காசிக்கு சென்றால் எதையாவது விட்டு வர வேண்டுமா?.. அவ்வாறு கூறுவதற்கு உண்மை காரணம் இதோ !!

ஆன்மீகம்

காசி என்பது முக்தி தலமாக போற்றப்படுகிறது. பிறவா வரம் வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்லும் பக்தர்கள், புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர்.காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும் என்பது நமது இந்து மத நம்பிக்கை.இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் ஓடும் கங்கையில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்துக்களாகப் பிறந்த எவரும் வாழ்வில் ஒருமுறையேனும் காசி யாத்திரை செல்ல விரும்புவார்கள். `கடமையை முடித்தால் காசிப்பயணம்’ என்ற சொலவடையே இதனால்தான் வந்தது. காசியாத்திரை என்பது ராமேஸ்வரத்தில் தொடங்கி மறுபடியும் ராமேஸ்வரத்தில் பூர்த்தியாக வேண்டும். இன்றைக்கு போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்ட நிலையில்,

ஒவ்வொருவரும் காசியாத்திரையை மேற்கொள்ள வேண்டும்’ என்று காசி யாத்திரையின் மகத்துவம் பற்றி காஞ்சி பெரியவர் அருளியிருக்கிறார். காசியாத்திரை என்பது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அற்புதமான யாத்திரை. வடக்கில் இருப்பவர்களுக்கு ராமேஸ்வரம் யாத்திரை என்றால், தெற்கில் இருப்பவர்களுக்குக் காசி யாத்திரை. காசி யாத்திரை மேற்கொள்வதற்கு சில நடைமுறைகள் இருக்கின்றன. எனவே, காசி யாத்திரை மேற்கொள்பவர்கள் கவனிக்கவேண்டிய அம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.

கங்கையில் நீராடிவிட்டு பாவங்கள் நீங்கி புது மனிதனாக பிறப்பெடுக்கும் போது, மீண்டும் இவ்வுலக சுக போகங்களில் பற்று கொண்டு விடக்கூடாது.மீண்டும் அழியும் பொருளின் மீதும் அதிகப் பற்றோ அல்லது விருப்பமோ வந்துவிடக் கூடாது. இனி இறைவன் ஒருவனை கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்றார்கள்.

எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழப் பழகுபவனுக்கு, ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்து விடும்.இதன் பொருட்டு தான் காசிக்குச் சென்றால், அழியும் பொருட்களின் மீது தங்களுடைய பிடிப்பை விட்டுவிட்டு வர வேண்டும் என்பார்கள். இதுவே நாளடைவில் காசிக்குச் சென்றால் எதையாவது விட்டு வரவேண்டும் என்று கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *