கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. கோடி அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு தெரியுமா !!

ஆன்மீகம்

பிலவ ஆண்டு – ஆடி 25 – செவ்வாய்கிழமை (10.08.2021)நட்சத்திரம்: மகம் 09:53 AM வரை பிறகு பூரம் திதி : 06:06 PM வரை துவிதியை பின்னர் திருதியை யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 4.45 – 5.45 செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்மிதுனம், கன்னி ஆகிய ராசிகளுக்கு அதிபதியாக விளங்கும் புதன் பகவான் புத்தி காரகனாக விளங்குகிறார். புத பகவான் எப்பொழுதும் நேர்மறையான பலன்களைக் கொடுக்கக் கூடியவர். ஒவ்வொரு மாதமும் பெயர்ச்சியாகும் புத பகவான், நாளை திங்கட்கிழமை அதிகாலை 1:40 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதனால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள் யாரெல்லாம்? என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே புத்திக் கூர்மையுடன் விளங்குவார்கள். ஒரு விஷயத்தில் மட்டும் அல்லாமல் பல விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு ஆர்வத்துடன் இருப்பார்கள். தெளிவான பேச்சால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவார்கள். உங்கள் ராசிக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் போகிறது. இதுவரை எதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தீர்களோ அதில் வெற்றி பெற கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சிறந்த ஆளுமை திறன் கொண்டிருப்பார்கள். எவ்வளவு பேர் இருந்தாலும் அவர்களை சிறப்பாக வழிநடத்தி செல்லக்கூடிய தலைமைத்துவம் இவர்களிடம் இருக்கும்.
உங்கள் ராசிக்கு புதன் பெயர்ச்சியால் கிடைக்கக் கூடிய நன்மைகள் ஏராளம். மேலும், புதிதாக நீங்கள் துவங்க இருக்கும் சில விசயங்களில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காண்பீர்கள். தொலை தூர இடங்களிலிருந்து புதிய பாதைகள் தென்படக்கூடிய வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் தங்களுடைய சாதுரியமான குணத்தால் பலவற்றையும் எளிதாக தன் வசம் இழுத்துக் கொள்வீர்கள். புதன் பெயர்ச்சிக்கு பிறகு இதுவரை நடக்கவில்லையே என்று நினைத்த சில விஷயங்கள் வெற்றிகரமாக நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் பண வரவு சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றங்கள் நிகழும். நீங்கள் தீட்டிய திட்டம் ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்க்கும் பணத்தொகை கிடைக்கப்பெறும். மேலும், கூட்டாளிகளுடன் ஆன பிரச்சனைகள் தீர்ந்து சுமுகமாக செல்வீர்கள். எதிர்பார்ப்பதை விட சிறப்பான லாபத்தை காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றத்துடன் காண்பீர்கள். ஆரோக்கியம் படிப்படியாக சீராகும்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்க இருக்கிறது உங்கள் ராசிக்குப் பெயர்ச்சியாகும் புத பகவான் அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்க போகிறார். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான பகைகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட கூடிய அற்புதமான நாட்களாகவே இருக்கிறது. ஆரோக்கியம் சீராக இருக்கும். புத பகவானை வழிபட்டு வாருங்கள்.

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் நயமாக எதையும் பேசி உங்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்வதில் கில்லாடி. புத்திக்கு அதிபதியாக விளங்கும் புத பகவான் உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய விஸ்வரூப வெற்றியை கொடுக்க இருக்கிறார். மேலும், உழைத்த உழைப்பு பயன்படாமல் என்றும் போவது இல்லை என்பதை உணர்வீர்கள். வருமானம் பன்மடங்கு உயர்ந்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளும் அமைய பெறுவீர்கள். புதனுக்கு உரிய பச்சை நிறத்தை அ டிக்க டி உடுத்திக் கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாக இருக்கிறது புதன் பெயர்ச்சி பிறகு உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டம் பன்மடங்கு பெருகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்பதை விட அனுகூலமான பலன்களை காண இருக்கிறீர்கள் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் இணைந்து அதிக லாபம் காண வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் உங்களுடைய புத்தி கூர்மையால் பல இடங்களில் நற்பெயர் பெற்று கொள்வீர்கள். குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் அனுகூலமான பலன்களை கொடுக்கும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விடா முயற்சி தேவை. சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிக லாபம் காண புத பகவானை வழிபடுங்கள்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். இந்த புதன் பெயர்ச்சி உங்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகளை கலைந்து முன்னேற்ற பாதைக்கு வழி வகுக்கும். தடைப்பட்ட மந்தமான தொழில் கூட வளர்ச்சியுற துவங்கும். உங்களுடைய கூடுதல் பங்களிப்பை கொடுப்பதன் மூலம் சிறப்பான லாபம் காணலாம். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் இதுவரை போராடிக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கான வெற்றியை காணக் கூடிய யோகம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது.

மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் எதையும் திட்டமிட்டு சிந்தித்து செயல் படுபவர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் இவர்கள் செய்வது இல்லை. உங்கள் ராசிக்கு புதன் பெயர்ச்சிக்கு பிறகு அற்புதமான பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தடை பட்ட சில காரியங்கள் வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் அமையும். பெரிய பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் குறித்த விஷயங்களில் அற்புத பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்க்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய தொழில் நுட்பங்களை வாங்கும் யோகம் உண்டு. இதுவரை நீங்கள் அறியாத சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் பாராட்டுகள் கிடைக்கப்பெறும். ஆச்சரியப்படும் வகையிலான செயல்களை செய்து காட்ட இருக்கிறீர்கள். புதன்கிழமை தோறும் புத பகவான் வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் புதன் பெயர்ச்சிக்கு பிறகு நல்ல விஷயங்களை கேட்க இருக்கிறீர்கள். உழைப்பு என்றும் வீண் போவதில்லை என்பதை உணர்வீர்கள். உங்களை கேலி கிண்டல் செய்தவர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உங்கள் நண்பர்களின் உதவி கரம் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரியும். மேலதிகாரிகள் உடைய பாராட்டை பெறுவீர்கள். புதன்கிழமையில் நவக்கிரஹ சந்நிதிக்கு சென்று பச்சை பயிறு தானம் செய்து வழிபட்டு வாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *