இன்றைய உலகில் யாவரும் மிக வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றோம். உலகமும் இன்று வேக வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. இன்றைய உலகம் செல்போன் யுகம் என்று சொல்வது மிகையே அல்ல. ஏனெனில் இன்று செல்போன் இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லும் அளவுக்கு அதன் பாவனை பெருகி விட்டது. அதிலும் தற்போதைய காலங்களில் குறைந்தது இரண்டு செல்போன் வரையில் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள் என்றே கூறலாம். அதுமட்டும் இன்றி மனிதனின் 6-வது விரல் செல்போன் என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய கைகளிலும் தவழ்கிறது இந்த செல்போன்.

செல்போன் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று செல்போனின் பாவனை பெருகியுள்ளது, இவ்வகை செல்போனின் பெருக்கத்தினால் மனிதன் தன்னிலை மறந்து அதனை பாவிக்கும் அலாவுக்கு அதன் மேல் அடிமையாகி விட்டான் என்றே கூற முடியும்.

ஒருவருடைய கையில் செல்போன் இருக்குமானால் அருகில் இருப்பது யார் என்று தெரியாத அளவுக்கு மனிதர்களின் வாழ்க்கை மாறியுள்ளது. ஏனெனில் இரையை செல்போன் வளர்ச்சியானது உலகமே தன்னுடைய கையில் வந்து விட்டது போன்று உணர வைத்துள்ளது. இதில் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது செல்போனில் கிடைக்கும் நன்மைகளை விட, இதனால் ஏற்படும் ஆபத்துகளே அதிகம். தற்போதைய காலங்களில் குழந்தைகள் கூட மொபைல் இல்லாமல் எதையும் செய்வது இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு செல்போன் பாவனை பற்றிய அறிவு கிடைத்து விட்டது.

இதன் விளைவாக குழந்தைகளும் கூட தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் செல்போன் பாவனையில் மூழ்கி விட்டனர் இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காணொளி.