கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்றுசேர வேண்டுமா? ஆடிப்பூரம் தினத்தில் இதை செய்தால் மட்டும் போதுமாம் !!

ஆன்மீகம்

திருமணம் ஒரு உறவுமுறை அமைப்பு ஆகும். மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும். பல்வேறு சிறப்புக்களைக் கொண்டுள்ள ஆடிப்பூரம் அம்பாளுக்கு மிகவும் விசேஷமானது. அந்நாளில் தான் அன்னை பார்வதி தேவி அவதரித்ததாக சிவபுராணம் எடுத்துரைக்கிறது.

அதாவது இந்த பிலவ வருடம் ஆடி மாதம் புதன் கிழமை 26 ஆம் தேதி பூரம் நட்சத்திரத்துடன் கூடிய திருவாடிப்பூரம் நிகழ இருக்கிறது. இந்த நாளில் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்றுசேர வேண்டுமா? ஆடிப்பூரம் தினத்தில் இதை செய்தால் மட்டும் போதுமாம். அதாவது இந்த நாளில் அம்பாளை வழிபடுபவர்களுக்கு கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். அத்துடன் பிரிந்த உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். மேலும் பல்வேறு மகத்துவமும் சிறப்புக்களைக் கொண்டுள்ள ஆடிப்பூரம் அன்று செய்ய வேண்டிய விடயங்களை பார்க்கலாம்.

அதாவது மனிதனாகப் பிறந்தவர்கள் பல்வேறு காரணங்களால் உறவுகளாக இணைகிறார்கள். இந்த உறவுகள் ஒரு கட்டத்தில் பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். குறிப்பாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து செல்லும் நிலை கூட பலருக்கும் இன்று உண்டு. கணவன் மனைவி உறவானது பிரியும் பொழுது ஏற்படும் சோகம் சொல்லில் அடங்காதவை. அத்தகைய துயரிலிருந்து விடுபட அம்பாள் அவதரித்த ஆடிப்பூரம் அன்று அம்பாளை நோக்கி தவமிருந்து வழிபடலாம்.

ஆடி மாதம் அன்று பூரம் நட்சத்திரம் வரும் நாளில் தான் ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அன்றைய நாளில் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் அங்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு தரிசனம் செய்யலாம். அப்படி முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று அம்பாளை தரிசனம் செய்து வழிபடலாம். பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குழந்தை இல்லாத தம்பதிகள் பிள்ளை வரம் பெறவும், போட்டிகள் பொறாமைகள் அகன்று மனத் தெளிவு பெறவும்,

ஆடிப்பூரத்தன்று வீட்டில் அம்மனுக்கு வளையல் மாலை சாற்றி, பச்சை பட்டு உடுத்தி, சந்தன காப்பிட்டு, சித்ரான்னங்கள் நைவேத்தியம் படைத்து, தூப தீபம் காண்பித்து, ஸ்தோத்திரங்கள் படித்து வழிபட்டு வரலாம். மேலும் அன்றைய நாளில் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல் வாங்கிக் கொடுப்பது இன்னும் விசேஷமானது. அருகிலிருக்கும் கோவிலுக்கு செல்லும் பொழுது உங்கள் கைகளால் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுங்கள், சிறப்பான பலன்கள் உண்டாகும். இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ள ஆடிப்பூரம் வழிபாட்டை மறந்தும் தவறவிடாதீர்கள்.

அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும் சிறப்பான காட்சியை கண் குளிர பார்ப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு நன்மைகள் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அம்மனுக்கு சந்தன காப்பு சாற்றி வளையல்களால் கோலாகலமாக அலங்காரம் செய்திருப்பார்கள். அதில் கொடுக்கப்படும் வளையலை கட்டாயம் வாங்கி வந்து வீட்டிலிருக்கும் பெண்கள் அணிந்து கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *