எந்த ராசிக்கு தங்கநகை அணியும் அதிர்ஷ்டம் இருக்கு ! யார் யாரெல்லாம் தங்கத்தை தொடக் கூட கூடாது தெரியுமா !!

ஆன்மீகம்

தங்கம் வாங்குதல் மற்றும் தங்க நகைகள் அணிதல் சமூகத்தில் ஒருவகை ஈர்ப்பு எப்போதும் இருக்கிறது. நாம் வணங்கக்கூடிய தெய்வங்களுக்கு கூட தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுவதும் வழக்கமாக கொண்டுள்ளோம். மன்னர் காலத்தில் ஆண், பெண் என இருவரும் தங்க நகை அணிந்து வந்த நிலையில் தற்போது பெண்கள் அதிகளவில் தங்க ஆபரணங்கள் அணிகின்றனர். ஆண்களும் மோதிரம், சங்கிலி போன்ற நகைகள் அணிவது வழக்கமாக கொண்டுள்ளனர். மகாலட்சுமியின் அம்சமாகவும், விலைமதிப்பற்ற உலோகமாக பார்க்கப்படும். தங்க நகை அணிவது சில ராசிகளுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தைத் தரும் என ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. அதே போல சில ராசிகளுக்கு தங்க நகை அணிவது அவ்வளவாக நல்லதல்ல எனவும் குறிப்பிடப்படுகிறது. ​தங்க நகை எந்த ராசிக்கு யோகம் தரும்?

மேஷம்
மேஷ ராசியினர் தங்க மோதிரத்தை அணிவதால் தைரியம், நேர்மறை சக்தி அதிகரிக்கிறது. ஒவ்வொரு துறையிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது. அதே நேரத்தில், அதிர்ஷ்டமும் சாதகமாகும். இதன் காரணமாக உங்கள் எல்லா வேலைகளும் எளிதாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுப்படும். மற்றும் பெற்றோரிடமிருந்து பாசம் பெறலாம். நண்பர்களும், அன்பானவர்களும் எப்போதும் உங்களை ஆதரிப்பார்கள். தங்க மோதிரத்தை அணிவதன் மூலம், பழைய கடன்களை படிப்படியாக அகற்றுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியினர் தங்க ஆபரணங்களை அணிவது அதிர்ஷ்டத்தைத் தருகிறது. தங்கம் நகை அணிவதால் சிம்ம ராசியின் அதிபதி சூரியனும், தங்கத்தின் காரணியான வியாழன் கிரகத்துடன் நட்பு உறவை அதிகரிக்கும். எனவே, சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் தங்கம் அணிவது ஆற்றலையும் உற்சாகத்தையும் அதிகரிக்கிறது. இதனால் அனைத்து பணிகளையும் எளிதாக முடிக்க முடிகிறது. வேலை மற்றும் வணிகத்தில், நீங்கள் வகுக்கும் திட்டத்தில் முழுமையான வெற்றி பெற முடிகிறது.

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் தங்க மோதிரத்தை அணிந்தால், படிப்படியாக அவர்களின் ஆசைகள் நிறைவேற ஆரம்பித்து, செழிப்புடன் வாழலாம். தங்க மோதிரத்தை அணிய விருப்பமில்லை எனில் குறைந்தபட்சம் நீங்கள் ஒரு சங்கிலி அல்லது வளையலை, காப்பு அணியலாம். உங்கள் ராசியைப் பொறுத்தவரை, குரு ஏழாவது மற்றும் ஐந்தாவது வீட்டின் அதிபதி, இதன் காரணமாக குருவுக்கு உரிய தங்க ஆபரணங்களை அணிந்து நல்ல பலனைத் தருகிறது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் இந்த நகைகளை அணிவதன் மூலம் முடிவடைகின்றன.

தனுசு
தங்க மோதிரம் அணிவது தனுசு மக்களுக்கு நல்ல பலனைத் தருகிறது. நீங்கள் செய்யக்கூடிய வேலை விரைவாக நிறைவடைகின்றன. தனுசின் அதிபதி குரு, தங்கத்தின் காரணியாகக் கருதப்படுகிறது. எனவே தங்க ஆபரணங்களை அணிவதால் உங்கள் ராசி நாதனான குரு கிரகத்தை பலப்படுத்துகிறது. அதன் சுப பலன்கள் காரணமாக பணம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

யாரெல்லாம் தங்கத்தை அணியக்கூடாது
ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப ராசியை சேர்ந்த நபர்கள் தங்க நகைகளை அணிவது நல்லதல்ல. மறுபுறம், துலாம் மற்றும் மகர ராசியினர் குறைந்தபட்சம் தங்கத்தை அணிய வேண்டும்.
இரும்பு மற்றும் நிலக்கரி தொடர்பான பணியை செய்பவர்கள் தங்க நகை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டும் சனியுடனான வணிக உறவு கொண்டது. எனவே தங்க உலோகத்தை அணிவது உங்கள் வணிகத்திற்குத் தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணி மற்றும் வயதான பெண்கள் தங்க நகைகளை அணியக்கூடாது.

அதே நேரத்தில், தூ ங் கும் போது தங்க நகையை தலையணைக்குக் கீழ் வைக்க வேண்டாம். பலர் தூ ங் கும் போது நகைகள் தொந்தரவாக இருப்பதாக நினைத்து தலையணைக்கு அ டியி ல் வைப்பது வழக்கம். நீங்கள் எப்போதெல்லாம் தங்க நகையை எடுத்து வைக்க நினைக்கிறீர்களோ அப்போ தெல்லாம் ஒரு சிவப்பு நிற துணியில்கட்டி பாதுகாப்பான இடத்தில் வைப்பதால் செழிப்பை அதிகரிக்கும்.எப்போதும் வலது கை விரல்களில் தங்க மோதிரத்தை அணிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இடது கையில் ஒருபோதும் தங்க மோதிரம் அணிய வேண்டாம்.

மேலும், இடுப்பு முதல் கால் வரை எந்தப் பகுதியிலும் தங்கத்தை அணியக் கூடாது, அவ்வாறு அணிந்தால் பல நோய்களுக்கு வழிவகுக்கும். குரு பகவானின் உருவான தங்கத்தை யாரிடமும் அ டி த்துப் பி டு ங்குவது அல்லது அபகரிப்பது நல்லதல்ல. தங்கத்தை புனிதமாக கருதுவதும், வைத்துக் கொள்வதும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *