ஆடி சீர் பார்த்து அ ச ந்து போன இணையதளம் !! ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 50 கிலோ கோழி என நீண்டுகொண்டே செல்லும் லிஸ்ட் பாருங்க !!

வைரல்

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு. திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது.உலகில் நடக்கும் பல திருமண நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும்,

அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திருமண நிகழ்வுகள் வித விதமாக புதுமையாக இடம் பெற்று வருகின்றன. உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளையும் அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, பொதுவாக திருமணமாகி பெண் தனது கணவர் வீட்டிற்கு வரும் போது, மருமகளே மருமகளே பாடலுடன் , ஆரத்தி எடுத்து வரவேற்பதை நாம் அநேக இடங்களில் அவதானித்திருப்போம்.

குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் முக்கிய ஒரு காலகட்டமாக இந்த திருமண நிகழ்வுகள் இடம் பெறுகிறது இந்தியாவில் ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், , 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள் என வாயை பிளக்கும் சீர் செய்து மருமகனை அசத்தியுள்ளார் ஒரு மாமனார் தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதை போல் தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாதம் (ஜூன் / ஜூலை மாதங்களில்),”பொனாலு”என்கிற ஆஷாதம் பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடுகிறார்கள்.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் ஆஷாதம் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆந்திராவின் அருகாமையில் அமைந்துள்ள புதுவையின் அங்கமான ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தியுள்ளார்.தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்து கொள்வதால் மகிழ்ச்சி அடைந்து ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், , 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள்என வண்டி வண்டியாக மணமகன் வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இதனை உள்ளூர்வாசிகள் கண்டு ஆச்சரியப்பட்டனர். தங்களது மகளை மிகவும் அன்புடன் மருமகன் கவனித்து வருவதால் எங்கள் அன்பை காட்டும் விதமாக சீர் செய்துள்ளோம். இனிப்பு,காரம்,சத்துள்ள உலர்பழங்கள், மசாலா பொருட்கள், காய்கறிகள், அசைவங்களான ஆடு, கோழி, மீன் மற்றும் கடல் உயிரினங்கள்,மளிகை பொருட்கள் என வாரி வழங்கியுள்ளோம் என மகிழ்ச்சி பொங்க பலராம கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஆடி சீர் பார்த்து அ ச ந்து போன இணையதளம் !! ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 50 கிலோ கோழி என நீண்டுகொண்டே செல்லும் லிஸ்ட் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *