ஆடி அமாவாசையான இன்று நமது வீட்டு வாசலில் கோலமிடலாமா ? வேறு என்னெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா !!

ஆன்மீகம்

ஆடி அமாவாசை ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக் கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.மாதம் ஒரு அமாவாசை வந்தாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை (புரட்டாசி அமாவாசை) தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகவும் ஏற்ற விஷேச தினமாகும். அமாவாசை தினம் என்றதும் நம் மனதில் இன்று சுப காரியங்களைச் செய்யலாமா கூடாதா என்ற பல கேள்விகள் எழும். அமாவாசை அன்று நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடாத விஷயங்களைத் தெரிந்து கொண்டு நாம் இறைவன் மற்றும் நம் முன்னோர்களின் ஆசியைப் பெற்று வளமாக வாழ்வோம்.

பொதுவாக அமாவாசைக்குப் பின் பெளர்ணமி வரை உள்ள வளர்பிறை காலத்தில் நாம் எந்த ஒரு புதிய காரியங்கள், சுப காரியங்களையும் ஆரம்பிக்க ஏற்ற நாட்கள். அமாவாசை என்றால் என்ன?
சூரியனும், சந்திரனும் இணையக்கூடிய நாள் தான் அமாவாசை. அன்றைய தினம் இருவரும் ஒரே ராசியில் சஞ்சரிப்பார்கள்.அந்த நாளில் இரு கிரகங்களின் ஆதர்சன சக்தி மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மனித மூளையில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக நம் மனம் கொந்தளிப்பு அல்லது சில சஞ்சலத்துடனேயே இருக்கும். அதனால் அன்றைய தினம் புதிய செயல்களைத் தொடங்குதல், சுப காரியங்கள் செய்வது இல்லை. அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவை – அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய மிக சிறப்பான விஷயம் முன்னோர்களையும், பெரியோர்களையும் வழிபட வேண்டியது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அமாவாசை தினத்தின் முன்னோர்கள் வழிபாடு செய்யும் போது மணிஅ டி த்து வழிபடக்கூடாது.

அவர்களுக்கு படையல் வைப்பதோடு, காக்கைக்கு உணவு வைத்துவிட்டுத் தான் குடும்பத்தில் உள்ளோர் சாப்பிட வேண்டும். முன்னோர்கள் படம் வைத்து, பூ வைத்து, பொட்டு வைத்து படையல் வைக்காவிட்டாலும், அவர்களை வணங்கி, நாம் தயாரித்த உணவை காக்கைக்கு வைத்து விட்டு தான் சாப்பிட வேண்டும். அதே போல நம் குலதெய்வத்தை வழிபடுவதும், அம்மன் வழிபாடு நடத்துவதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த சிறப்பான நாளில் புண்ணியத்தை சேர்க்க உங்களால் முடிந்த அளவு ஏழை,எளியோருக்கு தான, தர்மங்கள் செய்து வரலாம். பசுவுக்கு கீரை வழங்கலாம்.

அமாவாசை தினத்தில் நாம் செய்யக்கூடாதவை
பொதுவாக நம் வீட்டு வாசலில் கோலமிடுவது இறைவனை வரவேற்பதற்காக தான். ஆனால் அமாவாசை தினங்களில் வரக்கூடிய நம் முன்னோர்கள் நம் வீட்டில் வர நினைத்தாலும், வீட்டு வாசலில் இருக்கும் கோலத்தால் திரும்ப சென்றுவிடுவர். இ ற ந்தவர்களாக இருப்பதினால், அவர்கள் வரும் போது ஒரு சில அ திர் வலைகளை ஏற்படும், அதனால் சில வித பிரச்னைகள் ஏற்படலாம்.
அமாவாசை தினத்தில் நாம் மிக கடினமான, புதிய முயற்சிகளை செய்யக்கூடாது.

அப்படி செய்யும் போது நம் உடலில் ஏதேனும் சிறு கா ய ம் ஏற்பட்டாலும் அதன் வீ ரியம் மிக அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் கா ய ம் ஆறுவதற்கும் காலதாமதம் ஆகலாம். அன்றைய தினம் உணர் ச்சிவ சப்படுவதைத் தவிர்க்கவும். கோ ப ம், பத ற் றம் வேண்டாம். முடிந்தால் பேசாமல் மெளன விரதம் இருக்கவும். எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *