தயிருடன் எதையெல்லாம் கலந்து சாப்பிட்டால் நோய் விலகி ஓடும் தெரியுமா?.. தெரிந்துகொள்வோம்

மருத்துவம்

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதில் எதை எந்த விதத்தில் கலந்து சாப்பிடுவது நோய்களை விரட்டும் என்பது தெரியுமா? பொதுவாகவே அனைவரும் தினசரி தயிர் சாப்பிடுகின்றனர். தயிர், பலவிதமான சத்துக்களை கொண்டது. கால்சியம், புரோட்டீன், வைட்டமின், என பல்வேறு சத்துக்களைக் கொண்ட தயிர் ஒரு சஞ்சீவனி மருந்து என்றே கூறலாம். மேலும், தயிரில் சர்க்கரை அல்லது உப்பு கலந்து சாப்பிடும் வழக்கத்தை பலர் பழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், தயிருடன் வேறு எதை கலந்து சாப்பிடலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

சோம்பு உண்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா | benefits of fennel seeds– News18  Tamil

சோம்பு
இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுபவரா நீங்கள்? ஒரு கிண்ணம் தயிரில் 1/2 தேக்கரண்டி சோம்பை கலந்து சாப்பிடுங்கள். இதை கடைபிடித்தால் போதும், ஆழ்ந்த தூக்கமும் வரும், அதோடு கூடுதல் நன்மையாக வாயு பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

நண்பா...! நீ குண்டா இருக்கியா...? இந்த கருஞ் சீரக விதைகள் உன்னை ஒல்லியாக  மாற்றும்டா ..! ஒல்லி பெல்லி | using-black-cumin-seeds-get-a-slim-body -  Tamil BoldSky

வறுத்த சீரகம் மற்றும் கருப்பு உப்பு
செரிமான பிரச்சினைகள் இருப்பவர்கள், ஒரு கிண்ணம் தயிரில் கருப்பு உப்பு மற்றும் 2-3 சிட்டிகை வறுத்த சீரகத்தை கலந்து சாப்பிட வேண்டும். இந்த கலவையானது பசியை அதிகரிக்கவும், செரிமானத்தை வலுப்படுத்தவும் உதவும்.

உலர் பழங்கள் தரும் ஆரோக்கியம் || health of dry fruits

உலர் பழங்கள்
உடல் மெலிந்தவர்கள், எடையை அதிகரிக்க விரும்பினால், தினசரி ஒரு கிண்ணம் தயிரில் சர்க்கரை மற்றும் உலர் பழங்களை கலந்து சாப்பிட வேண்டும். இது எடையை அதிகரிப்பதுடன், சோர்வு மற்றும் பலவீனத்தை சமாளிக்க உதவும்.

தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...!!

வாழைப்பழம்
வைட்டமின்கள், கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் இருக்கிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், தயிரில், வாழைப்பழத்தைக் கலந்து சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *