12 ராசியில் உங்க ராசிப்படி எந்த வயது வரை கஷ்டங்களை அனுபவிப்பீர்கள்? இந்த ராசியினருக்கு கிடைக்கப்போகும் அதிர்ஷடம் என்ன !!

ஆன்மீகம்

இன்று பிலவ ஆண்டு – ஆடி 12 – புதன்கிழமை (28.07.2021) நட்சத்திரம் : பூரட்டாதி 10:45 AM வரை பிறகு உத்திரட்டாதி திதி : 02:48 AM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி யோகம்: அமிர்த – சித்த யோகம்
நல்லநேரம்: காலை 9.15 – 10.15 / மாலை 4.45 – 5.45 புதன்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை) சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள். பொதுவாக நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். அந்தவகையில் இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.

12 ராசிக்காரர்களின் ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்கள் உண்டு. அது உங்கள் ராசிக்கு நீங்கள் எந்த வயது வரை கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று கூறுவது உண்டு. அந்த ராசியினர் நிறையவே கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து கொண்டு இருப்பார்கள். அந்தவகையில் 12 ராசிக்காரர்களுக்கும் எந்த வயது வரை கஷ்டம் இருக்கும்? என்பதை பற்றி பார்ப்போம்….

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்களுடைய வாழ்வில் பனிரெண்டு வயது வரை இளம்பருவத்தில் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். ஆனால் அதன் பிறகு மகிழ்ச்சி எப்போது கிடைக்கும் என்கிற ஏக்கமும் தவிப்பும் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பொதுவாக 42 வயது வரை கஷ்டங்களை அனுபவிப்பார்கள், அதன் பிறகு தான் படிப்படியான முன்னேற்றம் தெரியும்.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பிறந்தது முதல் குறிப்பிட்ட சில பருவ காலம் வரை பெற்றோரின் அரவணைப்பில் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். அதன் பிறகு தங்களுடைய பயணத்தில் நிறைய பொறுப்புகள் நிறைந்து காணப்பட்டிருக்கும். இவர்கள் தங்களுடைய 45 வயது வரை கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருப்பவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் குறிப்பிட்ட பருவ வயதை எட்டியதும் நிறையவே கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவிப்பார்கள். குறிப்பாக இவர்கள் தங்களுடைய 18 வயதிற்கு மேல் குடும்ப பாரங்களை சுமக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். 18 வயது முதல் 40 வயது வரை இவர்களுக்கு கஷ்ட காலம் தான்.

கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடியது வைராக்கியமான ராசிகாரர்களாக இருப்பார்கள். தங்களுடைய 20 வயது முதல் 30 வயது வரை இவர்கள் படாதபாடு பட வேண்டி இருக்கும். பல இடங்களில் அவமானமும், தோல்வியும் ஏற்படும். ஆனால் அதன் பிறகு இவர்களுடைய வாழ்க்கை படிப்படியாக முன்னேற்றம் காணும்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எதையும் முற்போக்கு சிந்தனையுடன் பார்ப்பவர்கள். இவர்கள் வருவது வரட்டும் என்று எதார்த்தமாக இருந்தாலும் இவர்களுடைய வாழ்க்கையில் 35 வயது வரை பல நேரங்களில் ஏமாற்றங்களையும், வலிகளையும் தாங்கி சுமப்பார்கள். அதன் பிறகு ஓரளவு முன்னேற்றம் காண்பீர்கள்.

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் நண்பர்களுடன் அதிகமாக செலவழிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இளமைக்காலம் முழுவதும் வீணாகி விட்டதே என்று பிற்காலத்தில் புலம்ப கூடிய நிலை இவர்களுக்கு நிறையவே ஏற்படலாம். பொழுதுபோக்குக்கு தொடர்பான விஷயங்களை அதிகம் விரும்பும் இவருக்கு 30 வயதிற்கு மேல் பொறுப்புணர்வு ஏற்படும்.

துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நிறையவே அவமானங்களை சந்தித்து இருப்பார்கள். அவர்கள் அவர்களாக இருக்கவே முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். யாராவது ஒருவருடைய கட்டுப்பாட்டுக்கு கீழே இருந்து இவர்கள் நிறையவே துன்பப்படுவார்கள். தங்களின் 48வது வயதிற்கு மேல் நிம்மதியை காணலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எந்த அளவிற்கு துயரங்களை அனுபவிக்க வேண்டுமோ அந்த அளவிற்கு துயரங்களை இளம் பருவத்தில் அனுபவிப்பார்கள். அதன் பிறகு வாழ்நாளில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று வைராக்கியத்துடன் செயல்பட்டு தங்களுடைய 34 வயதிற்கு பிறகு அரும்பாடுபட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் எவ்வளவு இன்பங்களையும் துன்பங்களையும் சேர்த்து அனுபவித்து இருந்தாலும் இவர்களுக்கு நிம்மதி என்பது கடைசிவரை கிடைக்காமலேயே போய்விடும். தங்களுடைய முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பிடித்தவர்களாக விட்டுக் கொடுத்தால் எல்லா காலமும் இவர்களுக்கு நல்ல காலம் தான். குறிப்பாக 25 வயதிற்கு மேல் முன்னேற்றம் உண்டு.

மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். ஆனால் இவர்களுக்குள் எப்போதும் ஒரு அழுகை சத்தம் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த சத்தம் இவர்களுடைய 32வது வயது முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் இளம் வயது பருவம் முதலே பொறுப்புகளை சுமக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள். அதிலும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். தங்களின் 50வது வயது வரை இவர்களுக்கு பல போராட்டங்கள் உண்டு. அதன்பிறகு ஓரளவுக்கு சிறப்பாக அமையும்.

மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட காலம் வரை மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். எப்போதும் மற்றவர்களுடைய கண்காணிப்பில் இருக்கும் இவர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் தனியாக எதையும் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். குறிப்பாக இவர்களுடைய முப்பத்தி ஆறாவது வயது முதல் பல்வேறு இன்னல்களை அனுபவித்து பின் 46 வயதில் ஒவ்வொன்றாக குறைய ஆரம்பிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *