இந்து மதத்தில் வழிபாடு என்பது மிக முக்கியமானது, அதிலும் குறிப்பாக இஷ்ட தெய்வங்களுக்கு விரத வழிபாடு செய்வது என்பது முக்கியமானது, இறைவனை வழிபட்டால் தான் நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக அமையும். இறைவனின் அருள் பெற பலரும் வித விதமாக கொலு வைத்து வழிபாடு நடத்துவார்கள். இவ்வாறு இறைவனை வழிபடும் மக்கள் வெவ்வேறு விதமாக வெவ்வேறு கிழமைகளில் இறைவனை வழிபடுவதை தமது வழக்கமாக கொண்டுள்ளார்கள். அவ்வாறு வழிபாடு செய்யும் பக்தர்கள் தங்கள் தெய்வங்களை எந்த கிழமைகளில் வழிபட்டால் நன்மைகள் பெறும் என்பதையும் இவ்வாறு வழிபடுவதால் என்னென்ன எங்களது வாழ்வுக்கு வந்து சேரும் என்பதனையும் பார்க்கலாம்.

திங்கட்கிழமை – இந்த கிழமையானது சிவனுக்கு மிகவும் உகந்த தினம் என கூறப்படுகிறது ஏனெனில் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினமாகையால் அன்றைய தினம் ஈசனை நினைத்து விரதமிருந்து வழிபடுவது நல்லது. செவ்வாய்க்கிழமை – இந்தக் கிழமையில் அனுமனை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதும் சிறப்பானதும் பல பலனைங்களை தரும் கிழமையாகும். மேலும் இந்த செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் வளம் பெருக ஆரம்பிக்கும் .

புதன்கிழமை – எந்தக் காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் விநாயகரை வணங்கி விட்டுத் தொடங்க வேண்டும். எனவே புதன்கிழமையானது விநாயகரை வழிபட ஏற்ற நாளாகும். ஆகவே இந்தக் கிழமைகளில் நீங்கள் விநாயகரை வழிபட அமர்ந்திட வேண்டாம். வியாழக்கிழமையில் – இந்தக் கிழமையில் நீங்கள் மகாவிஷ்ணுவை விரதமிருந்து வழிபாடு செய்வது சிறப்பானது. விஷ்ணுவையும் லட்சுமிதேவியையும் விரதமிருந்து வணங்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை வழிபடுவதும் நலம் சேர்க்கும்.

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனையும், அவரது அவதாரங்களையும் விரதமிருந்து வழிபடுவது நன்மை பயக்கும். சனிக்கிழமை சனி பகவானை, சனிக்கிழமை தோறும் வழிபடுவது நன்மை தரும். மேலும் அன்றைய தினம் பெருமாள், காளி, ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமையில் வழிபடுவதற்கு ஏற்ற தெய்வம் சூரிய பகவான். நவக்கிரங்களில் முதன்மையான சூரியனை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுங்கள்.
