எந்த ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் !! கடன் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா !!

ஆன்மீகம்

மேஷம் -புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வெளியில் செல்லும்போது கைப்பொருள்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மகரம்
மகிழ்ச்சியான நாளாக அமையும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். ஒரு சிலருக்கு வெளியூர் களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக் கூடும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும்.

கடகம்
தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்யவேண்டி வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

துலாம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதி ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்றாலும், பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எ ச் ச ரி க் கையாக இருக்கவும்.

கன்னி
பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *