எந்த ராசிக்காரர்களை திருமணம் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் !! உங்கள் ராசிக்கு ஏற்ற ராசியினர் இவர்கள் தான் !!

ஆன்மீகம்

திருமணம் ஒரு உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பாண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.

ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பது குறித்த விடயங்களை தெரிந்துக் கொள்வோம். சிம்மம்- கன்னி – இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கை தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகமாகும். மீனம்- சிம்மம் – இந்த ராசிக்காரர்கள் திருமணம் செய்துக் கொண்டால் தொடக்கத்தில் அவர்கள் காதலில் திளைத்திருப்பார்கள். ஆனால், சில நாட்களில் பிரிவு ஏற்பட்டுவிடும்.

மேஷம்- விருச்சிகம் – மேஷம் ராசி ஏமாற்றும் குணம் கொண்ட ராசி. விருச்சிகம் பொறாமைப்படும் ராசி. இவர்கள் இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பண்பு இருக்காது. அதனால் இருவருக்கு இடையே விரிசல் ஏற்படும். ரிஷபம்- கும்பம் – ரிஷபம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளும் பொருந்தாத ராசிகள். ரிஷப ராசி பொதுவாக காதல், அன்பு, அழகு, பொறுமை ஆகிய பண்புகளையும், கும்ப ராசி எதிர்பாராத விடயங்களை செய்யும் பண்பை கொண்டிருப்பதால், இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்துப்போகாது.

சிம்மம்- ரிஷபம் – இந்தஇரண்டு ராசிக்காரர்களும், உடல்மற்றும் மனதளவில் ஒரேமாதிரியான நிலையை எதிர்பார்ப்பதால், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள போட்டி மனப்பான்மை, நாளடைவில் பிரிவிற்கு காரணமாக அமையும். மிதுனம்- கடகம் – இந்த இரண்டு ராசிக்காரர்களும் மிகவும் சாந்தமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். ஆனால் கடக ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரரிடம் அதிக அன்பு செலுத்தினால், இருவரிடமும் எவ்வித பிரச்சனையும் வராது.

தனுசு- மகரம் – இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள். ஆனால் இருவருக்கும் அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.  கன்னி- மிதுனம் – கன்னி மற்றும் மிதுன ராசியில் திருமணம் செய்துக் கொண்டால், பணப்பிரச்சனை தான் ஏற்படும். மிதுனம் அன்பே போதும் என்று நினைக்கும். ஆனால் கன்னி ராசி சேமிப்பு அவசியம் என்பதால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

மிதுனம்- விருச்சிகம் -இந்த ராசிக்காரர்கள் இருவருமே எந்த ஒரு விடயத்தையும் மனதிற்குள்ளயே வைத்துக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக் கொள்ளாததால் பிரச்சனைகள் ஏற்படும்.
கும்பம்- கடகம் – இவர்கள் இருவருக்கும் மத்தியில் நம்பகத்தன்மை குறைவாக இருக்கும். அதுவே இவர்களது உறவை சீர்கெடுத்துவிடும். ஆனால் கும்ப ராசிக்காரர்கள் நினைத்தால் வாழ்க்கையை சிறப்பாக மாற்றலாம்.

துலாம்- மீனம் – இந்த ராசிக்காரர் இருவர்களுக்கும் இடையே உண்டாகும் பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதே இவர்களுக்குத் தெரியாததால், இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.
மேஷம்- கடகம் – இந்த ராசிக்காரர்கள் இருவருக்கும் எண்ணங்கள் ஒத்துப்போனாலும் ஒருவர் மேல் ஒருவர் அக்கறையுடன் நடந்து கொள்ள மாட்டார்கள். அதனால் இவர்களின் வாழ்வில் விரிசல் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *