ஆகஸ்ட் மாத ராசிப்பலன்… இந்த 4 ராசிக்கு எப்படி இருக்க போகிறது தெரியுமா !! கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய ராசியினர் !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும்.

தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உள்ள கிரக நிலவரப்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை எப்படிப்பட்ட பலனை இந்த ஆகஸ்ட் மாதம் தரும் என்பதை ஒவ்வொரு ராசி வாரியாக பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கக்கூடியதாகவும், அதனால் உடல் மற்றும் மனம் களைப்பு ஏற்படும். நீங்கள் சொந்தமாக வியாபாரம், தொழில் செய்பவராக இருந்தால், அதில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் சுமாரான லாபம் கிடைக்கும்.
வேலைக்கு செல்பவர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ப பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், உங்கள் வாழ்க்கை துணையுடனான அன்பும், அந்நியோன்யம் அதிகரிக்கும். மாணவர்கள் சற்று கவனமாக படித்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே இந்த மாதம் உங்களுக்கு பல வகையில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். திருமண வயதில் இருக்கும் இளைஞர்கள் முயற்சித்தால் திருமணம் சுப நிகழ்வு கைகூடி வரும். உடல் ஆரோக்கியம் சிறு, சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மேலும், திருமண தம்பதியருக்கு அவர்களின் உறவில் அன்பும், அரவணைப்பு அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வேலைகள் எளிதாக முடியும் என்பதால், அந்த நேரத்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிடுங்கள்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே இந்த மாதம் கலவையான பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் சொல், செயலில் கவனமாக இருப்பது அவசியம்.பேச்சில் நிதானமும், பணிவும் தேவை. எந்த ஒரு வாக்குறுதியையும் தர வேண்டாம். குடும்பத்திலும், பணியிடத்திலும் எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். உங்கள் தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். பணியிடத்தில் விட்டுக் கொடுத்து செல்வதும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதும் நல்லது. நீங்கள் கவனக்குறைவாக செய்யும் எந்த ஒரு செயலும் பின்னர் உங்களுக்கு ஆபத்தாக முடியும். உத்தியோகத்தில் சுமாரான பலன்களே கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும், உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.

கடகம்
கடக ராசி நேயர்களே உங்களுக்கு பல நற்பலன்களை அடைந்தாலும், சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். அதே போல உங்கள் துணையுடனான ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையில் நீங்கள் அதிகளவில் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த மாதம் பண வரவு சிறப்பாக இருந்தாலும், அதிக செலவை கட்டுப்படுத்திச் சேமிக்க முயலவும். உத்தியோகத்தில் சிலருக்கு பணி இட மாற்றங்கள் ஏற்படலாம். சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். இருப்பினும் பொறுமையாக சூழலைக் கையாள்வதும், விடா முயற்சி செய்து உங்கள் இலக்கை அடைய முயலவும். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *