டும். கடன்,நோய் சம்பந்தப்பட்ட வகையில் மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பிற்பகுதியில் புது முதலீடுகள் கூடாது. வேலை முயற்சிகளிலும் பலவீனம் ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம் பிற்பகுதியில்.

பூர்வ புண்ணிய குருவினால் யோகம் தேடி வரும்

கன்னி ராசிக்கு குரு 4 மற்றும் 7ஆம் வீட்டிற்கு அதிபதி ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய வீட்டிற்கு வரப் போகிறார். எந்த புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குல தெய்வத்தை காட்டும் இடம். ராசியை பார்க்கிறார். ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானத்தினை பார்வையிடுவது மிக சிறப்பு. இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1 ஆனால் 2021 ஏப்ரல் முதல் நீங்கள் மனதில் வைத்திருக்கும் காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும். தடை நிகழும். இருப்பினும் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

சுக ஸ்தான குருவினால் மாற்றம் உண்டு

துலாம் ராசிக்கு குரு மூன்று மட்டும் ஆறாம் வீட்டு குரு நான்காம் வீட்டில் அமரப் போகிறார். தாயின் உடல் நிலை பிரச்சினை அல்லது தங்கள் சுக விசயங்களை அனுபவிப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.பலருக்கும் வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளை கொடுக்கும். புது முயற்சிகளில் கவனம் தேவை.

தைரிய ஸ்தான குருவினால் தன்னம்பிக்கை கூடும்

விருச்சிகம் ராசிக்கு குரு பகவான் இரண்டு ஐந்தாம் வீட்டு அதிபதி. 3ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார்.கடந்த ஆண்டுகளில் குருப்பெயர்ச்சியின் பிற்பகுதியில் வாக்கு காப்பாற்றத் தவறுதல்,வம்பு, வழக்கு பிரச்சினைகளை சந்தித்த நீங்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் கட்டுக்கள் இருக்கும் அல்லது உதவி புரிவதற்கு ஆட்கள் வருவார்கள்.சுக்கிரன் சாரத்தில் குரு செல்லும் போது தங்கள் எண்ணங்கள் நிறைவேறும். சகோதர வகையில் மனஸ்தாபங்கள் நிகழும். கவனம் தேவை.

குடும்ப குருவினால் குதூகலம் ஏற்படும்

தனுசு ராசிக்கு 1 மற்றும் நான்காம் வீட்டிற்கு உடைய குரு 2ஆம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமரப் போகிறார். வாக்கில் கவனம் தேவை.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.மனதில் நினைத்த தன விசயங்கள் தங்களுக்கு சாதகமாக முடியும்.குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் ரீதியான முன்னேற்றம் நிகழும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். தொழில் அதிபர் ஆகும் யோகம் வந்து விட்டது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. தொழில் ஆதாயம் பெருகும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். பணவரவு அதிகமாகும். இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். அதிக யோகமான பலன்கள் நடைபெறும்.

ஜென்ம குருவினால் நிதானம் தேவை

மகரம் ராசிக்கு 3 மற்றும் 12ஆம் வீட்டு அதிபதி இப்போது ஜென்ம ராசிக்கு வரப்போவதால் சிலருக்கு மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. குரு பெயர்ச்சியின் முக்கால் பகுதி வரை கடன் வேலை சார்ந்த விசயங்களில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து பேதங்கள் வரும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சொந்த முதலீடுகள் வேண்டாம். குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு அனுகூலமும் நன்மையும் நடைபெறும்.

விரைய ஸ்தான குருவினால் சுப விரையம் வரும்

கும்பம் ராசிக்கு குரு பகவான் 2 மற்றும் 11ஆம் வீடான லாப ஸ்தான அதிபதி. குரு பகவான் 12ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். கடந்த குரு பெயர்ச்சியில் பல சோதனைகளை கடந்த கும்பம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தர இருக்கிறது. யோகம் அதிகரிக்கும். இந்த குரு பெயர்ச்சியினால் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும்.வெளி மாநிலம் அல்லது வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் சுப விரையச் செலவுகள் ஏற்படும் கவனம் தேவை.

லாப குருவினால் அதிக லாபம் தேடி வரும்

மீனம் ராசிக்கு குரு ராசி அதிபதி, பத்தாம் வீடான தொழில் ஸ்தான அதிபதி. குரு பகவான் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். பத்தில் அமர்ந்த குருவினால் வேலை தொழில் ரீதியாக சிரமமான சூழ்நிலைகளை சந்தித்து வந்தவர்களுக்கு இந்த வருடம் சாதகமான முடிவுகள் வர இருக்கிறது. நல்ல இட மாற்றங்கள் நிகழும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வு ஏற்படும். தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சுப காரியங்கள் நிகழ்வதற்கான நல்ல நேரம் கூடி வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *