உங்களுக்கு ஏழரை சனி நடக்கின்றதா? இதை மட்டும் செய்தால் சனி பகவானின் பாசத்தை பெறலாம் !!

ஆன்மீகம்

ஆடி மாதத்தின் பௌர்ணமி குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இது மகரிஷி வேத வியாசர் பிறந்த நாளாக நம்பப்படுகிறது. நான்கு வேதங்களின் அறிவை மனித குலத்திற்கு முதன்முதலில் வழங்கியவர் குரு வேத வியாசர் என்பதால், அவர் பிறந்த தேதி குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் குரு பூர்ணிமா ஜூலை 23 ஆம் தேதி காலை 10:43 மணி முதல் 2021 ஜூலை 24 ஆம் தேதி காலை 08:06 வரை ஆகும். இந்த வருடம் குரு பூர்ணிமா நாளில் சனி பகவானை வழிபடுவது சிறப்பாக இருக்கும் என ஜோதிடர்கள் நம்புகின்றனர்.

எனவே ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி நடக்கும் 5 ராசிக்காரர்கள், தங்கள் கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த குரு பூர்ணிமா நாள் மிகச்சிறந்ததாக இருக்கும். குரு பூர்ணிமா நாளில், இந்த ராசிக்காரர்கள் சனி பகவான் தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களில் இருந்தும் விடுபட முடியும்.

ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி நடக்கும் ராசிக்காரர்கள் – ஜோதிட வல்லுநர்களின் படி, இந்த காலத்தில் தனுசு, மகரம் மற்றும் கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் சனி பகவானின் கோபத்தை எதிர்கொள்கின்றன. ஏழரை சனியின் போது, ஒருவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பல சிக்கல்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதே நேரத்தில், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்கு அஷ்டம சனி நடக்கிறது.

எந்த ஒரு ராசியில் சனி பகவான் இரண்டு ஆண்டுகள் இருக்கிறதோ, அது அஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. இதன் போது ஒருவரது திருமண வாழ்க்கை, காதல் உறவு மற்றும் தொழில் போன்றவற்றில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

கடுகு எண்ணெய் விளக்கு = அரச மரத்திற்கு அடியில் ஒரு கடுகு எண்ணெய் விளக்கேற்றுங்கள். அருகில் சனிபகவான் கோயில் இருந்தால், அங்கேயும் ஒரு விளக்கேற்றி வையுங்கள். தானம் அளிக்கவும் கடுகு எண்ணெய், கருப்பு எள்ளு விதைகள், இரும்பு பொருட்கள், கருப்பு பயறு, கருப்பு நிற உடைகள் போன்றவற்றை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குங்கள். இதனால் சனி பகவானின் அருளைப் பெற்று, அவர் கொடுக்கும் சிரமங்களில் இருந்து விடுபடலாம்.

அனுமனை வணங்கவும் = அனுமனை வணங்குங்கள். ஏனெனில் சனி பகவானின் நெருங்கிய நண்பர் அனுமன். அனுமனை வணங்குபவர்களை சனி பகவான் ஒருபோதும் துன்புறுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே குரு பூர்ணிமா நாளில் அனுமன் முன்பு ஒரு விளக்கேற்றி அனுமன் சாலிசாவை படியுங்கள்.

நாய்க்கு உணவளிக்கவும் = சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெயில் சுட்ட ரொட்டியை கருப்பு நிற நாய்க்கு கொடுங்கள். ஒருவேளை கருப்பு நிற நாய் உங்களுக்கு கிடைக்காவிட்டால், வேறு எந்த நாய்க்கும் கொடுக்கலாம்.

கருப்பு எள்ளு விதை = கருப்பு எள்ளு விதைகளை நீரில் போட்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள். ஏனெனில் சனி பகவான் தனது குருவாக சிவபெருமானைக் கருதுகிறார். எனவே சிவபெருமானை வணங்குபவர்களுக்கு சனி பகவான் எவ்வித தொந்தரவும் கொடுக்கமாட்டார்.
மந்திரத்தை கூறவும் = ‘ஓம் சனீஷ்வராய நமஹ’ என்னும் மந்திரத்தைக் கூறிக் கொண்டே அரச மரத்தை ஏழு முறை சுற்றுங்கள். இப்படி குரு பூர்ணிமா நாளைத் தவிர, சனிக்கிழமைகளிலும் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *